Thursday, June 7, 2012

கார்களுக்கான பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் கேமரா- சிறப்பு பார்வை

சாலையில் கார் ஓட்டுவதில் சிறுத்தையாக சீறினாலும் பலருக்கு, பார்க்கிங் செய்யும்போது தடுமாற்றம் ஏற்படுவது இயல்பு. மே லும், குறுகலான சாலைகளில் திருப்ப முடியாமல் பின்னால் வாகனத்தை செலுத்த வேண்டியிருக்கும்போது பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
Car Parking Sensor Special Review குறிப்பாக, நகர்ப்புறங்களில் தற்போது இருக்கும் இடைஞ்சல்கள் நிறைந்த பகுதிகளில் பார்க்கிங் செய்வதே சவாலான விஷயமாக இருக்கிறது. மேலும், பார்க்கிங் செய்யும்போது பின்னால் இருக்கும் வாகனம் அல்லது பொருட்களை இடித்து விட்டால் அந்த கார் உரிமையாளரிடம் அர்ச்சனையையும் வாங்கிக் கட்டிக்கொண்டு, பணத்தையும் கொடுக்க வேண்டியிருக்கும்.

மேலும், நம்முடைய காரும் சேதமடைந்தால் இரட்டிப்பு நஷ்டம். இந்த பிரச்னையை போக்குவதற்கான தொழில்நுட்பம்தான் பார்க்கிங் சென்சார். சிலருக்கு ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார் இரண்டிலும் குழப்பம் இருப்பதுண்டு. ஆனால், இரண்டிற்கும் வேறுபாடுகள் அதிகம்.

பார்க்கிங் சென்சார்:

காருக்கு முன்னும், பின்னும் பம்பரில் பார்க்கிங் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் பின்பக்க பம்பரில்தான் பொருத்துகின்றனர். காரை பின்னால் எடுக்கும்போது காரின் மீது இடிக்கும் வகையில் ஏதேனும் பொருட்கள் அல்லது வாகனங்கள் இருந்தால் 'பீப்' ஒலி எழுப்பி டிரைவரை எச்சரிக்கும்.

ரிவர்ஸ் எடுக்கும்போது கண்ணுக்கு மறைவாக இருக்கும் பொருட்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். பார்க்கிங் சென்சார்களை எளிதாக பொருத்திவிடலாம். தற்போது நீங்கள் எத்தனை சென்சார்கள் பொருத்த விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்து ரூ.3,000 முதல் ரூ.5000 வரையிலான விலையில் பார்க்கிங் சென்சார்கள் கிடைக்கின்றன.

ரிவர்ஸ் கேமரா:

காரின் பின்புறத்தில் மட்டும் ரிவர்ஸ் கேமரா பொருத்தப்படுகிறது. காருக்குள் டிரைவருக்கு முன்னால் இருக்கும் வீடியோவை காட்டும் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும். இந்த திரை ரிவர்ஸ் கேமராவுடன் இணைக்கப்பட்டிருக்கும். காரை பின்னால் எடுக்கும்போது நீங்கள் திரும்பி பார்க்க வேண்டாம். திரையை பார்த்துக்கொண்டே காரை பின்னால் எடுக்க முடியும்.

காருக்கு பின்னால் இருக்கும் பகுதியை முழுவதுமாக காட்டும். ரூ.10,000 முதல் பிராண்டட் ரிவர்ஸ் கேமரா மார்க்கெட்டில் கிடைக்கின்றன. பார்க்கிங் சென்சார் மற்றும் ரிவர்ஸ் கேமரா இரண்டும் அடங்கிய கிட்டும் தற்போது கிடைக்கின்றன. இவை மொத்தமாக ரூ.15,000 விலையில் வாங்கலாம்.

No comments:

Post a Comment