பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சில மாணவர்கள் தங்களது தேர்வு முடிவிலோ
அல்லது மதிப்பெண்ணிலோ தவறு இருக்கலாம் என்று கருதினால் விடைத்தாள் நகல் பெறலாம்.
அல்லது மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பெற 25ம் தேதி 5 மணி வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விண்ணப்பங்கள் 5 இடங்களில்
அளிக்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை
மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை(தெற்கு) காந்தி இர்வின் சாலை, எழும்பூர்.
மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் (மத்திய சென்னை), அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.
மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (கிழக்கு), ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு.
மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (வடக்கு), டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை
மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி), புதுச்சேரி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத்
தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் விற்பனை
செய்யப்படும்
ஆனால்,சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுத்துறை
அலுவலகத்திலோ அல்லது சென்னை அரசு தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் அலுவலகத்திலோ
விண்ணப்பங்கள் வழங்கப்படாது. இவ்வாறு, அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சில மாணவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகல் கோரியோ விண்ணப்பிக்க
விரும்பலாம். அவர்களுக்கு எதற்கு எவ்வளவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று
தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
விடைத்தாள் நகல் பெற
மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு ஒவ்வொரு தாளுக்கும் 550 ரூபாய்
இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 275 ரூபாய்.
மறுகூட்டல்
மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 305 ரூபாய்
இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 205 ரூபாய்.
மறு மதிப்பீடு
விடைத்தாள் நகல் பெற்ற பிறகு 5 நாட்களுக்குள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மொழி மற்றும் ஆங்கில மொழிப் பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 1,010 ரூபாய்
இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 505 ரூபாய்.
விடைத்தாள் நகல்
மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையை, தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு
வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில், Director of Government examinations, Chennai 6 என்ற பெயரில் எடுக்கப்பட்ட வங்கி
வரைவோலையை (டிடி) ஒப்படைத்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் விண்ணப்பங்கள் பெற்ற அலுவலகங்களில் மட்டுமே
நேரில் ஒப்படைக்க வேண்டும என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment