சுயதொழில் தொடங்க அரசு
மானியத்துடன் வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்படும் என திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ
தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி
சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சமும், சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரம் சார்ந்த
நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சமும் வங்கிகளில் அதிகப்பட்ச கடன் தரப்படும்.
இத்திட்டத்துக்கான
மதிப்பீட்டில் 15 சத வீதம் வரை மானியமாக தரப் படும். வயது 18க்கு மேல் 35க்குள்
இருக்க வேண்டும். சிறப்பு பிரிவுகளான தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கிய
வகுப்பினர், மகளிர், மாற்றுத்திறனாளிகள், முன் னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர், திருநங்கைகள் ஆகி யோர் 45 வயது வரை
விண்ணப்பிக்க லாம். குறைந்தப்பட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருவாய் ரூ.1.5 லட்சத்துக்கு
மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக சாலையிலுள்ள மாவட்ட
தொழில்மைய பொது மேலாளரிடம் பெற்று ஜூலை 31ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment