Wednesday, June 6, 2012

`கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவி


Bosch Develops Drowsiness Detection System

கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவியை பாஷ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கருவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், ஜெர்மனி நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவியை பாஷ் உருவாக்கியுள்ளது.

ஸ்லீப் ஓ மீட்டர் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி டிரைவிங் செய்யும்போது தூங்கினால் ஸ்டீயரிங் வீலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து இந்த கருவி டிரைவர் தூங்குவதை கண்டுபிடித்து எச்சரிக்கும். மேலும், காரின் வேகம், ஆக்சிலேட்டர் உள்ளிட்டவற்றின் மாற்றங்களையும் இந்த கருவி கண்காணித்து டிரைவர் அயர்ந்துள்ளதை கண்டுபிடித்து எச்சரிக்கும்.

தற்போது சொகுசு கார்களில் இந்த தொழில்நுட்பம் இருக்கிறது. இருப்பினும், இந்த கருவி மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்ய பாஷ் திட்டமிட்டுள்ளதால் சாதாரண ரக கார்களிலும இந்த கருவியை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த கருவி மூலம் டிரைவர் அயர்ந்து விடும்போது ஏற்படும் விபத்துக்களை கணிசமாக குறைக்க முடியும் என்று கருதப்படுகிறது

No comments:

Post a Comment