Monday, March 5, 2012

நம் வாழ்கையில் காணமல் போன சில பொருட்கள்-பாகம் -3



1990க்கு பிறகு வாழ்கை இயந்திரமாயமாக ஆகி போனபிறகு நம் உபயோகப் படுத்தும் சில பொருட்கள் கண்ணில் கூட பார்க்க முடியாமலும், இப்ப இருக்கும் தலைமுறைகளுக்கு அது என் என்றும் கூட தெரியாத நிலைக்கு உள்ளது.

உதாரணமாக : நம்மாளுங்க அந்தக் காலத்துல இருந்தே ஒவ்வொரு வேலைகும் ஒவ்வொருவிதமானக் கருவிகள கண்டுபிடிச்சு பயன்படுத்திக்கிட்டுதான் வந்திருக்காங்க.


அரிவாள்மணை, அருவா, ஏத்தம் இறைக்கு சால், கட்ட வண்டி, லாந்தர் விளக்கு, ஆழ கரண்டி, கிணற்றி நிர் இரைக பயன் படும் வாளி, உருளை, கயறு . கடப்பாரை, உலக்கை, செக்கு, ஆட்டுக்கல், வாய்ப்பொட்டி, மூங்கில்முறம், கோடாரி, மண்வெட்டிக் , இரும்புக் கொடுவாள், திருகை, அம்மி, கொடாப்பு, சுத்தி, மத்து, வெள்ளம் காய்ச்சும் அடுப்பு, படி, வல்லம், தொரட்டு, சல்லடை... என்ன தலை சுத்துற மாதிரி இருக்கா?

அதற்காக பல நாட்கள் முயற்சி செய்து, வலைதளத்தி தேடி எடுக்கப்பட்ட பல விசயங்களை இங்கு தொகுத்து உள்ளேன். சில பொருட்கள் இன்னும் தேடியும் கிடைக்காத சுழ்நிலையில் உள்ளது.

இங்கு தொகுக்கப்பட் பொருட்கள், வருங்கலத்தில் IAS & IPS தேர்வுகளில் கேட்க படும் முக்கியமான கேள்வியாக இருந்தாலும் ஆச்சறியபடுவதற்கு இல்லை.

ஒட்டியாணம்
ஒட்டியாணம் என்பது பெண்கள் இடையில்/இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களின் போது அணியப்படுகிறது. அத்துடன், பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான உடையலங்காரத்திலும் ஒட்டியாணம் இடம்பெறுவதோடு, வரலாற்று நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் முற்காலக் கதை மாந்தர்களின் அணி வகைகளிலும் ஒட்டியாணம் இடம் பெறுவதைக் காண முடியும்.
இந்த அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி
ஒட்டியாணம் பெரும்பாலும் தங்கத்தில் செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசிய ஒட்டியாணங்கள் விலைக்கும், வாடகைக்கும் கிடைக்கின்றன. சில ஒட்டியாணங்கள் எளிமையானங்கள் வடிவமைப்புக் கொண்டவையாக இருக்கும் அதே வேளை, நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட ஒட்டியாணங்களும் உள்ளன. வேலைப்பாடுகளைப் பொறுத்து ஒட்டியாணங்களின் மதிப்பும் வேறுபடும். தனி உலோகங்களால் மட்டுமன்றி கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணங்களும் செய்யப்படுகின்றன.
ஒட்டியாணம் பொதுவாக உடைக்கு வெளியிலேயே அணியப்படுகின்றது. எனினும் பண்டைத் தமிழர்கள் இடையணிகளை உடைக்குள்ளும் அணிந்ததாகத் தெரிகிறது. இத்தகைய இடையணிகள் நுண்ணிய உடையினூடாகத் தெரிவது பற்றியும் இலக்கியங்கள் கூறுகின்றன. இடையணிகளை ஆடைகளின் மேல் அணிந்து கொள்வது பற்றிய தகவல்களையும் இலக்கியங்கள் தருகின்றன
 தண்டட்டி அல்லது பாம்படம் 
தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலனாகும். தென்னிந்திய கலாச்சாரங்களில், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த அணிகலன்கள் அணியப்படுவதில்லை எனினும் வயதான சிலர் இன்னும் இதை அணிந்து கொண்டிருக்கின்றனர். இதை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர். இந்த காதணி அணிவதற்காகவே காது வளர்க்க வேண்டியிருக்கும். இதற்காக அந்தக் காலப் பெண்கள் காது வளர்த்தனர்.

அணிகலங்களுக்கு அல்லது நகைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சம். பொன்னாலும் நவமணிகளாலும் (வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) ஆன அணிகலன்களே தமிழருள் மதிப்பு பெற்றவை. "அம்மதிப்பு பணமதிப்பு (பொருள் மதிப்பு) மனமதிப்பு என இரண்டாகும்." இத்தகைய தமிழர்களால் ஆக்கப்பட்ட அணியப்பட்ட அணிகலன்களைத் தமிழர் அணிகலன்கள் எனக் குறிக்கலாம்.
பொருளாதார ரீதியிலும் தமிழர் தமது சேமிப்பை பொன் நகைகளாக மாற்றி வைத்தனர். நீண்ட காலமாக பொன் பணத்துக்கு ஈடாக இருந்ததும்
கொலுசு
கொலுசு ஒரு கவர்ச்சி கூட்டும் பாத அணிகலன். சிலம்பு, கொலுசு, மெட்டி ஆகியவை இந்தியப் பெண்களால் காலில் அணியப்படும் அணிகலன்கள். வளர்ந்த நாகரிகம் மற்றும் பண்பாடுகளில் வாழ்ந்த பெண்கள் தங்கள் கவர்ச்சியைக் கூட்டவும், செல்வச் செழிப்பினை காட்டவும் கொலுசு அணிந்தனர்.
சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசப்படோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் கொலுசை பயன்படுத்தியதாக அறிகிறோம். பழங்காலத்தில் எகிப்தியர்கள் கால் பாத அணி அணிந்துள்ளதாகத் தெரிகிறது. வசதி படைத்தவர்கள் இந்தப் பாத அணிகலனில் ஜாதிக்கற்களைப் பதித்து அணிந்தார்களாம். பல காலம் முன்பு மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பெண்கள் தங்கள் இரண்டு கால்களிலும் பாத அணிகலன்களை அணிந்து அவற்றை ஒரு சங்கிலியால் இணைத்து விடுவது உண்டாம். இது குறுகிய அடி வைத்து நடக்க மேற்கொள்ளப்படும் பயிற்சியாம். இந்திய நடனமாதர்கள் தங்கள் அங்க அசைவுகளுக்கேற்ப இனிய ஒலி எழுப்பும் கால் சலங்கை என்ற அணிகலனை அணிந்தார்கள். இது போல மத்திய கிழக்கு நாடுகளில் வயிற்றசைவு நடனமாடும் மங்கைகள் கூட நுண்ணிய வேலைப்படமைந்த கொலுசுகளை அணிந்தார்கள். அமெரிக்காவில் கொலுசு அணியும் வழக்கம் 1950 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது.
கொலுசுக்கு இந்தியாவில் ஒரு பெரிய வரலாற்றுப் பாரம்பரியமும் பின்னணியும் உண்டு. இந்தியாவில் வெள்ளிக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. நகை ஒவ்வாமை போன்ற உபாதைகள் வெள்ளியால் வருவதில்லையாம்.
பழங்காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான அணிகலன்களை அணிந்து வந்தனர். இன்றும் மலை சாதி மக்கள் (ராஜஸ்தான்) அதிக எடையுள்ள காப்பு போல் தடிமனான வெள்ளி கொலுசை அணிகிறார்கள். பழங்காலத்தில் மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு என பல வடிவமைப்புகளில் கொலுசு அணிந்துள்ளார்கள்.
குழந்தைகளுக்கு கொலுசு அணிவிப்பது இந்தியாவில் நடைமுறையிலுள்ள பழக்கம். கொலுசு ஒலி குழந்தையின் அசைவுகளை உறங்கும்போதும், விழித்திருக்கும் போதும் தாய்க்கு அறிவிக்கும். கொலுசுடன் தளர் நடைபோட்டு நடக்கும் குழந்தைகளைக் காணக் கண் கோடி வேண்டும்.

சிலம்பு
சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறக்காணலாம்.
சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும். இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்பவல்லது.
கோலம்
கோலம் என்பது வீட்டு வாயில்களில் அல்லது வாசலில் அரிசி மாவு அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி வரையப்படும் வடிவங்கள்.
 தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களில், கோலங்கள் அரிசிமாவு, முருகைக்கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கெனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து அழுத்த விரல்களில் வடியும் மாக்கரைசலினால் பேனாவால் வரைவதுபோல் கோலம் வரையலாம். 
நம் வாழ்கையில் காணமல் போன சில பொருட்கள்-பாகம் -4

1 comment:

  1. Anonymous5/10/24 18:21

    அய்யா ! வெகு சிறப்பாக இக்கட்டுரையை வரைந்துள்ளீர்கள். கடின முயற்சியுடன், ஏராளமான செய்திகளை தொகுத்து அளித்துள்ளீர்கள். தமிழ் அன்னைக்கும், தமிழ் மண்ணிற்கும் , தமிழர்க்கும் செய்த மாபெரும் இத் தொண்டிற்காக வானளவு தங்களை பாராட்டுகிறேன்.
    உலகுள்ள அளவும் உங்கள் தமிழ்ப் பணி பாராட்டப்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. பாராட்டுகள் சகோதரரே ! இனியன் ராஜ் முகமது.

    ReplyDelete