கூகுளின் புதிய பிரைவசி பாலிஸி மார்ச் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாலிஸியின்படி, கூகுளின் சகல சேவைகளையும் பயன்படுத்தும் நபர்கள் தொடர்பான தனிப்பிட்ட தகவல்களை அவர்கள் ‘பிற தேவைகளுக்காக’ சேகரிக்க தொடங்கியுள்ளார்கள். சேகரித்த தகவல்களை தமக்கு பயன்படக்கூடிய எதற்கும் அவர்கள் பயன்படுத்துவதில் தடை ஏதும் கிடையாது.
ஜி-மெயில், கூகுள் குரோம் என்று துவங்கி சுமார் 50 சேவைகளை கூகுள் வழங்குகிறது. இந்த அனைத்து சேவைகளில் எதை நீங்கள் பயன்படுத்தினாலும், உங்களைப் பற்றி நீங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொடுக்கும் தகவல்களை கூகுள் இஷ்டம்போல உபயோகித்துக் கொள்ளலாம் என்பதே புதிய பாலிஸி.
தமது புதிய பாலிஸியை ஏற்றுக் கொள்ளாதவர்கள், பிப்ரவரி 29 தினத்துடன் குறிப்பிட்ட சேவைகளை உபயோகிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் எனவும் கூகுள் அறிவித்து விட்டுத்தான், புதிய பாலிஸியை அமல்படுத்தியது.
இந்த புதிய பாலிஸிக்கு இதுவரை இரு நாடுகளில் இருந்து மட்டும் எதிர்ப்பு வந்துள்ளது. வேறு சில நாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸின் தேசிய தகவல் பாதுகாப்பு ஏஜென்சியான CNIL, கூகுள் சி.இ.ஓ. லேரி பஜேவுக்கு அனுப்பிய கடிதத்தில், கூகுளின் புதிய பாலிஸி தொடர்பாக தாம் முடிவு எடுக்கும்வரை அதை அமல்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதை கூகுள் உதாசீனம் செய்துவிட்டது.
அடுத்த எதிர்ப்பு ஜப்பானில் இருந்து வந்துள்ளது. ஜப்பானின் தகவல் பாதுகாப்பு சட்டப்படி, தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட தகவல்களை, யாரும் சேகரித்து வைத்து, பின்னாட்களில் உபயோகிக்க முடியாது. கூகுளின் பாலிஸிக்கு எதிராக உள்ளது இந்தச் சட்டம் என ஜப்பானிய அரசு சுட்டிக் காட்டியது.
அதற்கு கூகுள் கொடுத்துள்ள பதில், “உங்கள் நாட்டுப் பிரஜைகள் கூகுளை உபயோகிக்காமல் விட்டால், எமது பாலிஸி பற்றி அவர்களோ, அவர்கள் சார்பில் நீங்களோ, கவலைப்பட தேவையில்லை!”
குளோபல் மார்க்கெட் ஷேரில் பெரிய சதவீதத்தை வைத்திருப்பதால் கூறப்பட்ட ‘தில்’லான பதில் அது!
இதை நிர்வகிப்பது யார் .....................சொல்வதற்கு ஒன்றும் இல்லை .
No comments:
Post a Comment