1990க்கு பிறகு வாழ்கை இயந்திரமாயமாக ஆகி
போனபிறகு நம் உபயோகப் படுத்தும் சில பொருட்கள் கண்ணில் கூட பார்க்க முடியாமலும்,
இப்ப இருக்கும் தலைமுறைகளுக்கு அது என் என்றும் கூட தெரியாத நிலைக்கு உள்ளது.
உதாரணமாக : நம்மாளுங்க அந்தக் காலத்துல இருந்தே
ஒவ்வொரு வேலைகும் ஒவ்வொருவிதமானக் கருவிகள கண்டுபிடிச்சு பயன்படுத்திக்கிட்டுதான்
வந்திருக்காங்க.
அரிவாள்மணை, அருவா, ஏத்தம் இறைக்கு சால், கட்ட வண்டி, லாந்தர் விளக்கு, ஆழ கரண்டி, கிணற்றி நிர் இரைக பயன் படும் வாளி, உருளை, கயறு . கடப்பாரை, உலக்கை, செக்கு, ஆட்டுக்கல், வாய்ப்பொட்டி, மூங்கில்முறம், கோடாரி, மண்வெட்டிக் , இரும்புக் கொடுவாள், திருகை, அம்மி, கொடாப்பு, சுத்தி, மத்து, வெள்ளம் காய்ச்சும் அடுப்பு, படி, வல்லம், தொரட்டு, சல்லடை... என்ன தலை சுத்துற மாதிரி இருக்கா?
அதற்காக பல நாட்கள் முயற்சி செய்து, வலைதளத்தி தேடி எடுக்கப்பட்ட பல விசயங்களை இங்கு தொகுத்து உள்ளேன். சில பொருட்கள் இன்னும் தேடியும் கிடைக்காத சுழ்நிலையில் உள்ளது.
இங்கு தொகுக்கப்பட் பொருட்கள், வருங்கலத்தில் IAS & IPS தேர்வுகளில் கேட்க படும் முக்கியமான கேள்வியாக இருந்தாலும் ஆச்சறியபடுவதற்கு இல்லை.
குடிசை
குடிசை என்பது சூழலில் கிடைப்பனவும், நீண்ட காலம் நிலைத்து இராதவையுமான பொருட்களால் அமைக்கப்படும் சிறிய இருப்பிடங்களைக் குறிக்கும். குடிசைகள் மனிதரின் இருப்பிடக் கட்டிடங்களின் மிகவும் பழைய வளர்ச்சிநிலை ஒன்றாக இருப்பினும், இன்றும் இவை உலகின் பல பாகங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகள் பலவற்றில் பெரும் எண்ணிக்கையானோர் இன்னும் குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
குடிசை என்னும் சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் காணப்பட்டவிட்டாலும், ஒத்த வேர்ச் சொற்களில் இருந்து பிறந்த குடில் என்னும் சொல் புழக்கத்தில் இருந்துள்ளது. அக்காலத்தில், மக்கள் வாழ்ந்த குடிசைகளை ஒத்த இருப்பிடங்கள் பல்வேறு பெயர்களிட்டு அழைக்கப்பட்டன. குடங்கர், குடிசல், குடிஞை, குடீரம், கைநிலை, சாளை, சிறகுகுடில், தொக்கடி, படலிடம், பண்ணை, புல்வீடு, மயடம், மாடம், குடிசில், என்னும் சொற்களும் குடிசையோடு ஒத்த பொருள் கொண்ட சொற்களாக, இவற்றுட் பெரும்பாலான சொற்கள் இன்று வழக்கிழந்துவிட்டன. ஆனால், குடிசை என்னும் சொல் ஒரு பொதுவான சொல்லாகத் தற்காலத்தில் புழக்கத்தில் இருந்து வருகிறது.
தற்காலக் குடிசைகள் பொதுவாகச் சிறிய அளவின. பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு அறைகளைக் கொண்டன. குடிசைகள், தூண்கள் அல்லது மண் சுவர்கள் மீது தாங்கப்பட்ட கூரைகளைக் கொண்டவை. இவை பெரும்பாலும் செவ்வக அல்லது வட்டமான தள வடிவங்களை உடையவை. குடிசைகளைக் கட்டுவதற்கான பொருட்கள் அவை அமையும் சுற்றாடலிருந்தே பெரும்பாலும் பெறப்படுகின்றன.
ஆவுரோஞ்சிக் கல்
ஆவுரோஞ்சிக் கல் (ஆ உரோஞ்சும் கல்) என்பவை பெரும்பாலும் தெருவோர நீர்த் தொட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கும். பழங்காலத்தில் மனிதர்களுக்கு மட்டுமன்றி மாடுகள் நீர் அருந்தவும் தொட்டிகள் அமைக்கப்பட்டன. மாடுகள் நீ்ர் அருந்திய பின் தமது சுனைப்பை தவிர்க்க ஆவுரோஞ்சிக்கல்லில் தமது உடம்மைத் தேய்க்கும்.
துடைப்பம் - விளக்கமாறு - தும்புத் தடி
வீட்டில் தரையில் உள்ள அழுக்குகளையும் குப்பைகளையும் வாரிக் கூட்ட உதவுவது விளக்கமாறு அல்லது துடைப்பம்.
தென்னை மரத்தில் உள்ள மட்டையை சிவினால் அதில் இருந்து கிடைப்பதுதான் தென்னங்குச்சி,பல தென்னங்குச்சிகளை ஒன்றாக சேர்த்து ஒரு சிறு கட்டாக கட்டினால் அதை விளக்கமாறு ஆகும்.
தும்புத் தடி என்பது தென்னை ஓலையின் அடிமட்டையை அல்லது தேங்காய் மட்டையை ஊறவைத்து, பின்னர் அதை அடித்து அதில் இருந்து பெறப்படும் தும்பில் இருந்து செய்யப்படும் துடைப்பம் ஆகும். இது இலங்கை, இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தும்புத் தடி தயாரிப்பது ஒரு கைத்தொழில் ஆகும்
பனையோலை
பனை மரத்தின் இலை பனையோலை (பனை + ஓலை) எனப்படும். பனையோலை விசிறி போன்ற வடிவத்தையுடையது. ஏறத்தாழ ஐந்து அடி விட்டம் கொண்டதாக இருக்கும். பனம் மட்டை அல்லது பனை மட்டை என்று அழைக்கப்படும் இதனுடைய காம்பு உறுதியானது, அரை வட்ட வடிவமான குறுக்கு வெட்டுமுகம் கொண்டது. அத்துடன் இதன் விளிம்புகளில் கருநிறமான, வாளின் பற்கள் போன்ற அமைப்பு உள்ளது இது கருக்கு எனப்படும்
பனையோலைக் குருத்து இள மஞ்சள் நிறம் கொண்டது. விரிந்து முதிரும் போது கரும் பச்சை நிறமாகத் தோற்றமளிக்கும். காய்ந்து விழும் நிலையிலுள்ள ஓலைகள் மண்ணிறமாக ஆகி விடுகின்றன.
பயன்கள்
ஒவ்வொரு நிலையிலும் இவ்வோலைக்கு வெவ்வேறு பயன்கள் உள்ளன. குருத்தோலைகளை வெட்டிக் காய விட்டு அதனைப் பயன்படுத்திப் பல விதமான கைப்பணிப் பொருட்கள் செய்யப்படும். பச்சை ஓலைகள் மாடுகளுக்கு உணவாவதுடன், வேலியடைத்தல், கூரை வேய்தல், முறம் செய்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப் படுகின்றன. மட்டைகளும், வேலியடைத்தல், குடிசைகள் அமைத்தல், பலவகை நார்களின் உற்பத்தி ஆகியவற்றில் உதவுகின்றன. காய்ந்து விழும் ஓலைகளும் பயிர்களுக்கு உரமாகின்றன.
வேலிகளில் பனம் மட்டைகளின் பயன்பாடு.
விசிறி
விசிறி (Fan) என்பது காற்றோட்டத்தை ஏற்படுத்தும் சாதனமாகும். சாதாரணமாகக் காற்றை விசுக்கப் பயன்படுத்தக் கூடிய பொருட்களும் விசிறிகளே. பனையோலை விசிறிகள் இலங்கையில் பிரபலமாக இருந்தன. இப்பொழுது அவை அருகி வருகின்றன. மின்சாரமுள்ள இடங்களில் பலவிதமான மின்விசிறிகள் பயன்படுகின்றன.
மூங்கில் மரம், மூங்கில் ஓலை போன்ற மூங்கில் கூறுகளைப் பயன்படுத்தி தமிழர்களால் உருவாக்கப்பட்ட கைவேலைப் பொருட்களையும்,
மூங்கில் கூடை
மூங்கில் மரம்தில் உள்ள மேல் பட்டையை உரித்து அதை கொண்டு கூடைகள் செய்ய படுகின்றன. தமிழலகத்தில் டப்பை குரவர்கள் அல்லது குறவன் என்ற இனத்தினர் கூடைகளை பின்னி கிராமத்தில் விற்பனை செய்வர். இதில் பல வகைகள் உள்ளன விட்டுக் தேவையான சிப்பி தட்டு, முறம் போன்ற கூடைகள், கோழிகள் இரவு நேரத்தில் தங்குவதற்கும், சிறு செடி, கொடிகள் பதுகாக தேவையான கூடைகள் ஆகும்.
மாட்டு வண்டி
மாட்டு வண்டி என்பது மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இத்தகு வண்டிகள் பெரும்பாலும் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மடகாஸ்கர், சீனா போன்ற பகுதிகளில் காணப்படும். இவ்வண்டிகளின் பயன்பாடு பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றன. பழங்காலங்களில் வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்பட்ட இவ்வண்டிகள், தற்போது தொழிற்சாலைப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. விளைபொருட்கள், உர மூட்டைகள், நாற்றுகள், வைக்கோல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன.
வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டி ஓட்டத் தெரியாத ஆண்களை காண்பது அரிது. வேளாண் குடும்பத்துச் சிறுவர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிப் பழகுவது மிதி வண்டி ஓட்டிப் பழகுவது போல் ஒரு குதூகலமானதும் பெருமிதம் தரக்கூடியதுமான அனுபவமாகும்.
நவீன கால மாட்டுவண்டிகளின் கூடு முழுக்க இரும்பாலும், சக்கரங்கள் tyreகளாலும் ஆனவை. இவ்வகை வண்டிகளை வாங்க இது தவிர மாடுகளை பராமரிக்க, அவற்றுக்கு தீவனம், வைக்கோல் அளிக்க தனிச் செலவுகள் ஏற்படும். எனவே, ஓர் உழவர் மாட்டு வண்டி வைத்திருந்தால் அவர் ஓரளவு வசதி உடையவர் என்று அறியலாம்.
மாடுகளை உந்தி ஓட்டிச் செல்ல ஓட்டுனர் பெரும்பாலும் தார்க்குச்சிகளை வைத்திருப்பார். தார்க்குச்சி என்பது நுனியில் (ஆணி) ஊசியும் சாட்டையும் பொருத்தப்பட்ட பிரம்புக் குச்சியாகும். ஒரே வழியில் செல்லப் பழக்கப்பட்ட மாடுகள், ஓட்டுனர் இன்றி கூட குறித்த இடத்துக்கு தாமே வண்டியே இழுத்துச் செல்வதும் உண்டு.
தற்கால நிலை
உழவர் வீடுகளில் உழவுக்குப் பயன்படும் காளை மாடுகளே வண்டி இழுக்கவும் பயன்படுகின்றன. வேளாண்மையில் இயந்திரமயமாக்கலின் காரணமாகவும் உயர்ந்து வரும் கூலித் தொகைகளின் காரணமாகவும், தற்பொழுது உழவுக்கு மாடுகள் வளர்ப்பதும், உழவு வாடகைக்கு என மாடுகளை விடுவதும் குறைந்து வருகிறது. இதனால், வண்டி மாடுகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேம்பட்டு வரும் சாலை வசதிகள், சுமையுந்துகளின் பெருக்கம் காரணமாக வேளாண் பொருட்களின் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகளின் தேவை குறைந்து வருகிறது.
பரிசல்
வட்ட வடிவில் உள்ள படகுபரிசல் என்பது அதிக ஆழம் இல்லாத நீரில் செலுத்தும் வட்ட வடிவ படகு போன்ற கலம். இது பெரும்பாலும் மூங்கிலால் வேயப்பட்டு, எருமைத் தோலால் போர்த்தப்பட்ட கலம் ஆகும். இதனை செலுத்த பரிசற்காரர் ஒரு நீண்ட கழியை (கொம்பை), வைத்து உந்தி நகர்த்துவர்.
பரிசல் பெரும்பாலும் அதிக விரைவில் நீரோடாத ஆறுகளிலும் அமைதியாய் உள்ள நீர்நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பொழுது இதன் பயன்பாடு அருகி வருகிறது.எருது, காளை முதலியவற்றைக் கட்டுப்படுத்த அவற்றின் மூக்கைத் துளைத்துப் பூட்டும் கயிறு; மூக்காங்கயிறு அல்லது மூக்கணாங்கயிறு ஆகும்.
அரைஞாணைப் பெரும்பாலும் ஆடைக்குள் மறைவாகத் தான் அணிந்திருப்பர். இப்படி அணிவதே கண்ணியமாகக் கருதப்படுகிறது. இடையில் அணியப்படும் வேட்டி, கோவணம் போன்ற ஆடைகளை இறுக்கிக் கட்ட இது பயன்படுகிறது. என்றாலும், இடுப்புவார் போன்றவற்றை பயன்படுத்துவோரும் சமய நம்பிக்கை,
உடை, சமயம் சார் தேவைகள் போக, நடைமுறை காரணங்களுக்காகவும் இதை அணிகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, கிராமப் புறங்களில் நீச்சல் பழக்கி விடுபவர் அரைஞாணில் சேலை, வேட்டியைக் கட்டிப் அதைப் பிடித்து நீச்சல் பழக்கி விடுவார்கள். நீச்சல் அறியாத பிள்ளைகள் நீர் நிலைகளில் மூழ்க நேர்ந்தாலும், பற்றி இழுப்பதற்கு ஏதுவாக அரைஞாண் உதவுகிறது. சாவிக் கொத்து, முள்வாங்கி போன்றவற்றை கோர்த்து வைத்துக் கொள்ளவும் அரைஞாண் உதவுகிறது.
அரைஞாண் அணிவதால் குடலிறக்கம் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பெயர் விளக்கம்
நாண் = ஞாண். அரை = இடுப்பு (அரை உடல்). இடுப்பில் கட்டும் கயிறுக்கு அரைஞாண் என்று பெயர். ஆகவே, அரைஞாண் கயிறு என்று சொல்வது தேவையற்றது. இதனை அருணாக்கயிறு, அர்ணாக்கயிறு என்றும் வேறு பலவிதமாகவும் பேச்சுவழக்கில் கூறுவார்கள்.
நம் வாழ்கையில் காணமல் போன சில பொருட்கள்-பாகம்....3
No comments:
Post a Comment