Sunday, April 22, 2012

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் தொடர்பான முழு தகவல்கள் – TET


  1. Tamil Nadu Teacher Eligiblity Test (TNTET) – 2012 Advertisement and Prospectus
  2. Tamil Nadu Teacher Eligiblity Test (TNTET) – 2012 Model Question Paper and Syllabus for Paper I and Paper II


Teacher Eligibility Test

* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.

* ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள்.


* ஆறு முதல் எட்டு வகுப்பு வரை கற்பிக்கும் அறிவியல் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள்.


* ஆறு முதல் எட்டு வகுப்பு வரை கற்பிக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் சமுக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள்.

CLICK HERE TO DOWNLOAD

*
குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில்,தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

* 6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க,இச்சட்டம் வழிவகை செய்கிறது.

* கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை,தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.

* இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை,ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும்.

* இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ளது.

* ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்யும் படி அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.

* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.

* முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150

1. Child Development and Pedagogy – 30 மதிப்பெண்

2. Tamil or other language - 30 மதிப்பெண்

3. English - 30 மதிப்பெண்

4. Maths - 30 மதிப்பெண்

5. Environmental studies - 30 மதிப்பெண்

* இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.

1. கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் :

1. Child Development and Pedagogy – 30 மதிப்பெண்

2. Tamil or other language - 30 மதிப்பெண்

3. English - 30 மதிப்பெண்

4. Maths and Science - 60 மதிப்பெண்

2. சமுக அறிவியல் ஆசிரியர் :

1. Child Development and Pedagogy – 30 மதிப்பெண்

2. Tamil or other language - 30 மதிப்பெண்

3. English - 30 மதிப்பெண்

4. Social Studies - 60 மதிப்பெண்

3. தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு :

1. Child Development and Pedagogy – 30 மதிப்பெண்

2. Tamil or other language - 30 மதிப்பெண்

3. English - 30 மதிப்பெண்

4.Maths&Science அல்லது Social Studies - 60 மதிப்பெண்

* சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில்Maths, Science and Social Studies என இரண்டும் எழுதவேண்டும்.

* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150 க்கு 90 மதிப்பெண் பெறுவோர்,தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.

* TET தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.

* தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி.,முடித்திருக்க வேண்டும்.அவர்கள் முதல் தாள் எழுத வேண்டும்.

* பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டாம் தாள் எழுத வேண்டும்.

* இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு (டி.டி.இ.டி) இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும். பி.எட். இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும் இத்தேர்வில் பங்கு கொள்ளலாம்.

* தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் அவர்கள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.
*
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.

* விண்ணப்பத்தின் விலை ரூ.50.

* விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து`ஸ்டேட் பாங்க்கில் ரூ.500 செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 4-ந்தேதி கடைசி நாள்.

* ஆசிரியர் தேர்வு எழுத பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

* 8 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.



நன்றி
K.K.Devadoss, M.Sc, M.A,M.Phil,M.Ed.,M.B.A


No comments:

Post a Comment