Friday, May 11, 2012

திவாலாகும் யூரோ தேசங்கள்!


??????

இரண்டாம் உலகப் போருக்கு பின் உலக நாடுகளின் அணிகள் இடமாறின, போரால் உண்டான பேரிழப்பால் எதனையாவது செய்து இழந்த பொருளாதரத்தை மீட்க அத்தனை நாடுகளும் எத்தனித்தன. உலகப் போருக்கு அமெரிக்கா (சரியாக சொல்வதென்றால் யூதர்கள் ) தலைமையில் உருவாகிய புதிய பொருளாதார நிபுணத்துவ வர்க்கம் வளர்ச்சி என்னும் சொல்லாடல் மூலம் மொத்த உலகையும் வசீகரிக்க ஆரம்பித்தது. அவ்வளர்ச்சியில் எல்லேருக்கும் எல்லா பொருட்களையும் கிடைக்க செய்வது, எல்லோரையும் எல்லா பொருட்களையும் நுகர செய்வது சித்தாந்தமாகும், அது அவசியம் இருந்தாலும் அவசியம் இல்லாவிட்டாலும் சரியே!

அவ்வளர்ச்சியை அடைய ஓர் முன் மாதிரி அவசியமாகும். அம்மாதிரியில் உள்நாட்டு சிந்தனைகளுக்கு, உள்நாட்டு தேவைகளுக்கு இடம் கிடையாது. சுய விருப்பம், சுய தேர்வு, சுய சிந்தனைக்கு அனுமதி இல்லை. சுருக்கமாக சொல்வதன்றால் அமெரிக்கா உட்பட அத்தனை மேற்குலகையும் காப்பி அடிப்பதாகும். அண்மை காலமாக(இந்தியாவை தவிர்த்து) அத்தனை சர்வதேச ஊடகங்களின் விவாதங்களின் தலைப்பு செய்தியாக உள்ள சரிந்து வரும் ஐரோப்பிய பொருளாதாரம் இவ் அமெரிக்க மாதிரியை அல்லவா பின்பற்றியது. அவ் அமெரிக்க மாதிரியில் வங்கிகளும், நிதி நிறுவங்களும் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ச(க்)தி என்பது நிதர்சனம் அல்லவா?

இவ்வங்கியாளர்களை பொருத்தமட்டில் அவர்கள் வாரி வழங்கும் புதிய கடன்கள் அவர்கள் வாரி சுருட்டிய பழைய கடன்களின் மறுஅவதாரம் அன்றி வேறில்லை. இவ்வாறு வட்டி என்ற பெயரில் பணம் சுழன்றுச்சுழன்று மீண்டும் தம்மிடமே வருவதைத்தான் பொருளாதாரம் இயக்கத்தில் உள்ளது என்றும் அதனையே வளர்ச்சி என்றும் கூறிக் கொள்கின்றனர்.

நாம் நடைமுறையில் வட்டிக்கு கடன் கொடுத்தவர் கடனாளி அசலை திருப்பி செலுத்துகிட்றாரா என்று பார்க்காமல் வட்டியில் கண்ணும் கருத்துமாக இருப்பதை பார்த்திருகின்றோம் இல்லையா? வட்டி என்பதை இலாபமாக அதுவும் கொள்ளை இலாபமாக காணுகின்றனர். வட்டி என்பது பிறர் பணத்தை பயன்படுதுவதுர்க்கு கொடுக்கும் விலை. அவ்வாறு அதிக விலை கொடுத்ததால் இன்று ஐரோப்பிய நாடுகள் திவாலாக ஆரம்பித்துள்ளன.
அமெரிக்க மாதிரி வளர்ச்சியில் எப்பொழுது கடன் தவணை கட்ட முடியாமல் போகும் என்பதை தீர்மானிப்பது கடனாளி அல்ல மாறாக கடன் கொடுத்தவரேயாகும். அதை தீர்மானிக்க தான் இன்று மூடி, பிட்சி ,ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் போன்ற பல்வேறு பன்னாட்டு பொருளாதார தர மதிப்பீடு நிறுவனங்கள் களத்தில் உள்ளன. ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்கியதில் இவை பெரும்பங்காற்றியத்தை நாம் கட்டுரையை வாசிக்கும் பொழுது விளங்கிகொள்ளலாம்.

அதுபோல அமெரிக்க மாதிரி வளர்ச்சி என்பது அதிகம் செலவு பிடிக்க கூடிய ஒன்றாகும் ஏனெனில் விவசாயம் உள்ளிட்ட உள்ளூர் தொழில்களை அழித்து, இறக்குமதியை அதிகரித்து விலைவாசியை ஏற்றக்கூடியதாகும். அவ்வளர்ச்சி மாதிரியின் பெயரால் ஆட்சியாளர்கள் எத்தகைய அழிவு முயற்சிகளிலும் இறங்கலாம் (நம்மூர் கூடங்குளம் போல) யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது, அப்படி கேள்விகேட்டால் அத்தனை ஜனநாயக நெறிமுறைகளையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்.
பெரும்பாலும் இவ்வளர்ச்சி மாதிரியை பின்பற்றும் ஆட்சியாளர்கள் எதிர் கால தேவைக்கோ, சந்ததிகளின் நலனிர்க்கோ எள்ளளவும் முதலீடு செய்யாமல் கடன் மேல் கடன் வாங்கி உயர் மற்றும் நடுத்தர வர்கத்தின் நிறைவு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி அவர்களை ஆடம்பர மோகிகளாக்கிடுவர். இதனால் மக்கள் ஆட்சியாளர்களின் தவறான பொருளாதார அணுகுமுறை பற்றி சிந்திக்க மாட்டார் . இதனைத்தான் ஆட்சியாளர்களும் எதிர்பார்கின்றனர்.



கூடுதல் கடன் வாங்கி குவிக்கும் ஒரு நாடு அதுவும் வட்டியின் மூலம் கொள்ளை லாபம் அடைய காத்திருக்கும் உலக வங்கி(WB) பன்னாட்டு நிதி நிறுவனம் (IMF),ஐரோப்பிய யூனியன் வங்கி (EUB) ஆசிய வளாச்சி வங்கி (ADB) இன்னும் இவை போல பல வங்கிகளிடம் கடன் வாங்கும் ஒரு நாடு இன்று இல்லை எனினும் நாளை சிக்கலில் சிக்குவது உறுதி.
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா, ஜெர்மனி என ஆரம்பித்து நூற்றாண்டின் இறுதியில் நிகரகுவா (1979) சிலி (1982)டொமினிகன் குடியரசு (1984)பொலிவியா(1985) என பொருளாதார சிக்கலில் சிக்கிய நாடுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. அந்த பட்டியலில் புதுவரவாக தற்பொழுது ஐரோப்பிய நாடுகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவுடன், அது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தங்கள், ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகள் என எல்லாவற்றிலும் துணை நின்ற ஐரோப்பா இன்று அமெரிக்காவை தொடர்ந்து பொருளாதார சரிவை சந்திக்க ஆரம்பித்துள்ளது. ஜனநாயக வகுப்பெடுக்க உலகம் முழுவதும் படை எடுத்தவர்களின் கூடாரத்தில் இன்று குமுறல்கள், உரிமை குரல்கள் அத்தனை அடைய போராட்டங்கள் என புயல் எழ துவங்கியுள்ளது. ஏன்? என்பதை ஆராயவே இச்சிறுக் கட்டுரை.
மேற்ச் சொன்னவர்களால் பாதிப்படைய நம் நாடும் மெல்ல பழகிவரும் இவ்வேளையில் இக்கட்டுரை நமக்கு எச்சரிக்கை மணி போல அமைந்தால் நலம்.
ஆட்டம் காணும் யூரோ! சிதறுமா ஐரோப்பிய யூனியன்?

2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உண்டான பொருளாதார சரிவு எனும் பேரிடி ஐரோப்பிய நாடுகளில் நிதி சிக்கல் எனும் பிரளயமாக பிராவாகம் எடுக்க ஆரம்பித்தது.
2008 ல் அயர்லாந்தில் துவங்கி 2009 ல் கிரீஸ், போர்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம் என சுற்றி வந்து இன்று ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
2008 க்கு முன்பு வரை உலகின் வளம் நிறைந்த பணக்கார நாடுகளின் பட்டியலில் இருந்த இந்நாடுகள் இன்று திவால் பட்டியலில் இடம்பெற ஆரம்பித்துள்ளன.
50 நாடுகள், 73 கோடி (11% உலக) மக்கள் தொகை கொண்ட ஓர் சிறிய கண்டமான ஐரோப்பா இன்று உலகின் மொத்த கடனில் சுமார் 25% ஐ சுமந்து கொண்டுள்ளது. அதிலும் 80% சுமை 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் நாடுகளால் ஏற்பட்டது.
கிரீஸின் கடன் 21, இத்தாலியின் கடன் 114 இலட்சம் கோடி என ஐரோப்பிய யூனியனின் மொத்த கடன் 492 இலட்சம் கோடி ரூபாய் என்கின்றது ஒரு புள்ளிவிவரம். போலி கணக்கு காட்டும் உண்மையான கடன் இதைவிட கூடுதலாக இருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என்கின்றது மற்றொரு அறிக்கை. ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு ஆகிய 3 நாடுகளின் கடன் மட்டுமே 350 இலட்சம் கோடி ரூபாயை தாண்டும். அதாவது இம்மூன்று நாடுகளும் ஐரோப்பிய யூனியனின் கடன் நெருக்கடிக்கு பிரதான காரணமாகும். இந்நாடுகளின் பிரச்சனை இன்னும் வெளிவர ஆரம்பிக்கவில்லை.
கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் பிரச்சினையாலே விழிபிதுங்கி நிற்கும் ஐரோப்பிய யூனியன் இந்நாடுகளின் பிரச்சனை இன்னும் வெளிவர ஆரம்பித்தால் தப்பி பிழைப்பது கஷ்டம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
2008 ல் நிதி சிக்கலை சரிசெய்ய அமெரிக்க மத்திய வங்கி 9 இலட்சம் கோடி டாலரை புழக்கத்தில் விட்டது.
அமெரிக்காவுக்கு பிரச்னை, அமெரிக்க பணம் அவர்கள் பிரச்சனையை தீர்க்க அவர்கள் டாலரை புழக்கத்தில் விடுவது அவர்கள் உரிமை என்று அப்பிராணியாக கேட்பது நமக்கு புரிகின்றது. அங்கே தான் ஆரம்பிகின்றது பிரச்சனை தேவையே இல்லாமல் செயற்கையாக சந்தையில் விட்ட டாலரால் பிரச்சனையை தள்ளிபோட்டதே தவிர தீர்க்கவில்லை அமெரிக்கா.

இதனால் டாலரின் மதிப்பு குறைந்து பொருட்களின் விலை கூடியது. ஏற்கனவே வேலை இழந்த அமெரிக்க மக்களை விலைவாசி உயர்வும் சேர்ந்து தாக்கியது, சந்தைக்கு வந்த கூடுதல் டாலர் அமெரிக்க மக்களை மட்டுமல்ல டாலரை மாற்றாக பயன்படுத்தும் அத்தனை நாடுகளையும் பாதித்தது.
ஏற்கனவே கடந்த ஆண்டு 2.2 இலட்சம் கோடி டாலரை திரும்பபெற வகைச் செய்யும் கடும் மசோதாவை ஒபாமா கொண்டுவந்து அந்நாட்டு மக்களை மிரள்ச்சியில் ஆழ்த்தினார். 2012 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் முடித்த கையோடு புதிய அதிபர் 4 இலட்சம் கோடி டாலரை திரும்பபெற வகைசெய்யும் மற்றொரு மசோதாவை கொண்டுவந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க உள்ளார் .
அமெரிக்க வங்கியை அடியொற்றி ஐரோப்பிய யூனியன் மத்திய வங்கியும்(ECB ) கடந்த ஆறு மாதங்களாக 1.1 இலட்சம் கோடி யூரோவை (சுமார் 66 இலட்சம் கோடி ரூபாய் ) சந்தையில் புழக்கத்தில் விட்டுள்ளது . இதுவும் சேர்ந்து மொத்த உலக நாடுகளையும் விரைவில் பாதிக்கும் என அஞ்சப்படுகின்றது.


அயர்லாந்து:ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியின் முடிவல்ல; ஓர் துவக்கம்!
சூரியன் மறையாத நாடு என அழைக்கப்பட்ட ஐக்கிய பிரிட்டனின் ஒரு பகுதியாக விளங்கிய அயர்லாந்து 1845-1849 வரை ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் 10 இலட்சம் மக்களை பறிகொடுத்து. பிரிட்டனின் பாரா முகத்தால் போராடி அயர்லாந்து 1916 ல் விடுதலையடைந்தது.
45 இலட்சம் மக்கள் தொகையுடன் உலகின் மக்கள் தொகை வரிசையில் 119 வது இடத்தில் இருக்கின்றது அயர்லாந்து. மனித வள குறியீட்டில் 7 வது இடத்தில் இருக்கின்ற அயர்லாந்து 2008 ஆம் ஆண்டுவரை தனி மனித வருமானத்தில் 39312 டாலருடன் உலகின் 15 வது இடத்தில் இருந்தது.
சரி இத்தனை விசயங்களில் சிறந்து விளங்குவதாக சித்தரிக்கப்பட்ட அயர்லாந்தின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா?
2000 ஆம் ஆண்டின் உலகின் 6 வது பணக்கார நாட்டு மக்கள நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார்கள் நாம் தெருவில் இறங்கி போராட வேண்டி வரும் என்று;

ஆம், 2008 ஆம் ஆண்டு வரை உலக வங்கி திரும்ப திரும்ப கூறியது அயர்லாந்தின் பொருளாதாரம் அசத்தலாக, அட்டகாசமாக உள்ளதென்று.

அதே 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் திவாலான 3 முக்கிய வங்கிகளின் அயர்லாந்து கூட்டாளிகளான அலய்ட் ஐரிஸ் பாங்க் (AIB) பாங்க் ஆப் அயர்லாந்து (BOA), ஆங்கிலோ ஐரிஸ் பாங்க்(AIB) ஆகியனவும் திவாலாகின. இவ்வாறு திவாலாகிய வங்கிகளை மீட்க அயர்லாந்து அரசு 2008 முதல் 2009 வரை 65000 கோடி ரூபாயினை செலவளித்தது. அன்று வங்கியை மீட்க களத்தில் குதித்த அயர்லாந்து அரசுக்கு அது புதைகுழி என்பது பின்னர்தான் தெரிந்தது. அப்பொழுது நாடே திவாலாகும் நிலைமையில் இருந்தது. ஒன்றும் செய்ய முடியாமல் கைபிசைந்து நின்றது.
வங்கியை மீட்க கூடுதல் நிதி சுமையால் உலக வங்கியிடம் கூடுதல் கடன் வாங்கியது அயர்லாந்து அரசு. கடன் வழங்கிய உலக வங்கி அயர்லாந்து மீது கடுமையான நிபந்தனைகளை சுமத்தியது. அதன் ஒரு பகுதியாக வாங்கிய கடனை அடைக்க ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பல ஆயிரம் கோடிகளை பொது செலவிலிருந்து கட் செய்ய நிர்பந்தித்தது.
2008-2010 வரை அயர்லாந்து அரசு இவ்வாறு 80000 கோடி ரூபாயை வெட்டியது. இதனால் நாட்டில் வேலை வாய்ப்பு குறைந்து, வேலையின்மை அதிகரித்தது. ஏற்கனவே பட்ஜெட்டில் 5% ஐ இராணுவத்திற்கு செலவு செய்து திக்குமுக்காடி வந்த அரசு மீது உலக வங்கியின் அழுத்தமும் கூடியது.

2010 ல் நாடே திவாலாகும் நிலையில் உலக வங்கியும் ஐரோப்பிய யூனியன் வங்கியும் இணைந்து 8 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திவால் தடுப்பு திட்டத்தை அயர்லாந்து மீது திணித்தனர். இதற்காக அயர்லாந்து 2011-15 வரை ஒவ்வொரு ஆண்டும் 90000 கோடி ரூபாயினை பட்ஜெட்டில் இருந்து குறைக்க வேண்டும். இந்த தொகை சமூக நலத்திட்டங்களுக்கு அரசு செலவு செய்யும் தொகையாகும்.
பன்னாட்டு நிதி நிறுவனங்கள் ஆடிய பங்கு சந்தை சூதாட்டத்தில், யூக வாணிப பேரத்தில், ரியல் எஸ்டேட் விளையாட்டில் அயர்லாந்து மக்கள் பகடை காய்களாக்கப்பட்டனர்.
அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையில் பணியாற்றிய குற்றத்திற்காக, அமெரிக்க-ஐரோப்பிய கூட்டமைப்புகளின் இலாப வேட்டையில் கூட்டு சேர்ந்த குற்றத்திற்காக இன்று அயர்லாந்து கொடுத்துள்ள விலை குறைவுதான். ஏனெனில் யாருடன் (IMF-EUB) கூட்டு சேர்ந்தார்களோ அவர்கள் இன்று அயர்லாந்து மீது சுமத்தியுள்ள கடன், அதற்கான வட்டி ஆகியவற்றால் அயர்லாந்தின் எதிர்கால சந்ததிகள் இன்னும் அதிகமாகவே இழக்க வேண்டி வரும்.
பொருளாதாரவளர்ச்சி ஆடம்பர மாயையில் மூழ்கியிருந்த அயர்லாந்து சமூகம் அதே பொருளாதாரம் தரை தட்டிய பிறகு உணர்வு பெற்றுள்ளனர். உண்மையை விளங்கிக் கொண்டு வீதியில் இறங்கி போராட துவங்கியுள்ளனர். அயர்லாந்து போராட்டம் ஐரோப்பிய யூனியனின் வீழ்ச்சியின் முடிவல்ல, ஒரு துவக்கமேயாகும்.
கிரீஸ்:கரையுமா? கரை சேருமா?
ஜனநாயகத்தின் தொட்டில் அமைதிப் பூங்கா, ஐரோப்பாவுக்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்த நாடு, ஒலிம்பிக் விளையாட்டின் பிறப்பிடம் என பலவாறு சிலாகித்து கூறப்படும் நாடு கிரேக்கம் எனப்படும் கிரீஸ்.
பல நூற்றாண்டுகள் உதுமானியப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய கிரீஸ், அதன் கேத்திர முக்கியத்துவத்தின் காரணமாக ஐரோப்பிய ஆக்கிரமிப்பு நாடுகளின் தூண்டுதலால் ஏற்பட்ட உள்நாட்டு சண்டையால் துருக்கியிடமிருந்து துண்டாடப்பட்டது. சராசரி கிரேக்கர்களின் மனோபாவம் துருக்கியர்களையே ஒத்துள்ளதாகவும் அது அவர்களை ஐரோப்பியர்களிடமிருந்து அன்னியப் படுத்துவதாகவுமே உள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
மதத்தை தவிர வேறு எதுவும் அவர்களை ஐரோப்பியர்களுடன் இணைக்கவில்லை. துருக்கியர்களும், கிரேக்கர்களும் நெருங்கிய கலாச்சார அடையாளத்தை கொண்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளின் யூனியன் ஒன்று உருவாகுமேயானால் அதில் கிரீஸ் கனகச்சிதமாக பொருந்தும். ஐரோப்பிய யூனியன் கிரீஸுக்கு பொருந்தாது என்கின்றனர்.
அண்டை நாடான துருக்கியை சண்டை நாடாக்கி, அதனையே அச்சுறுத்தும் காரணமாக காட்டி அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளிடம் ஆயுதங்களை வாங்கி குவித்தனர் கிரீஸின் வலது சாரி, இடது சாரி ஆட்சியாளர்கள். துருக்கியிடமிருந்து பறிக்கப்பட்ட கிரீஸை கைப்பற்றி தம்முடன் இணைத்துக் கொள்ள முதலில் பாசிச-நாசிச சக்திகளும், பின்னர் கம்யூனிச-ஜனநாயக(பனிப்போர்) போட்டியாளர்களும் போட்டி போட்டனர்.
ஆசிய-ஆப்பிரிக்க-ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் மத்தியத் தரைக்கடலின் மையமாக அமைந்துள்ள கிரீஸ், இறுதியாக 1981 ஆம் ஆண்டு ஐரோப்பிய சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
27 நாடுகள் உள்ள ஐரோப்பிய யூனியனில் 10 வதாக தன்னை கிரீஸ் இணைத்துக் கொண்டது. 17 நாடுகளில் புழக்கத்தில் உள்ள யூரோவை 2001 ஆம் ஆண்டு தனது அதிகாரப்பூர்வமான நாணயமாக அறிவித்தது. தற்பொழுது கிரீஸ் திவாலாவதற்கு முக்கிய காரணமாகும்.
அயர்லாந்து நாட்டை திவாலாகாமல் தடுக்க என்னவெல்லாம் செய்தார்களோ, அது போலவே இன்னும் அதை விட கூடுதலாக விலை கொடுத்து கிரீஸை கரை சேர்க்க திவால் தடுப்பு நடவடிக்கையில் உலக வங்கியும் ஐரோப்பிய யூனியன் வங்கியும். இன்னும் யூரோ பழக்கத்தில் இல்லாத பிரிட்டன் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் களமிறங்கின.


கிரீஸ் திவால் தடுப்பு நடவடிக்கையில் இவை ஈடுபட்டது கிரீஸ் மக்களின் நலன் கருதி என நாம் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஜனநாயகம் பற்றி பேசும் மேற்கு நாடுகள் ஒரு பொழுதும் மக்கள் நலன் கருதி எதையும் செய்வதில்லை.

ஜனநாயக சக்கரத்தை தம் இஷ்டம் போல் சுழற்றும் தனியார் கார்பரேட் கனவான்கள், பங்குச் சந்தை சூதாடிகள், உள்நாட்டு-பன்னாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியன நஷ்டமடைந்து விடக் கூடாது என்பதற்காகவும், தாம் கடனாக கிரீஸிற்கு கொடுத்துள்ள பல ஆயிரம் கோடி டாலர் பணம் கடலில் கரைத்த பெருங்காயம் போல காணாமல் போய் விடக்கூடாது என்ற பயமே மேற்சொன்ன நடவடிக்கையில் இறங்குவதற்கான காரணமாகும்.
2000 ஆம் ஆண்டு முதல் அதாவது கிரீஸ் ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் ஆனது முதல் கிரீஸ் தனது வருமானத்தை (gdp) விட அதிகமான கடன்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தது. இவ்வாறு வாங்கி குவித்த கடன்கள் விவசாயம், மீன் பிடி போன்ற பாரம்பரிய தொழிற் உற்பத்தி (பெரும்பாலான மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிய) துறைகளில் முதலீடு செய்யப்படாமல் ஊதாரித்தனமாக செலவு செய்யப்பட்டன.
உயர்ந்து வந்த செலவை குறைப்பதற்கு பதிலாக ஊழலில் திளைத்த கிரீஸின் அரசியல்வாதிகள் உலகின் முன்னணி தனியார் பொருளாதார நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து செலவை வெளி உலகிற்கு தெரியாமல் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஐரோப்பிய யூனியனில் சேருவதற்காகவே தவறான புள்ளி விபரங்களை தந்ததாக கிரீஸ் மீது குற்ற சாட்டு இருந்தது.
கிரீஸின் தொடர் மோசடி முயற்சியில் 2008 ஆம் ஆண்டு திவாலான அமெரிக்க நிருவனமான கோல்ட்ஸ்மேன் சாக்ஸ் முக்கிய பங்கு வகித்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு கடன்சுமை கூடிக்கொண்டே போய் 2011 ல் கிரீஸின் gdp ஐ விட 160% அதிகமாகிப் போனது. கிரீஸை தலையில் வைத்து கொண்டாடிய அதே தனியார் பொருளாதார ஆலோசனை நிறுவனங்களும், மதிப்பீட்டு நிறுவனங்களும் கிரீஸை படுகுழியிலும் தள்ளின.
உலகின் பராக்கிரம பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனங்களான பிட்சி, ஸ்டாண்டர்ட் அண்ட் புவர், மூடி போன்றவை கிரீஸின் பொருளாதார மதிப்பீடுகளை தொடர்ந்து குறைத்து வந்தன. இதனால் கடன் வாங்கி காலத்தை ஒட்டி வந்த கிரீஸிற்கு புதிய கடன் கிடைப்பதிலும் சிக்கல்கள் உண்டாயின. பழைய கடனுக்கு வட்டி விகிதமும் அதிகரித்தது. இதனால் கிரீஸின் பொருளாதாரம் முன்னோக்கி நகரமுடியாமல் நிலை குத்தி நின்றது. இதனால் கிரீஸின் பணமான யூரோவின் மதிப்பு சரியத் துவங்கியது. இது யூரோ புழக்கத்தில் உள்ள மற்ற நாடுகளை பாதிப்படைய செய்தது.
இரண்டு கட்டங்களாக மொத்தம் 315 பில்லியன் டாலர்(16 இலட்சம் கோடி ரூபாய்) கிரீஸிற்கு இவ்வமைப்புகளால் வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் உதவியால் 510 பில்லியன் டாலர் (160% in gdp) ஆக உள்ள கடன் சுமை 382 பில்லியன் டாலராக (120% ) குறையும். அதுவும் அடுத்த 10 ஆண்டுகளில், இவ்வாறு வழங்கப்படும் பணம் பங்குசந்தை, பங்கு பத்திரம், முதலீட்டாளர்களுக்கு பங்கு வைக்கப்படும். இவ்வுதவிக்கு (அப்படிதான் சொல்லுகிறார்கள்!) கிரீஸ் கொடுக்க வேண்டிய விலை,
*1.5 இலட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
*தற்பொழுதுள்ள அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 22% வெட்டி எடுத்து வாங்கிய கடனிற்கும், அதற்கான வட்டிக்கும் தர வேண்டும்.
தற்பொழுது கிரீஸில் உள்ள 2ல் ஒரு இளைஞன் வேலையற்றவனாக உள்ளான். வேலை பார்க்க தகுதியுள்ள வர்க்கத்தில் 22% பேருக்கு வேலை தற்சமயம் இல்லை. இவர்களின் நலன் பற்றி கவலைப்படாமல் கடன் வழங்கியவர்களின் அத்தனை கெடுபிடி கட்டளைகளையும் சிரமமேற்று செயல்படுத்த வேண்டும்.
கிரீஸின் தற்பொழுதைய நிலை 1930 ல் அமெரிக்கா இருந்ததை விட மிக மோசமாக உள்ளது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
அமைதி பூங்காவாக சிறந்த சுற்றுலாதலமாக உலக நாடுகளுக்கு காட்டப்பட்ட கிரீஸில் ஏற்கனவே மக்கள் உணவுக்காக, வேலைக்காக, வாழ்வுக்காக வீதியில் இறங்கி போராட துவங்கியுள்ளனர்.
ஆப்கானிலும், ஃபலஸ்தீனிலும் பல்வேறு நாடுகளிலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருந்த பொழுது எள்ளி நகையாடிய மேற்குலகின் கூடாரத்திலேயே போராட்ட குரல் எழத் துவங்கி விட்டது. கிரீஸின் சரிவு ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமையும். ஏனெனில் போலியான ஆடம்பர வாழ்க்கையை அடைய அத்துமீறல் யுத்தம், இறுதியில் சரிவு. அதற்கான சரியான உதாரணம் கிரீஸ்.
கிரீஸின் பொருளாதாரம் சரியுமா அல்லது சரி செய்யப்படுமா என்று தொடர்ந்து வரும் மாதங்கள் தெளிவாக்க இருப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
*இப்ராஹீம்*

No comments:

Post a Comment