பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் சாதனை
புரிந்தமாணவர்கள்
2 பேர் முதலிடம்
பெரம்பலூர் தனலட்சுமிசீனிவாசன் தமிழ்வழிக்கல்வி
மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது யூனுஸ். இவர் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1200-க்கு 1175 மதிப்பெண்
பெற்றும், பெரம்பலூர்
ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். சக்திமுருகன் 1200-க்கு 1175 மதிப்பெண்
பெற்று பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
லெப்பைக்குடிகாட்டை சேர்ந்த முகமது யூனுஸின் தந்தை
முகமது ஜக்காரியா பர்னிச்சர் கடையில் வேலைபார்த்துவருகிறார். இவருக்கு தம்பி தங்கை
உள்ளனர். முகமது யூனுஸ் தனது சாதனை
குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் எனது குடும்ப ஏழ்மையை உணர்ந்து படித்தேன்.
பள்ளி விடுதியில் ஆசிரியர்கள் கொடுத்த இடையறாத ஊக்கத்தால் மாவட்ட அளவில்
ரேங்க்பெறமுடிந்தது, மேற்கொண்டு
எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தால் மருத்துவம்பயில்வேன். இல்லை என்றால் என்ஜினியரிங்
படிக்கவிரும்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சக்திமுருகன்
இதேபோல மாவட்ட முதல் ரேங்க் பெற்ற மற்றொரு
மாணவர் எஸ்.சக்திமுருகன் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை
சங்கர், மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இளநிலை வரைதொழில்அலுவலராகவும், தாய் முருகராணி
மருவத்தூரில் உள்ள ïனியன்
தொடக்கப்பள்ளியில் ஆசிரியை ஆகவும் பணிபுரிந்துவருகின்றனர்.
தனது சாதனை குறித்து சக்திமுருகன்
நிருபர்களிடம் கூறியதாவது:-
இரவில் சற்று கூடுதல் நேரம் எடுத்தும், அதிகாலையில்
எழுந்தும் படித்தேன். பள்ளியில் பொதுத்தேர்வு சமயத்தில் 2 மாதத்திற்கு முன்னதாக
அடிக்கடி தேர்வு எழுதவைத்தனர். கட்டாயம் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் கிடைக்கும்
என்று எதிர்பார்த்தேன். ஆனால் மாவட்ட அளவில் ரேங்க் பெற்றுள்ளது மகிழ்ச்சி
அளிக்கிறது. நான் மருத்துவம் பயின்று மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு சக்திமுருகன் தெரிவித்தார். சக்திமுருகனுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா
கல்விக்குழும தலைவர் சிவசுப்ரமணியன், செயலாளர் விவேகானந்தன், பள்ளி முதல்வர் கோமதி, துணை முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டு
தெரிவித்தனர்.
பட்டுராஜ்
தனலட்சுமிசீனிவாசன் தமிழ் வழிக்கல்வி மேல்நிலைப்பள்ளி
மாணவர் பட்டுராஜ் 1200-க்கு 1174 மதிப்பெண்
பெற்று மாவட்ட அளவில் 2-வது ரேங்க்
பெற்றார். மண்ணச்சநல்லூர் தாலுகா எதுமலையை சேர்ந்த பட்டுராஜின் பெற்றோர்
குழந்தைவேல்-சிங்கராணி. விவசாய குடும்பத்தை சேர்ந்த பட்டுராஜ் பள்ளி விடுதியில்
தங்கி படித்துள்ளார். தினமும் அதிகாலை எழுந்து படித்தேன். சிறுவினாக்களை
தெளிவாகவும், பெரியவினாக்களை
சரியாகவும் எழுத ஆசிரியர்கள் கொடுத்த உற்சாகத்தாலும் மாவட்ட அளவில் 2-வது
ரேங்க்பெறமுடிந்தது. இதனைத்தொடர்ந்து மருத்துவம் பயில விரும்புகிறேன்.
இவ்வாறு பட்டுராஜ் தெரிவித்தார்.
3-வது ரேங்க்
தனலட்சுமிசீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சி. மாதவன் 1200-க்கு 1173 மதிப்பெண்
பெற்று மாவட்ட அளவில் 3-வது இடத்தை
பெற்றுள்ளார். இவர் அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா உஜ்ஜினி கிராமத்தை
சேர்ந்தவர். இவரது பெற்றோர் சின்னதுரை-வளர்மதி. விவசாய குடும்பத்தை சேர்ந்த மாதவன்
எம்.பி.பி.எஸ். பயில ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்
No comments:
Post a Comment