ஆம்..இந்த 95 வயது மூதாட்டி இந்த வயதிலும் கல்லூரிக்கு சென்று பட்ட படிப்பு படித்து வருகிரார் என்பது சிலருக்கு ஆச்சர்யத்தை தரலாம். இவர் பெயர் நோலா ஓச் (Nola Ochs) அமெரிக்காவில் ஹாய்ஸ் (HAYS) என்ற பகுதியில் அமைந்துள்ள போர்ட் ஹய்ஸ் மாநில பல்கலைகழகத்தில் (Fort Hays State University) வரலாறு சம்பத்தமான பாடத்தில் பட்ட படிப்பு படித்து வருகிறார்.
இவர் வகுப்பறையில் முதல் வருசையில் அமர்ந்து, ஆர்வமாக நடத்தபடும் பாடங்களை குறிப்பு எடுக்கிறார், கேட்கபடும் கேள்விகளுக்கு முதல் ஆளாக ஆர்வமாக பதில் அளிக்கிறார். வரும் மே மாதம் தனது பட்ட படிப்பை முடிக்க இருக்கும் இவர்தான் உலகிலேயே அதிக வயதில் பட்டம் பெற்றவர் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறபோகிறார்.இது சம்பத்தமாக அவர் கூறுகையில், உலக சாதனைக்காக நான் பட்ட படிப்பை படிக்க வில்லை, இன்று பணம் சம்பாதிப்பதர்காக மட்டும் கல்வி கற்கும் நிலை எங்கும் உள்ளது, ஆனால் ஏதாவது புதிதாக கற்க வேண்டும் என்ற எனது விருப்பதிற்காக நான் இங்கு சேர்ந்துள்ளேன் , இது எனக்கு மன நிம்மதியையும், திருப்தியையும் தருகிறது, என்று கூரும் இவருக்கு தற்போது 3 மகன் ( நான்காவது மகன் 1995 ல் இறந்துவிட்டாராம்) 13 பேரபிள்ளைகளும் உள்ளனர்.இவர் கணவர் 1972 ல் இறந்து விட தனது கோதுமை விளைநிலங்களையும், பண்ணையயையும் பராமரித்து வருகிறார்.
(வகுப்பறை வாசலில் காத்திக்கும் போது)
சக மாணவர்களை பற்றி கேட்கப்பட்டபோது. அனைவரும் தன்னை தங்கள் சக மாணவராக, தோழனாக ஏற்றுகொண்டதாகவும், மதிப்பதாகவும், மகிழ்ச்சியாக பதிலலிக்கிறார் . முதலில் நான் ஒரு மாணவன் பிறகுதான் மனைவி, தாய் என்ற எண்ணம் என்னுல் இருக்கிறது என்று கூரும் இந்த 95 வயது மூதாட்டியை பார்க்கும் போது ஆச்சர்யப் படாமல் இருக்க முடியவில்லை வயது தனக்கு ஒரு தடையள்ள மனதும், உடலும் இன்னும் இளமையாக இருப்பதாக கூருகிறார்.
(பல்கலைகழகம் நேக்கி காரில் பயணம்)
பட்டதாரியான பின் என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு , வேலை தேட போகிறேன் ஒரு storyteller (வரலாற்று நிகழ்வுகளை ஓவியம் ,எழுத்து, சிற்பங்கள் மூலம் விளக்கும் ஒரு கலை) பனி செய்ய விருப்புவதாக மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னாறாம்.
கல்வியின் மீது கொன்ட ஆற்வத்தால் , அதற்காக இந்த வயதிலும் ஓச் மேற்கொண்ட முயற்ச்சியையும் நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது.
வாழ்த்துக்கள் ஓச்
No comments:
Post a Comment