Showing posts with label கணினி. Show all posts
Showing posts with label கணினி. Show all posts

Wednesday, July 11, 2012

உங்கள்Gmail கணக்கு hack செய்யப்படுகின்றதா? எளிமையான தீர்வு

தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்வதினால் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை காணமுடிகின்றது. ஆனால் விஞ்ஞானம் தொடர்புடைய அனைத்து துறைகளுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. அது நல்லதுக்கு மற்றும் கேட்டது இரண்டுக்குமே பயன்படுகின்றது.

தகவல் தொழில்நுட்பம் நுகர்வோர்களுக்கு பல வேலைகளை எளிதாக்கிவிடுகின்றது. அவற்றில் முக்கியமான ஒன்று தான் மின் அஞ்சல் (e-mail). தனிப்பட்ட மற்றும் அலுவலக தகவல் பரிமாற்றத்திற்கு மின் அஞ்சல் பயன்படுகின்றது.

தற்போது பெரும்பாலனோர் Gmail-ளை உபயோகம் செய்கின்றனர். அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் இந்த Gmail, hack-செய்ய(திருட)பட்டாள் எப்படி கண்டுபிடிப்பது?
இதற்காகவே Gmail-லுக்குள் login-செய்த பின்னர், homepage-இல கீழ் பக்கம் ஒரு மென்பொருளினை வைத்திருக்கிறார்கள். “Last account activity” என ஆரம்பிக்கும் அந்த வாக்கியத்தின் முடிவில் “Details” என்கிற வார்த்தை இருக்கும், அதன்மேல் கிளிக் செய்யவும். கிளிக் செய்தால் கடந்த பத்து முறை Gmail-ளை பயன்படுத்திய விவரம் கிடைக்கும்.
அதில் முக்கியமாக IP address மற்றும் உலகத்தில் அது எந்த இடத்தில இருகின்றது என்ற தகவல்கள் இருக்கும்.

வீட்டில் வசதி உள்ளவர்கள் தங்கள் இணைய வசதி வழங்கும் நிறுவனத்தின் தொலைபேசி வழி உதவியின் மூலம் தங்கள் கணிணியின் IP address–யை தெரிந்துகொள்ளலாம். அலுவலகத்தில் தங்கள் Network Administrator-ரை கேட்டால் IP address தெரிய வரும்.

“Details”
இல கிளிக் செய்த பின்னர் கிடைக்கும் தகவல்களில் ஏதேனும் சந்தேகம் படும்படியான மாற்றம் தெரிந்தால், அதை உடனே கவனிக்கவும். மாற்றம் இருந்தால் அதற்கு இரண்டு அர்த்தம உண்டு.
ஒன்று யாரேனும் தங்கள் கணக்கை hack ¬செய்திருக்கலாம் அல்லது தங்களின் கணக்கு password-யிணை தெரிந்துகொண்டு வேறு யாரேனும் பயன்படுதிருக்கலாம். சந்தேகம் ஏற்பட்டால் உடனே நடவெடிக்கை எடுப்பது நல்லது!

Tuesday, July 3, 2012

தொலைபேசி இணைப்புக்கும் இணைய இணைப்புக்கும் என்ன வேறுபாடு?

இணையம்-2

இந்த பதிவை எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
இணைய இணைப்பு, வலை உலாவி (புரவுசர்) உங்கள் பக்கம்
இணைய வழங்கி (சர்வர்), வேர்ட் பிரஸ் மென்பொருள் வினவு தளம் இயங்குவதற்கு.
இந்தப் பதிவு பற்றிய விபரத்தை டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் அல்லது தமிழ்மணம் திரட்டியில் பார்த்து வந்திருக்கலாம்
கூகுள் தேடல் மூலமாக வந்து சேர்ந்திருக்கலாம்.
இன்னும் சிலர் ஆர்எஸ்எஸ் ரீடர் மூலம் வந்து சேர்ந்திருக்கலாம்.
பதிவர் வலைப்பதிவை எழுதி வெளியிட, வாசகர்களுக்கு அது கொண்டு சேர்க்கப்பட, டுவிட்டரில் 140 எழுத்துகளுக்குள் எழுதப்படும் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு படிக்கத் தர உலகளாவிய ஒரு கட்டமைப்பு செயல்பட வேண்டியிருக்கிறது. இவற்றை எல்லாம் இயக்குவது யார்? ‘முதலாளித்துவத்தின் கொடைதான் இணையம், வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள்என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?
1970களில் அடித்தளமிடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து கடந்த 5 ஆண்டுகளில் பிரபலமடைந்திருக்கும் சமூக வலைத்தளங்கள் வரை அனைத்தையும் சாத்தியமாக்குவதும் இயக்குவதும் உலகளாவிய பெருந்திரளான மக்கள்தான்.
இணையம் எந்த ஒரு நிறுவனத்துக்கும், அரசாங்கத்துக்கும் சொந்தமானதில்லை.
இணையத்தில் தேடுதல் வசதி ஒற்றை நிறுவனத்தின் பணியினால் மட்டும் உருவானது இல்லை.
சமூக வலைத்தளங்களின் செயல்பாடு அவற்றில் பங்கு பெறும் பயனர்களால்தான் சாத்தியமாகின்றன.
இணையத்தின் தகவல் தொடர்பு முறைமை

இணையம் என்பது கணினி வலைப்பின்னல்களின் வலைப்பின்னல். இதில் எந்த ஒரு கணினி அல்லது கணினி வலைப்பின்னல் மையமானது இல்லை. ஒரு கணினி அல்லது கணினி வலைப்பின்னல் துண்டித்துக் கொண்டாலும் மீதி இருக்கும் பகுதிகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இதுதான் இணையத்தின் அடிப்படை வடிவமைப்பு கோட்பாடு. போர்க்காலத்தில் நாட்டின் ஏதாவது ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும், மற்ற பகுதிகள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 1970களில் உருவாக்கப்பட்டதுதான் இணையம்.

தொலைபேசி இணைப்புக்கும் இணைய இணைப்புக்கும் என்ன வேறுபாடு?

சென்னையிலிருந்து ஒருவர் நியுயார்க்குக்கு ஐஎஸ்டி இணைப்பில் பேசினால், சென்னையில் இருக்கும் தொலைபேசியிலிருந்து அவரது தொலைபேசி இணைப்பகத்துக்கு கம்பி வழியாக சிக்னல் போகும், தொலைபேசி இணைப்பகத்திலிருந்து ஸ்விட்சுகள் மூலமாக அமெரிக்காவின் தொலைபேசி சேவை வழங்கும் அமைப்புக்கு செயற்கைக் கோள் அல்லது கடல் அடி கம்பி வழியாக இணைப்பு ஏற்படுத்தப்படும், அமெரிக்க தொலைபேசி சேவை நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பகத்திலிருந்து நியூயார்க் முனையில் இருக்கும் தொலைபேசிக்கு கம்பி வழியாக இணைப்பு இருக்கும்.

இப்படி சென்னையில் இருக்கும் வீட்டிலிருந்து நியூயார்க்கில் இருக்கும் வீடு வரை நேரடியான ஒன்றுக்கொன்றான இணைப்பு மூலம்தான் தொலைபேசியில் பேச முடிகிறது. இந்த இணைப்புகளில் ஏதாவது ஒரு இடத்தில் தடை ஏற்பட்டாலும் இணைப்பு உடைபட்டு சேவை செயலிழந்து போய் விடும்.
மாறாக, ஒருவர் சென்னையில் இருக்கும் தனது கணினியின் இணைய இணைப்பு மூலம் அமெரிக்காவில் இருக்கும் ஒரு இணைய தளத்துடன் தகவல் பரிமாறிக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சென்னை பயனர், தனது இணைய சேவை நிறுவனத்தின் கணினி வலைப்பின்னலில் ஒரு பகுதியாக இணைந்திருப்பார்.

அந்த வலைப்பின்னல் உலகளாவிய இணையத்தில் இணைந்திருக்கும். கணினியில் இருந்து, அனுப்பப்படும் தகவல் சிறு சிறு பொதிகளாக (பேக்கட்டுகள்) பிரிக்கப்பட்டு, அனுப்பும் கணினி/பெறும் கணினி விபரங்கள் முகவரியாக இடப்பட்டு, அனுப்பப்படும். இதை Internet Protocol (IP) அல்லது இணைய முறைமை என்று அழைக்கிறார்கள்.
இந்த பொதிகள் அனைத்தும் ஒரே, நேரடி தடத்தில் அமெரிக்கா போய்ச் சேருவது இல்லை. ஒவ்வொரு பொதியும் நெரிசல் குறைவான தடங்களில் வலைப்பின்னல்களின் ஊடே பயணிக்கும். அத்தனை பொதிகளும் அமெரிக்க கணினிக்குப் போய்ச் சேர்ந்த பிறகு அவற்றை ஒன்று சேர்த்து அமெரிக்க கணினி தகவலை புரிந்து கொள்ளும். வழியில் ஏதாவது ஒரு தடம் உடைபட்டாலும் மாற்றுத் தடத்தில் பயணித்து இலக்கை அடைந்து விடுகின்றன பொதிகள்.
உதாரணமாக சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லும் தகவலின் சில பொதிகள் சிங்கப்பூர் வழி தடத்திலும் அதே தகவலின் இன்னும் சில பொதிகள் மும்பை வழியான தடத்திலும் பயணிப்பது சாத்தியம்தான்.
 

இணையம்-1


இப்படியாக, உலக கணினி வலையமைப்புகள் அனைத்தும் கை கோர்த்து நிற்பதன் மூலம் உருவாவதுதான் இணையம். யாரும் அதிகார மையத்தில் உட்கார்ந்து கொண்டு இந்த போக்குவரத்தை நிர்வகிப்பது இல்லை.
இணைய தளங்கள் செயல்பட்டுக்கான ஒருங்கிணைப்பு

இணையத்தின் தொழில்நுட்பங்கள், தகவல் கொள்கைகள், பயன்பாடு இவற்றை தினசரி நிர்வாகம் செய்யும் உலகளாவிய அமைப்பு எதுவும் கிடையாது. அந்தந்த பகுதி கணினி வலையமைப்புகள் தமக்கான கொள்கைகளையும் தொழில்நுட்ப வரையறைகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
இன்டர்நெட் புரோட்டகால் முகவரி (ஐபி அட்ரஸ்) மற்றும் இணையதள பெயர் சேவை (டிஎன்எஸ்) இரண்டையும் மட்டும் நெறிப்படுத்த ஐகான் என்ற கூட்டமைப்பும், இன்டர்நெட் புரோட்டகால் (ஐபி) என்பதை தரப்படுத்த ஐஈடிஎப் (இணைய பொறியியல் செயற் குழு) குழுமமும் பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டு கூட்டுறவு முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இணையதள முகவரி சொல்லும் சேவை
பயனர் ஒருவர் தனது வலை உலாவியில் இணைய தளத்தின் முகவரியை அடித்ததும், இணைய தளத்துக்கான ஐபி முகவரி என்ன என்பதை தெரிவிப்பது அந்த உறவு பற்றிய விபரங்களை சேமித்து வைத்திருக்கும் டிஎன்எஸ் அமைப்பு.

இன்ன இணையதளத்துக்கு (உதாரணம் : வினவு.காம்) இன்ன இணைய முகவரி எண் (உதாரணம் : xxx.xxx.xxx.xxx) என்ற உறவு அந்தந்த வகை இணைய தள முகவரிக்கான (.com, .net, .org முதலியன) மூல வழங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும்.
நாம் இணைய இணைப்பு சேவை பெறும் நிறுவனங்கள் (பிஎஸ்என்எல், ஏர்டெல் போன்றவை) இணைய தள முகவரி<-> இணைய எண் முகவரி உறவுக்கான தரவுத் தளத்தை மூல வழங்கிகளிலிருந்து பெற்று தாமும் சேமித்து வைத்து கொள்ளலாம்.

இது போன்று டிஎன்எஸ் தரவுத் தளங்களின் ஆயிரக்கணக்கான பிரதிகள் உலகெங்கிலும் பயன்பாட்டில் இருக்கின்றன. திறமையும் ஆர்வமும் இருந்தால் நீங்கள் கூட இலவசமாக சமூக உருவாக்கத்தில் கிடைக்கும் டிஎன்எஸ் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி இணையதள முகவரி விபரங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஒரு வேளை மூல வழங்கிகளின் சேவை தடைப்பட்டு போனாலும் இணையத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் நகல்களைப் பயன்படுத்தி இணையம் தொடர்ந்து இயங்கும்.

இணையம்-1


இணைய பக்கங்களின் தர வரிசை நிர்ணயம்

வலை தேடுதலை எடுத்துக் கொள்வோம். 1990களின் பிற்பகுதிகளில் ஒரு இணைய பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றை வகைப்படுத்தும் தேடு எந்திரங்கள் செயல்பட ஆரம்பித்திருந்தன.
அந்த காலத்தில் இணைய தளங்களை குறிப்பிட்ட வகைகளின் கீழ் அட்டவணைப்படுத்தி வைப்பதுதான் யாஹூவின் அணுகுமுறையாக இருந்தது. இணைய தளம் நடத்தும் ஒருவர் (வினவு) யாஹூவின் தேடல் சேவைக்குப் போய் தனது தளத்தை சமர்ப்பிக்க வேண்டும். தளத்தை எந்த குறிச்சொல்லின் கீழ் வகைப்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கலாம்.
அதை யாஹூ ஊழியர் ஒருவர் பரிசீலித்து, குறிப்பிட்ட தேடுசொல் எத்தனை முறை தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மதிப்பிட்டு வினவு தளம் எந்த வகையின் கீழ் வரும் என்று முடிவு செய்து யாஹூ தரவுத் தளத்தில் சேர்த்து விடுவார்.
பயனர் ஒருவர் தேட வரும் போது, யாஹூவின் வகைப்பாடுகளை கிளிக்கிக் கொண்டே போய் தான் தேடும் வலைத்தளத்தைப் போய் அடையலாம்! ஆனால், இப்படி ஒரு வணிக நிறுவனமும், சில நூறு அல்லது சில ஆயிரம் ஊழியர்களும் சேர்ந்து வெகுவேகமாக வளர்ந்து வரும் வலைப் பக்கங்களை வகைப்படுத்தி தேடுபவர்களுக்கு கொண்டு சேர்க்க முடியாது என்பது சீக்கிரமே தெரிய வந்தது. இந்த சிக்கலான உலகளாவிய பணிக்கு உலகளாவிய சமூக உழைப்பை ஈடுபடுத்த வேண்டியிருந்தது.
கலிபோர்னியாவின் ஸ்டேன்போர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த செர்ஜி ப்ரின், லேரி பேஜ் என்ற ஆராய்ச்சி மாணவர்கள் இணைய பக்கங்களை வரிசைப்படுத்தும் சமூக அடிப்படையிலான முயற்சியை ஆரம்பித்தனர். இணைய பக்கங்களின் வரிசை மதிப்பை அவை மற்ற இணைய பக்கங்களுடன் கொண்டிருக்கும் உறவின் அடிப்படையில் தீர்மானிக்கும் உத்தியை அவர்கள் பரிந்துரைத்தனர்.
ஒவ்வொரு சொல்லுக்கும் பொருத்தமான இணைய பக்கங்களை திரட்டி அவற்றுக்கு தரவரிசை அளித்து அந்த சொல்லைத் தேடுபவர்களுக்கு தரவரிசையின்படி பக்கங்களை காட்டலாம்என்ற அடிப்படையில் தரவரிசையை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை வரையறுத்தார்கள்.
ஒரு இணைய பக்கத்தின் தரவரிசையை யார் நிர்ணயிப்பார்கள்? மற்ற இணைய தளங்களும், தேடும் பயனர்களும்தான்.
1. ‘இணையம்என்ற குறிச்சொல் வினவு தளத்தின் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இணையம்என்ற குறிச்சொல்லுக்கு எதிராக அந்த கட்டுரையின் இணைய முகவரி (யுஆர்எல்) சேர்க்கப்பட்டு விடும்.
2. மற்ற இணைய தளங்களிலிருந்து அந்த கட்டுரைக்கு எத்தனை இணைப்புகள் (லிங்குகள்) கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து அதன் தரவரிசை நிர்ணயிக்கப்படும். அதாவது, கட்டுரையின் தரவரிசை, அந்த கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பொறுத்து மட்டுமின்றி, மற்ற தளங்களிலிருந்து தரப்பட்டுள்ள இணைப்புகளையும் பொறுத்து உள்ளது.
3. அப்படி கொடுக்கப்பட்ட இணைப்புகளில் இணையம்என்ற குறிச்சொலுக்கு எதிராக அதிக தரவரிசை மதிப்பீடு உடைய இணைய தளங்களிலிருந்து கொடுக்கப்படும் இணைப்புகள் அதிக மதிப்புடையனவாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இத்தகைய அடிப்படையில் இணையத்தின் கோடிக்கணக்கான பக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டு தரவு தளத்தில் சேமிக்கப்படுகின்றன. இணையம்என்ற சொல்லை தேடுபவருக்கு தர வரிசையின்படி பக்கங்கள் காண்பிக்கப்படுகின்றன.
4. ‘இணையம்என்ற சொல்லை தேடிய பயனர் குறிப்பிட்ட பக்கத்தை கிளிக் செய்து போனால், அவருடைய தேர்வு அந்த பக்கத்துக்கு கூடுதல் மதிப்பெண்களை ஈட்டித் தரும். இது போன்று ஆயிரக்கணக்கான பயனர்கள் தமது தேர்வுகள் மூலம் பக்க வரிசைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதாவது தேடுதல் முடிவுகளின் பக்க வரிசை,
அ. பிற இணைய தளங்களிலிருந்து கொடுக்கப்படும் இணைப்புகளாலும்
ஆ. தேடுதல் சேவையை பயன்படுத்தும் பயனர்களாலும்
தீர்மானிக்கப்படுகின்றன.
இணையமும், இணைய தளங்களை தேடி தேவையான விபரங்களை பெறும் முயற்சியும் உலகம் முழுவதும் பரந்திருக்கும் மக்களின் கூட்டு முயற்சியில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த தேடுதல் அமைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கி, இயக்கி, பராமரிக்கும் தேவையான பணியை வணிக நிறுவனங்கள் செய்கின்றன. ஆனால், பயனர்களும் இணையதள உருவாக்குனர்களும்தான் அது செயல்படுவதை சாத்தியமாக்குகிறார்கள். சமூகத்தின் கட்டமைப்பு முதலாளித்துவ அடிப்படையில் இருப்பதால் மட்டுமே முதலாளித்துவ நிறுவனங்கள் பராமரிப்புப் பணியில் ஈடுபடுகின்றன.
கூகுளின் படங்கள் தேடும் சேவையை எடுத்துக் கொள்வோம்.
ஒரு புகைப்படம் அல்லது வரைபடத்தை எந்த குறிச்சொல்லுடன் இணைத்து வைப்பது? படத்தை தனது இணைய தளத்தில் இணைத்திருக்கும் நிறுவனம் அல்லது நபர் சில சொற்களை சேர்த்திருக்கலாம்.

ஆனால் அதை மட்டும் நம்பியிராமல் பரந்து பட்ட மக்களின் கணிப்பின் அடிப்படையில் படத் தேடலை உருவாக்க கூகுள் பட குறிச்சொல்லிடுதல்‘ (இமேஜ் லேப்லர்) என்ற விளையாட்டை உருவாக்கியது. இரண்டு ஆட்டக் காரர்களுக்கு ஒரே படம் (சச்சின் டெண்டுல்கரின் புகைப்படம் என்று வைத்துக் கொள்வோம்) காண்பிக்கப்படும். அவர்கள் இருவரும் வேறு எந்த வழியிலும் தகவல் பரிமாறிக் கொள்ள முடியாது.

அந்தப் படம் எந்தெந்த சொற்களை (சச்சின், டெண்டுல்கர், கிரிக்கெட், இந்தியா) குறிக்கிறது என்று எதிராளி ஊகிப்பார்என்று இருவரும் ஊகிக்க வேண்டும். எதிராளி ஊகித்த அதே சொல்லை உள்ளிட்டால் புள்ளிகளை ஈட்டலாம்.
அடுத்த 5 ஆண்டுகளில் பல ஆயிரக் கணக்கானோர் இந்த விளையாட்டை விளையாடியதன் மூலம் இலட்சக்கணக்கான படங்களுக்கு பொருத்தமான தேடுதல் சொற்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டதுதான் கூகுளின் இன்றைய படத் தேடல் சேவை.

சமூக வலைத்தளங்களின் பொருளாதார அடிப்படை

பேஸ்புக், டுவிட்டர், கூகுள்+ போன்ற சமூக வலைத்தளங்களின் மதிப்பை உருவாக்குவது அவற்றைப் பயன்படுத்தும் பயனர்கள்தான்.
1. கூகுள் நிறுவனம் வழங்கும் இணைய தேடுதல் சேவையின் முடிவுகள் காட்டப்படும் போது விளம்பரங்களும் தனியாக காட்டப்படுகின்றன. பயனர் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்து விளம்பரதாரரின் தளத்துக்குப் போனால் கூகுள் விளம்பரதாரரிடமிருந்து வருமானம் ஈட்டுகிறது.
2. இந்த விளம்பரதாரர்களை தேடிப் பிடித்து விற்கும் பணியைக் கூட கூகுள் நிறுவன ஊழியர்கள் செய்ய வேண்டியதில்லை.
குறிப்பிட்ட தேடும் சொல்லுக்கு தமது விளம்பரத்தைக் காட்டுவதற்கு ஆயிரக்கணக்கான சிறு-நடுத்தர-பெரிய விளம்பரதாரர்கள் கூகுள் ஆட்வேர்ட்ஸ் மூலம் போட்டி போடுகிறார்கள். உதாரணமாக, ‘சென்னை வீடு வாடகைக்குஎன்ற பதம் தேடப்படும் போது தனது விளம்பரம் காட்டப்பட ஒரு கிளிக்கிற்கு எவ்வளவு கட்டணம் தரத் தயார் என்று ஒருவர் தனது ஏலத் தொகையை சமர்ப்பிக்க வேண்டும். அதிக தொகை சொல்பவரின் விளம்பரம் முதலில் காட்டப்படும்.
3. இந்த விளம்பரங்களை காட்டுவதற்கான களத்தை விரிவாக்க புதிய புதிய சேவைகளுக்கான தளங்களை உருவாக்குகிறது கூகுள். இலவசமாகவலைப்பதிவுகள், வீடியோ சேவை, புகைப்படங்கள் சேவை போன்றவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது. ஒரு வலைப்பதிவில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்துக்குப் பொருத்தமான விளம்பரங்கள் (எழுப்பட்டிருக்கும் சொற்களின் அடிப்படையில்) அதன் பக்கங்களில் காட்டப்படுதற்கு விளம்பரதாரர்கள் போட்டி போடுவார்கள். அந்த விளம்பரங்களை கிளிக் செய்து போனால் அவர்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்துகிறார்கள்.
அந்த வருமானத்தின் ஒரு பகுதியை வலைப்பதிவர்களுடன், வீடியோ உருவாக்குனர்களுடன் பகிர்ந்து கொள்கிறது கூகுள். இதற்காக ஆட்சென்ஸ் என்ற திட்டத்தை நடத்துகிறது.
4. ‘இலவசமாகவழங்கும் மின்னஞ்சல் சேவையில், பயனருக்கு வந்திருக்கும் மின்னஞ்சலை படித்துப் பார்க்கும் கூகுளின் மென்பொருள் மூலம் அதில் இருக்கும் சொற்களுக்குப் பொருத்தமான விளம்பரங்கள் ஆட்வேர்ட்ஸ் மூலம் காண்பிக்கப்படுகின்றன. கிளிக்குகளுக்கு வரும் வருமானம் முழுமையாக கூகுளுக்குப் போய்ச் சேருகிறது.
கூகுளின் இந்த வணிக மாதிரியின் இன்னும் விரிவான வெற்றிகரமான செயல்பாடுதான் பேஸ்புக். நெய்க்கு தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமாஎன்று தர்க்கம் செய்த மாணவன், ‘பேஸ்புக்குக்கு பயனர்கள் ஆதாரமா, பயனர்களுக்கு பேஸ்புக் ஆதாரமாஎன்று கேட்டிருந்தால் பயனர்கள் இல்லாமல் பேஸ்புக் இல்லை என்று அறுதியாக சொல்லியிருப்பான்.
மைதானத்தில் பெரிய பந்தல் போட்டு, ஊரெங்கும் நோட்டிஸ் ஒட்டி பிரபலமாக்குவதுதான் பேஸ்புக்கின் வேலை. கூட்டம் சேர சேர பந்தலை விரிவுபடுத்துவது, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது இவைதான் தொடரும் அதன் பணிகள். கூட்டமாக சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளத்தான் வந்திருக்கிறார்கள்.
சிறு சிறு குழுக்களாக குழுமிக் கொள்கிறார்கள். ஒரு குழுவில் நடனம் நடக்கிறது, ஒரு குழுவினர் நாடகம் போடுகின்றனர், ஒருவர் பாட்டு பாடுகிறார், ஒருவர் உரையாற்றுகிறார், ஒருவர் சமையல் செய்கிறார், ஒருவர் குடிநீர் வழங்குகிறார். கூட்டத்தை நடத்துவது வந்திருக்கும் மக்கள்தான்.
அப்படி கூடும் மக்களுக்கு பொருட்களை விற்க கடை போட வருமாறு வணிகர்களை வரவழைத்து கட்டணம் வசூலித்து வருமானம் பார்ப்பதும் பேஸ்புக்கின் வேலைகளில் ஒன்று.
பயனர்களின் புகைப்படங்கள், கருத்துரைகள், தொடர்புகள் அனைத்தும் பேஸ்புக்குக்கு பணம் சம்பாதித்துத் தரும் கறவை மாடுகள்தான். பேஸ்புக்கில் சேர்க்கப்படும் ஒவ்வொரு புகைப்படமும், அதில் எழுதப்படும் ஒவ்வொரு கருத்துரையும், அதில் தொடங்கப்படும் ஒவ்வொரு விவாதக் குழுவும், அதில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு விளையாட்டும் பேஸ்புக்கின் விளம்பர சந்தையை விரிவாக்கி அதன் வருமானத்தை பெருக்குகின்றன. அந்த வருமானத்தில் ஒரு பகுதியின் மூலம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுபவைதான் அதன் சேவைகள்.
இப்படி தான் பராமரிக்கும் சேவையை பயன்படுத்துகின்ற பயனர்களை பொதிந்து விற்று சம்பாதித்ததுதான் பேஸ்புக்கின் சென்ற ஆண்டு வருமானமான 1 பில்லியன் டாலர் (சுமார் 5,000 கோடி ரூபாய்). அந்த வருமானத்தின் அடிப்படையில் நடக்கும் பங்குச் சந்தை சூதாட்டம்தான் பேஸ்புக் பங்குகளை வெளியிடும்போது தீர்மானிக்கப்பட்ட அதன் மதிப்பான 100 பில்லியன் டாலர் (சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்).
இணையமும் அதில் கிடைக்கும்இலவசசேவைகளும் உலகம் முழுவதும் வசிக்கும் மக்கள் தமது சமூக உழைப்பால் உருவாக்கும் சாத்தியங்கள்தான். அதே போல நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் சேவைகளும் சமூக உழைப்பின் மூலமே நம்மை வந்தடைகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Thursday, May 10, 2012

ஆங்கிலத்தில் மின்னஞ்சலா? இனி உங்க மொழியிலேயே படிக்கலாம் – ஜி மெயிலின் புது வசதி


Google brings automatic e-mail translation to Gmail

ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளது.
ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். மின்னஞ்சலின் மேற்பகுதியில் இருக்கும் டிரான்ஸலேட்என்கிற பொத்தானை இயக்குவதன் மூலம் தேவையான மொழிக்கு மின்னஞ்சலை மொழிபெயர்க்க முடியும் என்று கூகுள் டிரான்ஸலேட்சேவையின் மேலாளர் ஜெஃப் சின் தெரிவித்தார்.
இந்தத் தகவல் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னதாக கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம்பெறும் லேப்ஸ்பகுதியில் வழங்கப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சேவைக்கு ஜிமெயில் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், ஜிமெயிலிலும் இதைப் பயன்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.

Saturday, March 17, 2012

இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த

கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயில் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும்


சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் லேப்டாப்பில் இணைய இணைப்பு இருக்காது அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.
ஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில்களை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்பலாம் மற்றும் ஆன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே
  • இதற்க்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும்.
  • அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.
  • இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.
  • இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும்.

  • இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் ஈமெயில் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஆப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.
  • அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் ஈமெயில் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மெயில்களும் காட்டும்.
  • இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மெயில்களும் காட்டும் அந்த மெயிலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மெயிலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மெயிலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.
  • மற்றும் ஆன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது கீழே பாருங்கள்.
  • இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.

Friday, March 16, 2012

ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி?

எவ்வளவு தான் பாதுகாப்பாக நாம் ஜிமெயிலை உபயோகித்தாலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் பாஸ்வேர்ட்களை அறிந்து பலரின் ஜிமெயில் கணக்கை முடக்கிவிடுகின்றனர். கூகுள் அறிக்கையின் படி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பாஸ்வேர்ட்கள் திருடப்படுகிறதாம். ஜிமெயில் சேவைகளுக்கு அனைத்திற்கும் ஒரே ஐடி, பாஸ்வேர்ட் உபயோகிப்பாதால் ஒரு கடவுச்சொல் திருடப்பட்டால் கூட பல கூகுள் சேவைகளையும் உபயோகிக்க முடிவதில்லை. இந்த ஆபத்திலிருந்து காக்க உங்களின் ஜிமெயில் கணக்கு திருடப்படாமல் பாதுகாக்க 2-Step Verification என்ற வசதி கூகுளில் உள்ளது. இதனை ஆக்டிவேட் செய்வது எப்படி என கீழே உள்ள வழிமுறையை பயன்படுத்துங்கள்.

இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் புதிதாக ஒரு கணினியில் இருந்து உங்கள் கணக்கில் லாகின் செய்யும் பொழுது சரியாக பாஸ்வேர்ட் கொடுத்தாலும் லாகின் ஆகாது உங்கள் மொபைலுக்கு ஒரு Verification Code வரும் அதனை கொடுத்தால் மட்டுமே லாகின் ஆக முடியும். லாகின் செய்யும் பொழுது IP மாறினால் இந்த verification code கொடுத்தால் மட்டுமே ஆக்டிவேட் ஆகும். இதனால் உங்கள் கூகுள் கணக்கு பாதுகாக்க படும்.

இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதற்கு முன் உங்கள் கணினியில் CCleaner பயன்படுத்தி அனைத்தையும் சுத்தம் செய்து விடவும். CCleaner லேட்டஸ்ட் வெர்சன் இல்லாதவர்கள் CCleaner v3.15 இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்.

இந்த வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • முதலில் உங்கள் கூகுள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து இந்த லிங்கில் 2 Step Verfication கிளிக் செய்யுங்கள்.

  • அடுத்து வரும் விண்டோவில் உள்ள Start setup என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்து ஒரு விண்டோ வரும் அதில் உங்கள் நாடு மற்றும் மொபைல் என்னை கொடுத்து Send Code என்பதை அழுத்தினால் உங்கள் மொபைலுக்கு ஒரு SMS வரும் அதில் உள்ள verfication code கொடுத்து Verify என்பதை அழுத்தவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.

  • இவைகளை சரியாக கொடுத்த பின்னர் கீழே உள்ள உள்ள Next பட்டனை அழுத்தவும். அடுத்து இன்னொரு விண்டோ வரும் அதில் உள்ள TURN ON 2-STEP VERIFICATION என்பதை அழுத்தினால் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும்.

  • உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் Backup Phone Number , Printable Codes என்ற மேலும் இரண்டு வசதிகள் இருக்கும்.
Backup Phone number:
ஒருவேளை மேலே நீங்கள் கொடுத்த போன் நம்பர் வேலை செய்யும் நிலையில் இல்லை என்றால் verification Code பெறுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம் அதனை தவிர்க்க மற்றொரு மொபைல் என்னை கொடுத்து இதில் சேமித்து வைத்து கொண்டால் ஒரு மொபைல் வேலை செய்யவில்லை என்றாலும் மற்றொரு மொபைலில் verification code பெறலாம். அதிலுள்ள Add Phone number கொடுத்து மற்றொரு மொபைல் எண்ணையும் SAVE செய்யுங்கள்.

Save கொடுத்து விட்டால் அடுத்த மொபைல் எண்ணும் உங்கள் கணக்கில் சேர்ந்து விடும்.

Printable backup codes
ஒருசில நேரங்களில் இந்த இரண்டு மொபைல் எண்களும் வேலை செய்யாத நேரத்தில் அவசரத்தில் உதவுவதற்காக ஒரு 10 verification code கொடுத்து இருப்பார்கள் அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொண்டால் இது போன்ற சமயங்களில் உபயோகிக்கலாம். இந்த ஒவ்வொரு கோடிங்கும் ஒரு முறை தான் உபயோகிக்க முடியும்.


print எடுத்து உங்கள் பாக்கெட்டில் வைத்து கொண்டால் அவசரத்தில் உதவும். அல்லது Save to test file என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியிலும் சேமித்து கொள்ளலாம். ஒருவேளை பத்து கொடிங்கையும் உபயோகித்து விட்டால் Generate new codes கொடுத்து புதிய கோடிங் எடுத்து கொள்ளலாம்.

அவ்வளவு தான் உங்கள் கணக்கிற்கு 2-Step Verification வசதியை ஆக்டிவேட் செய்தாச்சு இனி உங்கள் கணக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

டிஸ்கி: நவீன தொழில்நுட்பத்தில் இந்த வசதி ஆக்டிவேட் செய்திருந்தாலும் ஒரு சில கணக்குகள் திருடப்படுகிறது.

உஷார்: 2011-ல் அதிகம் நடைபெற்ற பத்து இணைய மோசடிகள் [Infographic]

இன்டர்நெட் உலகம் முழுக்க முழுக்க இணையதளங்களால் ஆனது. எல்லாமே சுலபமானது இந்த இன்டர்நெட் உலகத்தினால். வெளிநாட்டில் இருப்பவருக்கு பணம் அனுப்ப வேண்டுமா ஒரே நிமிடத்தில் அனுப்பி விடலாம், ஏதாவது செய்தி அனுப்ப வேணுமா ஒரு சில வினாடிகளில் அனுப்பி விடலாம். வெளிநாட்டில் இருப்பவரை பார்த்து கொண்டே பேசலாம் இப்படி ஏராளமான வசதிகள் சாத்தியமானது இந்த இன்டர்நெட்டினால் தான். எந்த அளவு இதில் நல்ல விஷயங்கள் இருக்கின்றனவோ அதை விட இரு மடங்கு கெட்டதும் உள்ளது.
 
குறிப்பாக ஆன்லைன் மோசடி(Online Scam). ஆன்லைன் மோசடியில் பலவகைகள் உண்டு பரிசு விழுந்துள்ளது என ஈமெயில் வரும், உங்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியில்லை ஆதலாம் இந்த படிவத்தை சரியான விவரங்களுடன் பூர்த்தி செய்யவும் என்று வரும், அல்லது வெளிநாட்டில் ஆள் இல்லாத சொத்து உங்களுக்கு வேண்டுமா என்று இப்படி ஏதாவது ஒரு வகையில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான இணைய மோசடிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

இணைய மோசடிகளுக்கு மிக முக்கியகாரணம் மக்களின் பேராசையும், அறியாமையும் தான். இப்படி 2011இல் அதிக அளவு நடைபெற்ற பத்து வகையான இணைய மோசடிகளை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
 
பிரபல இணையதளமான bbb இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு உள்ளது. ஆகவே நண்பர்களே மேலே கூறிய அனைத்து வகையிலும் ஹாக்கர்கள் உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம் ஆகவே உஷாராக இருக்கவும்.

Thursday, March 15, 2012

கணினியில் உங்களின் முக்கியமான பாஸ்வேர்ட்களை கவனமாக பாதுகாக்க - KeePass Safe2.18

போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த உலகில் ஹாக்கிங் செயல்களில் இருந்து உங்கள் கணக்குகளை பாதுகாக்க மிகவும் கடினமான கடவுச்சொற்களை உங்கள் கணக்குகளுக்கு கொடுத்து இருப்பீர்கள். இது போல ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச்சொற்களை கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது இயலாத காரியம்.

ஏதாவது ஒரு கணக்கை ஒரு வாரம் கழித்து ஓபன் செய்தால் ஒரு சிலருக்கு சுத்தமாக அந்த பாஸ்வேர்ட் மறந்து விடும். ஒரே பாஸ்வேர்ட் கொடுத்தாலும் ஹாக்கிங் பிரச்சினை வெவ்வேறு பாஸ்வேர்ட் கொடுத்தாலும் மறந்து விடும் பிரச்சினை என ஒரே பிரச்சினையாக உள்ளதா உங்களுக்காகவே ஒரு பயனுள்ள இலவச மென்பொருள் உள்ளது.


இந்த மென்பொருளில் உங்களின் அனைத்து பாஸ்வேர்ட்களையும் சேமித்து அனைத்திற்கும் சேர்த்து ஒரே மாஸ்டர் பாஸ்வேர்ட் கொடுத்து கொள்ளலாம். அந்த மாஸ்டர் பாஸ்வேர்ட் மட்டும் ஞாபகம் வைத்து கொண்டால் போதும் அனைத்து பாஸ்வேர்ட்களையும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியதில்லை.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
  • நம்முடைய பாஸ்வேர்ட்களை மற்றவர்கள் பார்க்க முடியாதவாறு மிகவும் கவனமாக பாதுகாக்கும்.
  •  
  • அனைத்து பாஸ்வேர்ட்களுக்கும் பதிலாக ஒரே மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் ஞாபகம் வைத்து கொண்டால் போதும் மற்றவைகளை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
  •  
  • யாரும் ஹாக் செய்ய முடியாத கடினமான கடவு சொற்க்களை இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.
  •  
  • குறிப்பிட்ட ஒரு பைலை மாஸ்டர் பாஸ்வேர்டாக தேர்வு செய்யும் வசதி.
  • பாஸ்வேர்ட்களை ஈமெயில்,விண்டோஸ்,இன்டர்நெட் என தனிதனி பிரிவுகளாக சேமித்து கொள்ளும் வசதி.
  •  
  • 2MB அளவே உடைய மிகச்சிறந்த ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும்.
  •  
  • Username கொடுத்தால் பாஸ்வேர்ட் தானாகவே வரும் Auto-type வசதி உள்ளது. மற்றும் இந்த மென்பொருளில் இருந்து பாஸ்வேர்டை காப்பி செய்து இணையத்தில் பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
  •  
  • போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது. உபயோகித்து பாருங்கள் உங்களுக்கே புரியும் இதன் பயன்கள்.

KeePass உபயோகிப்பது எப்படி:
  • முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தால் வரும் ZIP பைலை Extract செய்து Keepass என்ற பைலை ஓபன் செய்யுங்கள்.
  •  
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள New என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் உங்களின் Master Password தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • மாஸ்டர் பாஸ்வேர்ட் தேர்வு செய்ததும் அடுத்து கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உங்களின் பாஸ்வேர்ட் வகையை தேர்வு செய்து கொண்டு Add Entry என்ற பட்டனை அழுத்தி உங்கள் பாஸ்வேர்டை சேமித்து கொள்ளலாம்.
  •  
  • இதே முறையில் உங்களையுடைய அனைத்து பாஸ்வேர்ட்களையும் இந்த மென்பொருளில் சேமித்து கொள்ளுங்கள்.
  •  
  • மற்றும் இந்த மென்பொருள் மூலம் மிக கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கலாம். இதற்கு Tools - Password generate சென்று கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ளலாம்.
  • இதன் மூலம் உருவாக்கும் பாச்வேர்ட்கள் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய- KeePass2.18