அட்லாண்டிக் கடலில் 100 ஆண்டுக்கு முன் மூழ்கிய டைட்டானிக்
கப்பலில் கிடைத்த 5,000 அரிய பொருட்கள் அந்த கப்பலின் 100வது ஆண்டு நினைவை முன்னிட்டு ஏப்ரலில்
ஏலம் விடப்படுகின்றன. 2007ம் ஆண்டில் இந்த பொருட்கள் ரூ.1,000 கோடி என மதிப்பிடப்பட்டன.
கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்தின் சவுத்ஹாம்ப்டான்
பகுதியில் இருந்து டைட்டானிக் சொகுசு பயணிகள்
கப்பல் அமெரிக்காவின் நியூயார்க் செல்ல புறப்பட்டது. மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல், மிக நவீன வசதிகளை கொண்டிருந்தது.
தனது முதல் பயணத்தின்போதே வடக்கு
அட்லான்டிக் கடலில் மிகப் பெரிய பனி பாறையில் மோதி உடைந்து மூழ்கியது.
கப்பலில் சென்ற பெரும்பாலான பயணிகள் பரிதாபமாக இறந்தனர். அதன்பின், பல தனியார் நிறுவனங்கள், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்தன. அதில்
இருந்து பல அரிய பொரு ட்களை மீட்டு வந்தன.
இந்நிலையில், கப்பலில் கிடை த்த மிகச்சிறிய ஹேர்பின் முதல் கப்பலின் உடைந்த இரும்பு பாகங்கள்
வரை 5,000 அரிய பொருட்களை வரும் ஏப்ரலில் ஏலம்விட அமெரிக்காவின் நியூயார்க்
குர்ன்சே ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இப்போது டைட்டானிக் 100 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கப்பலில் பொருத்தி இருந்த கலைநயமிக்க பாகங்கள், பயணிகளின் பர்ஸ், கூலிங் கிளாஸ்கள், உடைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் உள்பட பல பொருட்கள் ஏலத்துக்கு தயாராக உள்ளன.
எனினும், டைட்டானிக் பொருட்களை தனியாருக்கு விற்க கூடாது. பொருட்களை
ஏலம் எடுப்பவர்கள், அவற்றை நன்கு பராமரிக்கவும், அவ்வப்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கவும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்பவர்களுக்கே டைட்டானிக் பொருட்களை விற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் விபத்துக்கு உள்ளான டைட்டானிக் கப்பலின்
உடைந்த பாகங்கள் யுனெஸ்கோவின் கட்டுப்பாட்டிற்குள்
வரவுள்ளன.
உலகப் புகழ் பெற்ற பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக், கடந்த 1912ம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 15ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது.
வரவுள்ளன.
உலகப் புகழ் பெற்ற பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக், கடந்த 1912ம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 15ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது.
இரண்டு துண்டாக உடைந்த கப்பலின் பாகங்கள் கடலுக்கு அடியில் 4,000 மீட்டர் ஆழத்தில் கிடக்கின்றன.
சர்வதேச கடல் எல்லையில் இருப்பதால் இதற்கு எந்த நாடும் உரிமை கோர முடியாது. மேலும் கடலுக்கடியில் புதைந்த, மூழ்கிய கலாச்சார சின்னங்கள், பொருட்களை குறைந்தது 100 ஆண்டுகள் கழித்து தான் உரிமை கொண்டாட முடியும்.
அந்த வகையில் ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு(யுனெஸ்கோ) டைட்டானிக் கப்பலில் இருந்த கலை நயமிக்க பொருட்கள், கலாச்சார சின்னங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர உள்ளது. வரும் 15ம் தேதியுடன் டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
உடைந்த கப்பலின் பாகங்கள்
உடைந்த பாகங்களை கிரைன் முலம் கடலுக்கு அடியில் இருந்து
எடுக்கப்படுகின்றது
எடுக்கப்படுகின்றது
யுனெஸ்கோவின் கட்டுப்பாட்டிற்குள் வரவுள்ளன
No comments:
Post a Comment