Saturday, December 31, 2011

மக்கள் கொடுத்த லஞ்சம் ரூ.471 கோடி…!


மக்கள் கொடுத்த லஞ்சம் ரூ.471 கோடி…!இந்திய ஊழல் ஆய்வு 2010 என்ற தலைப்பில், மீடியா ஆய்வு மையம் என்கிற தன்னார்வ அமைப்பு 12 மாநிலங்களில் ஆய்வு நடத்தியது. வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரா, சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் நடத்திய இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் கூறப்பட்ட தகவல்:நாட்டில் ரேஷன்கார்டு, சுகாதாரம், கல்வி, தண்ணீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளைப் பெற, கிராமப்புற மக்கள் கடந்தாண்டில் மட்டும் 471 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளனர்.

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!


குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.
“என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.

வருவாயை அள்ளித்தரும் வாழை நார்


தமிழகத்தின் மிக முக்கியமான பணப்பயிர்களில் வாழையும் ஒன்று. புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும்கூட, பெரும்பாலும் நல்ல வருமானம் தரக்கூடியது. இந்தியாவில் சுமார் 6,45,000 ஹெக்டேரில் வாழை பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1,15,000 ஹெக்டேரில் பல்வேறு ரகங்களில் வாழை பயிரிடப்படுகிறது.

ஆயிரங்களை அள்ளித்தரும் ஆடு வளர்ப்பு!

வான்கோழி, காடை, ஈமு என வகை வகையாக இறைச்சிகள் இருந்தாலும், நாட்டுக்கோழிக் கறிக்கும் வெள்ளாட்டுக் கறிக்கும் உள்ள மவுசு குறைவதேயில்லை. எப்போதுமே சந்தையில் அவற்றுக்கான கிராக்கி உச்சத்தில்தான். அவற்றின் விலையே இதற்கு சாட்சி. அதனால்தான் விவசாயத்தோடு சேர்த்து, ஆடு, கோழி என வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டே தொடர்கிறது.

Monday, December 26, 2011

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரை சேர்பது எப்படி.?


வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரை சேர்பது எப்படி.?

தமிழக தேர்தல் ஆணையத்தின்


இணையத்தில்http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp சென்று உங்கள் மாவட்டம் மற்றும் தொகுதி விபரங்களை அளித்து உங்கள் பகுதியின் வாக்காளர் பட்டியளை பார்வையிட்டு பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியளில் ‍சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்திலேயே http://www.elections.tn.nic.in/forms.htmபடிவங்கள் அணைத்தும் உள்ளன இணையிறக்கம் செய்து ‍கொள்ளவும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் அளிக்கும் மனுக்களை பெற்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

இதனால் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்கும் வரையில் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கலாம்.