மாநில அரசின் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப் பெற தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளஸ் 1, பிளஸ் 2, ஐ.டிசி - என்.சி.வி.டி, பாலிடெக்னிக், நர்சிங் பட்டய படிப்பு, ஆசிரியர் பயிற்சி, இளநிலை பட்டப்படிப்பு, எம்.பில், பி.எச்டி போன்ற படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமாணம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்ற உதவித்தொகை பெற முடியாது.
பள்ளி படிப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கல்வி நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். கல்லூரி படிப்பு பயிலும் மாணவர்கள் www.momascholarship.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த விண்ணப்பத்தை நகல் எடுத்து அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கான வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் (ஐ.எப்.சி கோடுடன்)இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் கல்வி நிறுவனத்திந்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் பள்ளி மாணவர்கள் ஜூலை 31ம் தேதி வரையிலும், கல்லூரி மாணவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விரிவான விவரங்கள் அறிய இணையதளத்தை பார்க்கலாம். .
No comments:
Post a Comment