Tuesday, February 28, 2012

மூட்டை பூச்சி அளிக்க சில சுலபமான் வழிகள்

மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன





வகைகள்
பொதுவான மூட்டைப்பூச்சி வகையான (Cimex lectularius) மனிதன் வாழும் சூழ்நிலைகளில் வாழும். மித வெப்பமண்டல பிரதேசங்களில் உலகம் முழுதும் வாழும் இவை மனித இரத்தத்தைப் பருகி உயிர் வாழ்பவை. மற்றொரு வகை (Cimex hemipterus) வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. இவை மனிதன் மட்டுமின்றி, பறவைகளையும், வௌவால்களையும் தாக்க கூடியவை. மேற்கு ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணக்கூடிய வகை(Leptocimex boueti) வௌவால்களையும் மனிதனையும் தாக்குபவை. Cimex pilosellus மற்றும் Cimex pipistrella என்ற இரண்டு வகையானவை பொதுவாக வௌவால்களை அதிகமாக தாக்க கூடியவை. வட அமெரிக்காவில் வாழும் (Haematosiphon inodora) வகை மூட்டைப்பூச்சிகள் பொதுவாக பறவைகளைத் தாக்குபவை.

உடலமைப்பு
வளர்ந்த மூட்டைப்பூச்சி சிவந்த அரக்கு நிறத்தில் தட்டையாக, முட்டை வடிவத்தில் இறக்கையில்லா உடலமைப்பினை கொண்டது. மிக நுண்ணிய முடிகளை உடல் முழுதும் கொண்டிருக்கும். 4-5 மிமீ வரை நீளம் வரை வளரும். புதிதாய் முட்டை பொரித்த மூட்டைப்பூச்சிகள் வெளிறிய நிறத்தில் ஒளிபுகும் வண்ணம் தோலைக்கொண்டதாக இருக்கும். மூட்டைப்பூச்சிகளை மனிதக்கண்களால் காணமுடியாது என்ற தவறானதொரு நம்பிக்கை உண்டு

உண்ணும் முறைகள்












பொதுவாக மற்ற உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில்தான் மனித இரத்தத்தைக் குடிக்க முயல்கின்றன. மனதனின் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவை இவற்றை மனிதனிடம் ஈர்க்கின்றன.
இப்பூச்சிகள் இரதத்தை உறிவதற்கு மனிதனின் சதையில் இரண்டு குழல்களை செலுத்துகின்றன. ஒரு குழல் மூலம் தனது உமிழ்நீரை செலுத்திட, அதில் வலியை மறக்கடிக்கச் செய்யும் இரசாயனங்கள் இருப்பதால், அவை கடிக்கும் வலியினை மனிதன் உணருவதில்லை. ஏறத்தாழ ஐந்து நிமடத்திற்கு இரத்ததை உறிஞ்சிய பின், அவை தமது இருப்பிடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்கின்றன.

மனிதனுக்கு ஏற்படக் கூடிய உடல்நலக் கேடுகள்

இவை கடிப்பதால், மனிதன் தோலில் அரிப்புகளும், ஒவ்வாமையால் ஏற்படும் தோல் தொடர்பான வியாதிகளும் ஏற்பட வாய்ப்புண்டு

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டி.டி.டி(D.D.T) மருந்து உபயோகத்தின் மூலமாக முற்றிலுமாக அழிக்கப் பட்டிருந்த மூட்டைப் பூச்சிகள் மீண்டும் நியூயார்க் போன்ற நகரங்களை நோக்கிப் படையெடுத்து வந்துள்ளன. கரப்பான் பூக்கிகளுக்கும் எலிகளுக்கும் பழக்கப்பட்ட நியூயார்க் நகர மக்கள், இப்போது மூட்டைப் பூச்சிகளைப் பற்றி ஆரம்பப் பாடம் படிக்கிறார்கள்.மூட்டைப் பூச்சிகளைப் பற்றி தகவலை மக்களுக்கு அளிக்க ஒரு இணையதளத்தையும் உருவாக்கி உள்ளது நியூயார்க் மாநகரம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் மூட்டைப் பூச்சிகளின் ஆதிக்கம் இங்கு எழுபத்தியொரு சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது. நியூயார்க்கின் இப்போதைய பெயர் மூட்டைப் பூசசிகளின் தலைநகரம் இந்த நகரம் 500,000.00 டாலர் தொகையை மூட்டைப் பூச்சிகளைக் கொல்வதற்கும், மக்களிடையே விழிப்புணர்வப் பரப்பவும் செலவிட்டிருகிறது.


பகல் முழுவதும் ஒளிந்து இருக்கும மூட்டைப் பூச்சிகள் இரவில் வெளிவருகின்றன. இரத்தைதைக் குடித்து வாழும் இந்தப் பூச்சிகளைக் முற்றிலுமாக அழிப்பது ஒருகடினமான செயல். ஒருவர் கடிபடும் உணர்ச்சியோ கடியின் வலியோ தெரியாத்தனால் இவை உடனடியாக் கொல்லப்படுவதில்லை. படுக்கையின் ஓரங்களில் கரும்புள்ளிக் குவியலாக இருக்கும் மூட்டைப் பூச்சிகள் தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ஒரு வலி போக்கும் திரவத்தை நம் உடலுக்குள் செலுத்துகின்றன. அதனால் அவைக் கடிப்பது யாருக்கும் தெரிவதில்லை.

ஆனால் சிறிது நேரத்திலோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் கழித்தோ உடலில் தடிப்புக்களும் அரிப்பும் இருக்கும். மூட்டைப் பூச்சிகள் பதுங்க இடம் தேடி அலைந்து கொண்டு இருப்பதால் அவை எல்லா மூலை முடுக்குகளிலும் ஒளிந்து கொள்கின்றன. பகலில் இவை கண்களுக்குத் தெரிவதில்லை. நமது பெட்டிகளுக்குள்ளும் உடைகளுக்குள்ளும் ஏறிப் பதுங்கிக் கொள்ளும் இந்த அருவருப்பான பூச்சி அதிக அளவிற்கு அதிவேகமாகப் பரவ காரணம் சுற்றுப்புற தூய்மையின்மை என்றுக் கூற முடியாது.மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு இங்கே மக்களிடம் இல்லாதது தான். கிட்ட்த்தட்ட ஒரு தலைமுறைக்கு மூட்டைப் பூச்சி என்ற ஒரு பூச்சி இருப்பதே அமெரிக்கர்களுக்குத் தெரியாது.

ஒரு பெண் மூட்டைப் பூச்சி ஒரு முறைக்கு ஐநூறு முட்டைகள் இருக்கிறது. வழவழப்பானச் சின்ன சின்ன முட்டைகள் எதிலும் ஒட்டிக் கொள்ளும்.அதனால் மூட்டைப் பூச்சிகளின் குடியேற்றம் ஒரு இட்த்திலிருந்து இன்னோரு இட்த்திற்கு எளிதாகிறது. மேலும் இரத்த்த்தை மட்டும் குடித்து வாழும் இந்த பூச்சி இனங்களால் ஒரு வருடம் இரத்தமில்லாமல் வாழ முடியும்.இந்தப் பூச்சி இனங்கள் மனிதர்கள் மட்டுமில்லாமல் எலி, வெளவ்வால் அணில் போன்ற கொறித்துத் தின்னும் பிராணிகள் மூலமாகவும் பரவலாம். டி.டி.டி(D.D.T) பூச்சிக் கொல்லி மருந்துகள்    பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருப்பதாலும் மூட்டைப் பூச்சிகள் பெருக ஆரம்பித்து இருக்கின்றன.

இந்தியக் கட்டங்களைப் போல் சிமெண்ட்டாலும் செங்கலாலும் கட்டப்படாமல் மரத்துகள்களால் செய்யப்பட்ட மர அட்டைகளால் கட்டப்படும் அமெரிக்க்க் கட்டிடங்களிலிருந்து மூட்டைப் பூச்சிகளை வெளியேற்றுவது மிக க் கடினமாக உள்ளது. நம் நாட்டைப் போல கட்டிடங்களைக் கழுவி விட முடியாது. வெளிப்புற அட்டைச்சுவருக்கும் உட்புற அட்டைச் சுவருக்கும் நடுவில் குளிர் வரமால் தடுக்க வைக்கும் செயற்க்கைப் பஞ்சுகளும் தரையில் போடப்படும் கார்பெட் என்ற கம்பளங்களும் மூட்டைப் பூச்சிகள் பதுங்கிக் கொள்ளவும் ஒரே கட்ட்டிட்த்தின் ஒரு மூலையிலிருந்து இன்னோரு மூலைக்கு மூட்டைப் பூச்சிகள் ஊர்ந்து செல்லவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இயந்திரத்தாலேயே துவைத்துக் காய வைக்கும் பழக்கத்தால் மூட்டைப் பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள் அமெரிக்க மக்கள்.

குழந்தைகளின் தலையில் பேன் இருந்தாலே பள்ளிக்கு வரக்கூடாது என்ற எழுதாதச் சட்டம் கொண்ட அமெரிக்க சமுதாயத்தில் இந்த கடுகளவுப் பூச்சிகள் பரபரப்பை உருவாக்கியுள்ளன. செய்தி நிறுவனங்களுக்கு அன்றாட ருசிகரத் தகவல்களைத் தீனி போடுவது மட்டுமல்லாமல் ஒரு பிரபலாமன பொழுது போக்கு அம்சமாக மூட்டைப் பூச்சிகள் அவதாரம் எடுத்துள்ளன. மூட்டைப் பூச்சிகளினால் பரவக் கூடிய நோய்கள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகளும் மூட்டைப் பூச்சிகளைக் கொல்வது பற்றிய ஆராய்ச்சிகளும் நடந்து வருகினறன.

மூட்டைப் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத மக்கள் அதிவீரியமுள்ள பூச்சிக் கொல்லிகளைப் வீட்டுக்குள் பயன் படுத்தி குழந்தைகளுக்கும் , செல்லப் பிராணிகளுகும் கேடு விளைவிக்க வாய்ப்புக்கள் அதிகரித்து வருகிறது. மனிதனின் கண்கள் மற்றும் தொண்டையை எரிச்சல் படுத்தும் இரசாயனப் பொருட்களும், மனித நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கும் மருந்துகளும் பொது மக்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஐம்பது ஆண்டுகளாக மூட்டைப் பூச்சிகளை மறந்திருந்த அமெரிக்க சமுதாயம் செப்ட்ம்பர் மாதம் சிக்காகோ நகரில் மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நட்த்துகிறது. பூச்சியின அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்து இந்தக் கருத்தரங்கில் குவிந்திருகின்றனர்.

மூட்டை பூச்சி அளிக்க சில   சுலபமான வழிகள்
 
114.8ºF அல்லது 46ºC க்கு அதிகமான வெப்ப நிலையில் மூட்டைப் பூச்சிகள் இறந்து போவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அதிக அளவு வெப்பத்தை சுமார் ஏழு நிமிடங்களுக்கு கட்ட்டங்களின் எல்லா அறைகளிலும், இடுக்குகளிலும் செலுத்தி மூட்டைப் பூச்சிகளைக் கொல்லும் முறை சில இடங்களில் செயல்படுத்தப் படுகிறது. சுற்றுச்புற சூழ்ஃஇலைக்கும் சுற்றி வாழ் உயிரின்ங்களுக்கும் தீங்கு விழைவிக்காத இந்த முறை ஒருவரின் வங்கித் தொகைக்கு ஒரு வேட்டு வைக்கிறது.

இன்னோரு கல்லூரி ஆராய்ச்சியில் பாட்டிலில் போடப்பட்ட திடப்படுத்தப்பட்ட கார்பன்டை ஆக்ஸைட்() மூட்டைப் பூச்சிகளை கவர்ந்திழுப்பதோடு அவற்றைப் பிடிக்கும் ஒரு பொறியாகவும் பயன் படுத்த முடியும் என்று தெரிகிறது.

Electric Steamer
The Electric Power Steamer kills bed bugs contact. Bed bugs are particularly succeptible to heat, which is why steaming can be a very effective way to kill bed bug and mite infestations in your home in tight and hard to reach places.
 முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள்.

நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். .
மச்கிங் டேப்   கொண்டு ஒட்டி பிடிக்ககும்




இல்லை என்றல் அதை விட எளிமையான வழி  கீழ் உள்ள  படம் பார்க்கவும்


9 comments:

  1. another one way to kill moota poochi when u saw that take and put in to water it is automatically dead

    ReplyDelete
  2. Pour the room with hot water, entirely will be dead.

    ReplyDelete
  3. Ethu pole palli alipathu epdi ??

    ReplyDelete
  4. Bloody idiot tell me the right way to kill moota poochi

    ReplyDelete
  5. வெளவ்வால் அழிப்பது எப்படி

    ReplyDelete
  6. ஏற்கனவே கடிபட்டு விட்டேன். . இப்போது வலிக்கிறது .. நான் என்ன செய்ய வேண்டும் ?

    ReplyDelete
  7. Sir mutta poochiya azipathu eppadi sir plese

    ReplyDelete