Wednesday, May 30, 2012

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் ஆக அடிப்படைத் தகுதிகள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் என்கின்ற பதவிகளைக் கேட்டாலே அந்தப் பதவி வகிப்பவர்களை வியந்து நோக்கி வருகிற இளைஞரா நீங்கள்? அந்தப் படிப்பை படித்துத் தேறி "அது போன்ற பதவிகளை நாமும் அடைய முடியுமா' என நினைத்ததுண்டா? நிச்சயம் உங்களால் முடியும்! இதோ - சிவில் சர்வீஸ் தேர்வுகளை சுலபமாகக் கையாளும் வழிகள் இங்கே
தங்களுக்குள்ள வானளாவிய அதிகாரத்தின் மூலம் நேர்மையாகவும், பொதுமக்களுக்கு சேவை புரிவதையே கடமையாகவும் கொண்டு செயல்பட்டு, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அதிகாரிகளைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம் அல்லவா? இத்தகைய உயர் அதிகாரிகளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. இத்தேர்வைச் சந்திக்க நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் நான்கு லட்சம் மாணவர்கள் தயார் ஆகிறார்கள்.

67,000 கிலோ லிட்டர் டீசலுடன் கப்பல் சென்னை வந்தது

 67 000 Kl Diesel Sent Chennai Through Ship
சென்னையில் ஏற்பட்டுள்ள டீசல் பற்றாக்குறையைப் போக்க கப்பல் மூலம் 67,000 கிலோ லிட்டர் டீசல் வந்துள்ளது. இதையடுத்து இன்று இரவுக்கு மேல் டீசல் தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 என்று பெட்ரோலிய நிறுவனங்கள் உயர்த்தியது முதலே துயரம் தொடங்கி விட்டது. விலை உயர்வுக்கு முதலில் மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இதனால் மத்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை. இந்த நிலையில்தான் பெட்ரோல்
, டீசல் பறறாக்குறை என்ற புதிய பிரச்சினை கிளம்பியது.

சென்னையில் கடந்த 5 நாட்களாக இருப்பு இல்லை என்ற அறிவிப்பு போர்டு தான் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் முன்பு காட்சி அளிக்கிறது. இது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பங்க்குகளில் 50-க்கும் குறைவான பங்க்குகளே நேற்று இயங்கின. மற்றவை எல்லாம் மூடப்பட்டு விட்டன. சென்னை நகரில் தொடங்கிய இந்த பங்க் அடைப்பு புறநகர்களுக்கும் பரவி அங்கும் ஏராளமான பங்குகளை மூடி விட்டனர்.

பெட்ரோலுக்காக வாகன ஓட்டிகள் அங்கும்
, இங்கும் அலைந்து திரிய நேரிட்டுள்ளது. திறந்திருந்த சில பங்குகளிலும் கூட நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைப பார்க்க முடிந்தது.

5 நாட்களாக தொடரும் இந்த பிரச்சினைக்கு எப்போது முடிவு வரும் என்று தெரியவில்லை. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தை கேட்டால்
, எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாததால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர். இருப்பினும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டிற்கான உண்மையான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.

ஆனால் பெட்ரோலிய நிறுவனங்கள் வேண்டும் என்றே இந்த செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். விலை ஏற்றத்தை எதிர்த்த மக்கள் வாயிலிருந்து
, விலையை வேண்டுமானால் ஏற்றி விட்டுப் போ, ஆனால் பெட்ரோல் தராமல் இருக்காதே என்ற வார்த்தை வர வேண்டும் என்பதற்காகவே இப்படி அவர்கள் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விலை ஏற்றப்படுவதற்கு முதல் நாள் வரை பெட்ரோல்
, டீசல் பற்றாக்குறை ஏற்படாததை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதெப்படி திடீரென பற்றாக்குறை ஏற்படும் என்றும் மக்கள் கேட்கிறார்கள்.

இதற்கிடையே டீசல் தட்டுப்பாட்டைப் போக்க சென்னைக்கு இன்று கப்பல் மூலம் 67 ஆயிரம் கிலோ லிட்டர் டீசல் வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மாநில செயல் இயக்குனரும்
, தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் நிறுவன மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளருமான வி.கே.ஜெயச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் டீசல் தட்டுப்பாடு இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அதுகுறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக உணவுத்துறை செயலாளர் எம்.பி. நிர்மலா தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்
, உணவுத்துறை கமிஷனர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும், எண்ணெய் நிறுவன மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில்
, எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

தமிழ்நாட்டில் டீசலுக்கான தேவை கணிசமாக அதிகரித்து உள்ளது. கடந்த பிப்ரவரி
, மார்ச், ஏப்ரல் மாதங்களில் முறையே 25.2 சதவீதம், 25.7 சதவீதம், 19.5 சதவீதம் அளவுக்கு டீசலின் தேவை அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அகில இந்திய அளவில் சராசரியாக 8 சதவீதம் அளவுக்கே டீசல் தேவை அதிகரித்து இருக்கிறது.

மே மாதத்தில் சுமார் 20 சதவீதத்திற்கு டீசல் தேவை அதிகரித்துள்ளது. ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக டீசல் அதிகளவு பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணம்.

டீசலில் பெரும்பாலான அளவு சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல்
, கடைகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்கள் சில்லரை விற்பனை நிலையங்களில் இருந்தே டீசலைப் பெறுகின்றன.

விலை உயர்ந்த பர்னஸ் ஆயிலைவிட டீசல் விலை குறைவாக இருப்பதால் தொழிற்சாலைகள் டீசலை அதிகம் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும் டீசலுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.) கடந்த ஏப்ரல் 27-ந் தேதி முதல் மே 14-ந் தேதி வரை மூடப்பட்டதாலும்
, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் (எம்.ஆர்.பி.எல்.) கடந்த ஏப்ரல் 12-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை மூடப்பட்டதாலும் டீசல் இருப்பு குறைந்தது.

இதனால்
, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் டீசல் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தமிழகத்தின் அதிக டீசல் தேவையை கருத்தில் கொண்டு மற்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்தும்
, வெளிநாடுகளில் இருந்தும் கப்பல் மூலம் டீசல் கொண்டு வர எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன.

டீசல் தேவை அதிகரித்திருப்பதால் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் கப்பலில் அனுப்பியுள்ள டீசல் செவ்வாய்க்கிழமை சென்னை வந்து சேரும். அதுபோல ஐ.ஓ.சி.எல்.
, எச்.பி.சி.எல். நிறுவனங்கள் கப்பல் மூலம் அனுப்பியுள்ள டீசலும் இன்று சென்னை வந்தடையும். கப்பல்களில் வரும் டீசலின் மொத்த அளவு 67 ஆயிரம் கிலோ லிட்டர் ஆகும்.

இத்தகைய நடவடிக்கைகளால் சென்னை மாநகரின் டீசல் தேவை பூர்த்தியாகி
, நிலைமை சீரடையும். எனவே, டீசல் பயன்படுத்துவோர் தங்களது தேவைக்கு மேல் டீசலை வாங்கி பதுக்கி வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக அரசின் சிவில் சப்ளை துறையும் டீசல் பதுக்கி வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும். அதையும் மீறி டீசலைப் பதுக்கிவைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

வந்தது கப்பல்

இந்த நிலையில் கொச்சியிலிருந்து பிரதீபா வர்ணா என்ற கப்பல் மூலம் டீசல் சென்னைக்கு இன்று வந்து சேர்ந்தது. இந்த டீசலை இறக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மொத்தம் மூன்று கப்பல்களில் டீசல் சென்னைக்கு வருகிறது.

டீசல் வந்துள்ளதைத் தொடர்ந்து படிப்படியாக டீசல் தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, May 25, 2012

கடற்படை தலைமையகத்தை பார்வையிட் பிரதீபா வந்ததற்கான செலவு ரூ. 23 கோடி!

பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்கள்-அந்தக் கல்வி நிறுவனங்களின் உழைப்பு

பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள 9 மாணவ, மாணவியரும் நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிகளில் பயின்றவர்கள். இது நாமக்கல் மாவட்டத்துக்கு நிச்சயமாகப் பெருமை சேர்க்கும்.

இந்த வெற்றிக்காக அந்தக் கல்வி நிறுவனங்களின் உழைப்பு கொஞ்சமல்ல என்பதும், இதற்காக சிறந்த ஆசிரியர்களை அமர்த்தி, கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை அவர்கள் தயக்கம் இல்லாமல் தருகிறார்கள் என்பதையும், இலக்கு மட்டுமே குறியாகக் கொண்டு மாணவர்களுடன் தாங்களும் சேர்ந்து நடக்கிறார்கள் என்பதும்தான் நாமக்கல் மாவட்டக் கல்வி நிறுவனங்களின் வெற்றி ரகசியம்.

தேர்வை எப்படி அணுகுவது, எப்படி பதில் எழுதுவது, எந்த அளவுக்கு எழுத வேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகத் திட்டமிட்டு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, திரும்பத் திரும்ப அவர்களை எழுத வைத்து, அதைத் திருத்திக் கொடுத்து, கேள்விக்கான விடை எழுதுதலை ஓர் அனிச்சைச் செயலாக மாற்றிவிடும் கல்விமுறையின் வெற்றியாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.

இந்தப் பள்ளிகளில் படித்தால் நிச்சயம் 90% மதிப்பெண் கிடைக்கும், கட்-ஆப் அதிகமாகும், நிச்சயமாக நல்ல பொறியியல் கல்லூரியில் அல்லது மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் பெற்றோர் பலரும், தமிழகத்தின் பல திசைகளிலிருந்தும் நாமக்கல் நோக்கி வருகின்றார்கள். இனி மேலதிகமாகப் படையெடுப்பார்கள்.

ஒரு சிறந்த மருத்துவக் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் தனது குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.10 லட்சம் செலவிட்டாக வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர் என்றால், ரூ.30 லட்சம் செலவாகும்.

இது போன்ற பள்ளிக்கூடங்களில் சில லட்சம் ரூபாய் செலவில் தனது குழந்தைக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்துக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால், பல லட்சம் மிச்சம்தானே? சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் வாழ்க்கையின் உத்திகளில் பெற்றோர் சிக்கித் தவிக்கும் காலத்தில், இதைச் சரி என்று சொல்லவும் முடியவில்லை, தவறு என்று மறுக்கவும் முடியவில்லை.

இந்த வெற்றிக்காக நாமக்கல் மாவட்டத்தின் தனியார் பள்ளிகளைப் பாராட்டும் அதே வேளையில், இவர்களது வெற்றி ஒரு சிறந்த ஓட்டலின் எல்லாக் கிளைகளிலும் உணவில் ஒரே சுவை கிடைக்கச் செய்யும் செய்நேர்த்திக்கு ஒப்பானது என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இதே நாமக்கல் பார்முலா-வை எல்லா மாவட்டங்களிலும் உள்ள தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்தும். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களை அதிக விலைக்கு வாங்கிவந்து பள்ளியை நடத்தும். படிப்படியாக உருவாக இருக்கும் நடைமுறை அதுவாகத்தான் இருக்கும். அதற்குப் பெற்றோர்களின் வரவேற்பும் இருக்கும்.

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 134 மாணவர்களின் பட்டியலைக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் படித்துள்ள பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள். இந்தப் பள்ளிகளில் சில ஏழைகள் படிக்கக்கூடும். ஆனால் இவை ஏழைகளுக்கான பள்ளிகள் அல்ல.

இந்த 134 பேரில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 91 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 13 பேர், ஆதிதிராவிடர் 5 பேர், சீர்மரபினர் 2 பேர், பொதுப்பிரிவினர் 23 பேர். கிரிமீ லேயர் என்ற பாகுபாடு இல்லாத நிலையில், ஏழை மாணவர்கள் குறைந்த மதிப்பெண்ணுடன் இடஒதுக்கீட்டில் சேர்வதுகூட இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

பிறப்பால் முன்னுரிமை என்பது போய்ப் பணத்தால் முன்னுரிமை என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதன் அடையாளம்தான் இது. அது தவறு என்றால் இது அதைவிடத் தவறு.

தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு மூலம் கிடைக்கும் கட்-ஆப் மதிப்பெண், தேர்வு மதிப்பெண் மூலம் கிடைக்கும் கட்ஆப் இரண்டையும் கூட்டி, கலந்தாய்வு நடத்தப்பட்டபோது, மதிப்பெண் பந்தய ஓட்டம் இல்லை. பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற முடியவில்லை என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

ஆனால் இந்த மதிப்பெண் பந்தயத்தில், எந்தவொரு ஏழை கிராமப்புற மாணவனும் நல்ல கல்லூரியில் இடம்பெற முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளதே, இதை எப்படி சரி செய்யப்போகிறோம்?

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசுப் பள்ளிகள் மிக மோசமாக செயல்பட்டுள்ளன என்பது வெளிப்படை. சென்ற ஆண்டை விட 0.8% தேர்ச்சி விகிதம் அதிகம் என்று கல்வித்துறை சொல்லிக் கொள்ளலாம். 60% மதிப்பெண் பெற்றவர்கள் சென்ற ஆண்டைக் காட்டிலும் 29,417 பேர் அதிகம் என்று ஆசிரியர்கள் சொல்லிக்கொள்ளலாம். இவை யாவும் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி இரண்டுக்கும் சேர்த்துப்போட்ட கணக்கு என்பதை மறந்துவிடக்கூடாது.

ஆண்டுதோறும், தனியார், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் குறித்துத் தனித்தனியாகப் புள்ளிவிவரம் தரும் நடைமுறையைக் கல்வித்துறை இந்த ஆண்டு செய்யவில்லையே, ஏன்? அரசுப் பள்ளிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் அந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளதா? அதற்காக வெட்கப்பட்டுத்தான் இதை மறைத்தார்களா?

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு சவால்விட்டுக் களத்தில் இறங்குவார்கள் என்கிற நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து நிற்கிறோம்.
அதிக சம்பளம், அதிக சலுகை கேட்கும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் நிலையில் அரசுப் பள்ளிகள் தரமான கல்வியை சாமானியக் குடிமகனுக்கு வழங்கும் என்கிற நம்பிக்கை தகர்கிறதே, இதைப்பற்றி யாராவது கவலைப்படுகிறோமா?
தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும், மேலாகவும் கற்றுக்கொடுக்க முயலாதவர்கள் மக்கள் வரிப்பணத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக ஏன் தொடரவேண்டும் என்று யாராவது கேள்வி எழுப்புகிறோமா? இந்த மதிப்பெண் ஓட்டம் இருப்பவன், இல்லாதவனுக்கு இடையில் மிகப்பெரிய, மோசமான இடைவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

இதைப்பற்றி அரசும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும், பொதுஜனங்களான நாமும் கவலையே படாமல் இருக்கிறோம் என்பதுதான் வேதனை!

நன்றி : தினமணி 

Thursday, May 24, 2012

சுயதொழில் தொடங்க 15 % மானியத்தில் ரூ5 லட்சம் வங்கி கடன் கலெக்டர் தகவல்

சுயதொழில் தொடங்க அரசு மானியத்துடன் வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்படும் என திருச்சி  கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சமும், சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரம் சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சமும் வங்கிகளில் அதிகப்பட்ச கடன் தரப்படும்.

இத்திட்டத்துக்கான மதிப்பீட்டில் 15 சத வீதம் வரை மானியமாக தரப் படும். வயது 18க்கு மேல் 35க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவுகளான தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மகளிர், மாற்றுத்திறனாளிகள், முன் னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர், திருநங்கைகள் ஆகி யோர் 45 வயது வரை விண்ணப்பிக்க லாம். குறைந்தப்பட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருவாய் ரூ.1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக சாலையிலுள்ள மாவட்ட தொழில்மைய பொது மேலாளரிடம் பெற்று ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

வேலை வழங்கும் பல்வேறு துறைகள்

வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவரிகள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானது தானா? ஏன தகுந்த கல்வியாளரிகளிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும்.

 வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்.

 1. விண்வெளி பொறியியல் (Aerospace Engineering)
 2. வங்கி மற்றும் காப்பீடு (Banking and Insurance)

 3. பயோ டெக்னாலஜி (Bio Technology)

 4. பி-பார்ம் (B – Pharmacy.)

 5. பி.பி.ஓ இன்டஸ்ட்ரி (BPO   Industry.)

 6. கணினி மற்றும் மென்பொருள் (Computer / Software).

 7. நிகழ்ச்சி மேலாண்மை (Event Management)

 8. பேசன் மேனேஜ்மென்ட் (Fashion Management).

 9. மனித உரிமைகள் (Human Rights.)

 10. விருந்தோம்பல் மேலாண்மை (Hospitality Management.)

 11. உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் (Health Care/ Medical Tech.,)

 12. தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology.)

 13. தொழிற்ச்சாலை உறவுகள் (Industrial Relations)

 14. பன்னாட்டு வாணிபம் (International Trade.)

 15. மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் (Management/Business Administration.)

 16. ஊடகம் மற்றும் இதழியல் (Media / Journalism.)

 17. பொருள் மேலாண்மை (Material Management.)

 18. உற்பத்தி மேலாண்மை (Production Management)

 19. பணியாளர் மேலாண்மை (Personnel Management.)

 20. கிராம மேலாண்மை (Rural Management.)

 21. போக்குவரத்து மற்றும் சுற்றுலா (Travel / Tourism.)

 22. சில்லறை வியாபார மேலாண்மை (Retail Management.)

 23. செலவு மற்றும் மேலாண்மை கணக்குப்பதிவு (Cost and Management Accountancy)

 24. மண்ணியல் (Geology.)

 25. தோட்டக்கலை (Horticulture.)

 26. விளம்பர மேலாண்மை (Advertising Management).

மாணவரிகள் தங்களின் உயர்நிலைக் கல்வியை தேர்வுசெய்ய உதவும் வகையில் உயர்நிலைக் கல்வி பல வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
 
I கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.

II இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயர் படிப்புகள்.

III பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல, செயலாளரிபயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயரி படிப்புகள்.

IV உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவருக்கும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள்:

V போட்டித் தேர்வுகள்

 இவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்

 I கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.

 இந்தப் பிரிவை

1) நுழைவுத் தேரிவுகள்

2) பட்டபப்டிப்புகள்

3) டிப்ளமோ படிப்புகள்

4) சான்றிதழ் படிப்புகள்

என 4 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

 1) நுழைவுத் தேர்வுகள்

 1. ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் (ஐ.ஐ.டி) (IIT)

 2. ஆல் இந்தியா என்ஜினியரிங் எக்ஸாமினேசன் (AIEE)

 3. ஐ.ஐ.டி. இந்திய தகவல்துறைத் தொழில்நுட்பத்திறன் நுழைவுத் தேர்வு

 4. கம்பைண்டு என்ட்ரன்ஸ் என்ஸாமினேசன் (நேவிகேசன் கோர்ஸ்)

 5. இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் பலவிதமான நுழைவுத்தேர்வுகள்

 6. என்.ஐ.டி. நுழைவுத்தேர்வு ( நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி)

 7. பி.டெக். இன்டெஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு

 8. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு

 9. சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசசுச் இன்ஸ்ட்டியூட் (பி.டெக் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி)

 2) பட்டபடிப்புகள் பி.இ.பி.டெக். படிப்பகள்

 1. வான்ஊர்திப் பொறியியல் (Aeronautical  Engineering)

 2. கட்டிடக்கலை (Architecture)

 3. தான்னியங்கிப் பொறியியல் (Automobile Engineering)

 4. பயோ இன்பரிமேட்டிக்ஸ் (Bio – Informatics)

 5. பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேசன் என்ஜினியரிங் (Bio – Medical Instrumentation        Engineering)

 6. பயோ டெக்னாலஜி (Bio Technology)

 7. கட்டிடக்கலைப் பொறியியல் (Civil engineering)

 8. வேதிப் பொறியியல் (Chemical Engineering)

 9. தீயணைப்பு பொறியியல் (Fire Engineering)

 10. கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering)

 11. கம்ட்டரி சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் (Computer Software & Hardware)

 12. மின்னியல் மற்றும் மின்னனு வேதியியல் (Electrical and Electroics Chemical)

 13. மின்னியல் மற்றும் தகவல்தொடர்பு (Electronics and Communication)

 14. மின்னியல் மற்றும் கருவியியல் (Electronics and Instrumentation)

 15. தொழிற்ச்சாலைப் பொறியியல் (Industrial Engineering)

 16. சுற்றுப்புற பொறியியல் புவித்தகவல்கள் (Environment Engineering – Geo – Informatics)

 17. தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology)

 18. கருவியியல் பொறியியல் (Instrumentation Engineering)

 19. தோல்ப்பொருள் தொழில்நுட்பம் (Leather Technology)

 20. உற்பத்திப் பொறியியல் (ManufacturingEngineering)

 21. மெரைன் இன்ஜினியங் (Marine Engineering)

 22. மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics)

 23. மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங் (Mettallurgical Engineering)

 24. சுரங்கப் பொறியியல் (Mining Engineering)

 25. எரிபொருள் வேதிப்பொறியில் (Petro – Chemical Technology)

 26. பாலிமர் என்ஜினியரிங் (Polymer Engineering)

 27. உற்பத்திப் பொறியியல் (Production Engineering)

 28. அச்சுப்பொறியியல் (Printing Technology)

 29. ரப்பர் டெக்னாலஜி (Rubber Technology)

 30. டெக்ஸ்டைல் என்ஜினியரிங் (Textile Engineering)
 

3) டிப்ளமோ படிப்புகள்


1. கட்டிடப் பொறியியல்

 2. மின்சாரப் பொறியியல்

 3. மின்னணுப் பொறியியல்

 4. எந்திரவியல் பொறியியல்

 5. உற்பத்திப் பொறியியல்

 6. வேளாண்மைப் பொறியியல்

 7. கணினி அறிவியல் பொறியியல்

 8. மின்னணு மற்றும் தொலைத்தொடரிபு

 9. கட்டிக்கலை மற்றும் கிராமப்புற பொறியியல்

 10. வேதிப்பொறியியல்

 11. தோல்ப்பொருள் தொழில்நுட்பம்

 12. வேதித்தொழில்நுட்பம்

 13. பாலிமர் தொழில்நுட்பம்

 14. பல்ப் பேப்பர் தொழில்நுட்பம்

 15. மென்;பொருள் தொழில்நுட்பம்

 16. மீன்வளத் தொழில்நுட்பம்

 17. கைத்தறி; தொழில்நுட்பம்

 18. அச்சுத்தொழில்நுட்பம்

 19. பிளாஸ்டிக் டெக்னாலஜி

 20. சரிக்கரைத் தொழில்நுட்பம்

 21. டெக்ஸ்டைல் டெக்னாலஜி

 22. கணினித் தொழில்நுட்பம்

 23. கார்மெண்ட் டெக்னாலஜி

 24. மரத் தொழில்நுட்பம்

 25. வனத்துறைத் தொழில்நுட்பம்

 26. காலணிகள்த் தொழில்நுட்பம்

 27. போர்மேன் டெக்னாலஜி

 28. ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உருவாக்குதல்

 29. ரெப்ரிஜ்ரேசன் மற்றம் ஏலீ; கப்டி`னிங்

 30. விற்பனைத் துறை

 31. காஸ்மெட்டாலஜி


4) சான்றிதழ் படிப்புகள்

1. பிளாக்ஸ்மித்

 2. தச்சுத்தொழில்

 3. மோல்டர்

 4. பெயிண்டர்

 5. `டீட் மெட்டல் ஒலீ;க்கர்

 6. கட்டடம் கட்டுபவர்

 7. பேட்டரின் மேக்கர்

 8. மெக்கானிக் டீசல்

 9. பிளம்பர்

 10. மெக்கானிக் கிரெய்ண்டர்

 11. மெக்கானிக் மோட்டார்

 12. கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உருவாக்கல்

 13. வெல்டரி கேஸ் மற்றும் மின்சாரம்

 14. மெக்கானிக் மோட்டார் வாகனங்கள்

 15. ஒயர்மேன்

 16. டர்னர்

 17; மெக்கானிஸ்ட்

 18. பிட்டசு

 19. எலக்ட்ரோ பிளேட்டர்

 20. ஒயர்லெஸ் ஆப்பரேட்டர்

 21. சர்வேயர்

 22. இன்ட்ரூமென்ட் மெக்கானிக்

 23. எலக்ட்ரீ சியன்

 24. மெக்கானிக் ரெப்ரிஜ்ரே`ன் மற்றும் ஏர் கண்டிசனிங்

 25. கருவி வடிவமைப்பாளர்

 26. டிராட்ஸ்மேன் சிவில்

 27. டிராட்ஸ்மேன் மெக்கானிக்

 28. மெக்கானிக் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி

 29. மெக்கானிக் ஜெனரல்

 30. பிழைத்திருத்தல்

 31. சுருக்கெழுத்து ஆங்கிலம்

 32. ஹேண்ட் ஒயரிங் ஆப் பேண்சி அண்ட் பர்னிஸ்சிங் பேப்ரிக்ஸ்

 33. எம்பர்யாடரி அன்ட் டெய்லரிங்

 34. கட்டிங் அண்ட் டெய்லரிங்

 35. காலணிகள் உருவாக்குதல்

 36. சூட்கேஸ் மற்றும் லெதர் பொருள் உற்பத்தி

II இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.


இந்த பிரிவை
1) மருத்துவ நுழைவுத்தேர்வுகள்

 2) மருத்துவம் பட்டப்படிப்பு ஃடிப்ளமோஃ சான்றிதழ் தகுதி

 3) வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்

 4) உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்

 5) மனை அறிவியல்

 6) பொதுப்பாடங்கள்

 என 6 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

 1) மருத்துவ நுழைவுத்தேர்வு

1. ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ் பூனே

 2. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உ.பி

 3. ஆல் இந்தியா பிரிமெடிக்கல் ஃ பிரிடெண்டல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் கண்டெக்டட் பை சென்ட்ரல் போர்டு ஆப் செகரட்ரி எஜூகேசன்

 4. ஜவஹர்லால் மருத்துவம் மற்றும் ஆய்வுப்பிரிவின் பட்டமேற்படிப்புக்கான நிறுவனம் புதுச்சேரி

 5. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உ.பி

 6. கிரிஸ்ட்டியன் மருத்துவக் கல்லூரி வெள்ளுர்

 7. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் – (புதுடெல்லி)
 

மருத்துவம் பட்டப்படிப்பு = டிப்ளமோ / சான்றிதழ் தகுதி

பட்டப்படிப்புக்கான மருத்துவ பாடங்கள்

 1. எம்.பி.பி.எஸ்.

 2. பி.டி.எஸ்.

 3. பி.ஹெச்.எம்.எஸ்

 4. பி.ஏ.எம்.எஸ்

 5. பி.எஸ்.எம்.எஸ்

 6. பி.பார்ம்

 7. பி.பி.டி.

 8. பி.எஸ்.சி (நர்சிங்)

 9. பி.ஒ.டி.
 

மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி

1. மருத்துவத் தொழில்நுட்பம்

 2. லெப்ரோசி இன்ஸ்பெக்டர் கோர்ஸ்

 3. லேப் டெக்னீசியன்

 4. இ.சி.ஜி டெக்னீசியன்

 5. டெண்டல் மெகனிக்

 6. ஆண்தால்மிக் அசிஸ்டெண்ட் கோர்ஸ்

 7. ஹெல்த் வொர்க்கரி டிரெய்னிங்

 8. கோர்ஸ் இன் ஆண்டோமெட்ரி

 9. ஆர்தோபிஸ்ட் கோர்ஸ்

 10. மெடிக்கல் ரேடியேசன் டெக்னாலஜி

 11. டிப்ளமோ இன் டயாலிசிஸ்

 12. மருத்துவமனை நிர்வாகத்தில் டிப்ளமோ

 13. மருத்துவ நுன்னுயிறியல்

 14. டிப்ளமோ இன் புரோஸ்தெடிக்ஸ் அன்ட் ஆர்தோட்டிக்ஸ்

 15. பெரிபுயூசன் டெக்னாலஜி

 16. பிசியோதெரபி

 17. ஸ்பீச் தெரபி

 18. நர்சிங்


வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்

1. வேளாண்மை அறிவியல் பி.எஸ்.சி. அக்ரி

 2. பால்ப்பொருள் அறிவியல் பி.எஸ்.சி (டி.டி)

 3. கால்நடை அறிவியல் பி.வி.எஸ். ஏ. ஹெச்
 

உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்
1. விலங்கியல் பி.எஸ்.சி

 2. மீன்வளம் பி.எஸ்.சி

 3. எம்.எஸ்.சி. மரெயின் சயின்ஸ் மற்றும் உயிரியல்

 4. எம்.எஸ்.சி. மரெயின் பயோடெக்

 5. அக்குவாடிக் பயோலஜி மற்றும் மீன்வளம் எம்.எஸ்.சி

 6. நுன்னுயிரியல் பி.எஸ்.சி எம்.எஸ்.சி

மனை அறிவியல்

1. மனை மேலாண்மை

 2. உணவு மற்றும் ஊட்டச்சத்து

 3. குழந்தை வளர்ச்சி

 4. ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ்

 5. உணவு சேவை மேலாண்மை

 6. டெக்ஸ்டைல்ஸ் வடிவமைப்பு

 7. டெக்ஸ்டைல்ஸ் கிராண்ட்

 8. உணவுத்தொழில்நுட்பம்

 9. மனித ஊட்டச்சத்து

 10. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து

 11. உணவு உற்பத்தி

 12. பயண்பாடு மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி


பொதுப்பாடம்

1. இயற்பியல்

 2. வேதியியல்

 3. தாவரவியல்

 4. விலங்கியல்

 5. பயன்பாட்டு புள்ளியல்

 6. பயன்பாட்டு கணிதம்


III பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.

1. சாட்டர்டு அக்கவுண்டன்சி

 2. வங்கியியல்

 3. சட்டப்படிப்பு பி.எல்

 4. மேலாண்மை பி.பி.ஏ

 5. பொருளாதாரம் பி.ஏ

 6. வணிகவியல்

 7. டீச்சிங்

 8. உலக அறிவியல்

 9. உளவியல்

 10. வரலாறு

 11. புவியியல்

 12. ஆங்கிலம்

 13. மொழி

 14. இசை

 15. நிதி

 16. ஊடகம்

 17. தகவல் தொடர்பு

 18. காஸ்ட்அக்கவுண்டன்சி

 IV உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள்:

1. உடற்கல்வி

 2. சட்டப்படிப்பு

 3. ஏவியேசன் விமானப்பணிண்பெண்

 4. பாஸ்மெட்டாலஜி

 5. பேஷன் டெக்னாலஜி

 6. காப்பீடு

 7. கடல்சாரபடிப்பு

 8. போக்குவரத்து மற்றும் சுற்றுலா

 9. புகைப்படம் பற்றிய படிப்பு

 10. கலை/பயன்பாட்டுக் கலை

 11. நகை வடிவமைப்பு

 12. பேஷன் மாடலிங்

 14. இதழியல் மற்றும் அச்சு ஊடகம்

 15. பிலிம் மற்றும் பிராட்காஸ்டிங் (டி.வி/ரேடியோ)

 16. கலையரங்கம் மற்றும் நடிப்பு

 17. விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு

 18. நடிப்பு

 19. ஆடியோ மற்றும் வீடியோ உற்பத்தி

 20 சின்மாட்மோகிராபி

 21. இயக்கம்

 22. டைரக்சன் சுரரி பிளே ரைட்டிங்

 23. வீடியோகிராபி

 24. பிலிம் எடிட்டிங்

 25. நாடகக்கலை

 26. பிலிம் டைரக்டிங்

 27. சினிமா நடிப்பு

 28. ஆடியோகிராபி மற்றும் எடிட்டிங்

 29. பிலிம் எடிட்டிங்

 30. படத் தயாரிப்பு

 31. பிலிம் பிராசசிங்

 32. பிலிம் ஸ்டடிஸ்

 33. கலையரங்கம் மற்றும் டி.வி. தொழில்நுட்பம்

 34. பிரிஹேன்ட் அணிமே`ன்

 35. பப்டமென்டல் அன்ட் ஆடியோ விசூவல் எஜூகேசன்

 36. மோசன் பிக்சரி போட்டோகிராபி

 37. நிகழ்ச்சி மேலாண்மை

 38. விசூவல் கம்யூனிகேசன்

 39. புத்தக பதிப்பு

 40. அரசியல் அறிவியல்

 41. குற்றவியல்

 42. விக்டிமாலஜி

 43. நடனம்

 44. ஜெம்மாலஜி

 45. தொழிற்ச்சாலை வடிவமைப்பு

 46. பூமி பற்றிய அறிவியல்

 47. நகரத் திட்டமிடல்

 48. மண்ணியல்

 49. சமூகவியல்


V போட்டித் தேர்வுகள்

புடிப்பை முடித்த பின்னர் போட்டித்தேர்வுகள் எழுதுவதன்மூலம் பலருக்கு வேலைகள் எளிதில் கிடைக்கும். தகுதியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்பலவகையான போட்டித்தேர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வுகளை 1. அறிவியல் மற்றும் கணிதப்பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்.

 2. வணிகவியல் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.

1.அறிவியல் மற்றும் கணிதம் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்:

1. பொறியியல்த்துறைத் தேர்வுகள்

 2. வங்கித் தேர்வுகள்

 3. இந்திய வனத்துறைத் தேர்வகள்

 4. மண்ணியல்த்துறைத் தேர்வுகள்

 5. கம்பைண்டு மருத்துவத்துறை தேர்வுகள்

 6. இந்திய பொருளாதாரம் புள்ளியல் துறை தேர்வுகள்

 7. சிவில் சரிவீஸஸ் தேர்வு

 8. எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகள்

 9. ரெயில்வே வேலைவாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள்

 2. வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்

1. சிவில் சரிவீஸஸ் தேர்வுகள்

 2. வருமானத்துறைத் தேரிவகள்

 3. எஃசைஸ் மற்றும் வருமானவரித்துறைத் தேர்வுகள்

 4. இந்திய பொருளாதாரத்துறைத்தேர்வு

 5. இந்திய ராணுவம் விமானத்துறைத் தேர்வு

 6. இந்திய புள்ளியல்துறைத் தேர்வு

 7. கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸஸ்

வேலைவாய்ப்பு பற்றிய பட்டியல் இத்துடன் முடியவில்லை இது ஒரு முன்னோட்டம் தான் ஒவ்வொரு நபரும் தனது ஆளுமைத்தன்மைக்கு தகுந்தத் துறையைத் தேர்வு செய்து திட்டமிட வேண்டும். ஒரு தொழிலைத் தேர்வுசெய்வது வாழ்க்கைத் தொழில் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு வேலையைப் பெறுவது அந்த வேலையில் வளர்வது, வாழ்க்கைத்தொழிலை மாற்றுவது,

ஓய்வு பெறுவது என வாழ்நாள் முழுவதும் வரும் செயல்கள் ஆகும். வாழ்க்கையின் இலக்கு நிர்ணயம் செய்வது முதல் வாழ்க்கைத்தொழில்மாற்றம் செய்வதுவரை பல வகைகளில் வாழ்க்கைத்தொழில் திட்டமிடல்உதவும். வாழ்க்கைத்தொழிலை ஒருவர்சரியாக திட்டமிடுவது மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெறலாம்.

தற்போதைய வாழ்க்கைத்தொழில் ஒரு தொடர் செயல்பாடாக கருதப்படுகின்றது. ஏனெனில் வேலையைப் பெறுவது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், வாழ்க்கைத்தொழிலை மாற்றுதல், ஓய்வு பெரும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கிஉள்ளது. குறிப்பிட்ட சில இடைவெளிகளில் வாழ்க்கையில்தொழில் வளரிச்சியினை பற்றி திட்டமிடல் நல்ல பயனளிக்கும் அதுவே வெற்றிகரமான

 வாழ்க்கைகு வழிவகுக்கும்.
Dr.எஸ். நாராயணராஜன் M.B.A. Ph.D., (நெல்லை கவிநேசன்) ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்

நன்றி:-தினத்தந்தி