Tuesday, March 13, 2012

உலகெங்கும் அவசர உதவிக்கு ஒரே எண்

ஒவ்வொரு நாட்டிலும், மாநிலத்திலும் மக்கள் சேவைக்காக அவசர உதவி மையங்கள்
Public Safety Answering Point (PSAP) பொது பாதுகாப்பு பதில் மையங்கள்  என   செயல்பட்டுவருகின்றன. இதில் மருத்துவ உதவி,தீயணைப்பு உதவி, ஆம்புலன்ஸ், அவசர போலீஸ் என ஒவ்வொரு உதவி மையத்திற்கும் தனித்தனி எண் கொடுக்கப்பட்டிருக்கும்.

 

மகளிர் உதவி மையம் – 1091
குழந்தை உதவி மையம் – 1098
தீயணைப்பு – 101
அவரச போலீஸ் – 100
ஆம்புலன்ஸ் – 108
ஆனால், இந்த எண்கள் நமது தமிழகத்தில் உள்ள அவசர உதவி எண்கள். நாம் வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் சமயங்களில் ஏதோ ஒரு பிரச்சினைக்காக அவசர உதவி தேவைப்பட்டால் என்ன செய்வது?


 அதற்கும் ஒட்டுமொத்தமாக ஓர் அவசர உதவி எண் உள்ளது. உலகெங்கிலும் நமக்கு உதவக்கூடிய ஒரே அவசர உதவி எண் 911.

இந்த எண் எப்படி எல்லா நாட்டினருக்கும் பொருந்துகிறது? ஒவ்வொரு நாட்டினருக்குமான தொலைத்தொடர்பு சேவையில் இந்த அவசர எண் இருக்கும். இது அலைபேசிக்கும் பொருந்தும்.
செப்டம்பர் 11, 2001 அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குத‌ல் நட‌ந்தபோது அதிகமாக 911பயன்படுத்தப்பட்டது .          9 என்பது செப்டம்பர் மாதத்தையும், 11 என்பது தேதியும் ஆகும். ஆனால் அதற்கு முன்பும் 911 புழகத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
   


24 மணி நேரமும்  இந்த அவசர எண் அந்தந்த நாட்டில் இருக்கும் காவல்துறைக் கட்டுப்பாட்டுக்கு அல்லது உதவிக்கான மையத்துக்கு சென்றடையும். அதன் மூலம் நமக்கு உதவிகள் கிடைக்கும். மிக இக்கட்டான நேரங்களில் நம்மால் அழைத்துப் பேசி உதவி கேட்க முடியாவிட்டாலும் அழைப்பு ஏற்படுத்தி துண்டித்து விட்டால்கூட போதும், அவர்களாகவே தொடர்புகொள்ளவும் கூடும்.

இந்த அழைப்பை செய்வதற்கு அலைபேசியில் கட்டணம் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஒருவேளை அலைபேசியின் கீபேட் லாக் செய்யப்பட்டிருந்தாலும் மூன்று எண்கள் மட்டும் வேலை செய்யும். அவசர உதவிக்காக 112 மற்றும் 911 என்ற எண்களை டயல் செய்ய இயலும். அந்த மூன்று எண்கள் 1, 2, 9. வேறு எந்த எண்களையும் இதுபோல் டயல் செய்ய முடியாது.

அங்கும் இங்கும் பறந்து உழைக்கிற இந்தக் காலகட்டத்தில் எந்த நேரத்திலும் யாருக்கும்உதவி தேவைப்படலாம். அதனால்தான் தொலைபேசிநிறுவனங்கள் இந்த வசதியை வைத்திருக்கின்றன. சமயங்களில் நமக்கே பயன்படக் கூடும். நண்பர்களுக்கும் சொல்லுங்கள்

No comments:

Post a Comment