
எதுமலை சீனிவாசனின் மருமகனும் முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என். நேருவின்
தம்பி ராமஜெயம் (வயது 50). தொழில் அதிபரான இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி
நடத்தி வருகிறார். இவர் தில்லை நகர் 10-வது கிராசில் வசித்து வருகிறார். தினமும்
அதிகாலையில் ராமஜெயம் வாக்கிங் செல்வது வழக்கம்.
அவ்வாறு செல்லும் அவர் காலை 7.30 மணிக்கு வீடு திரும்பி விடுவார். இன்று காலை
வழக்கம்போல் தனது மனைவி லதாவிடம் கூறிவிட்டு ராமஜெயம் வாக்கிங் சென்றார். ஆனால் 8
மணி வரை அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி லதா காலை 8.30 மணிக்கு
கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போனை ஆன் செய்தவுடன்
எதிர்முனையில் இருந்து எந்த பதிலும் இல்லை.
சில விநாடிகளில் அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் தொடர்பு கொண்டபோது
செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ராமஜெயத்தின் மனைவி லதா
பதட்டம் அடைந்தார். இதுபற்றி தனது உறவினர் களிடம் கூறினார். அவர்களும் ராமஜெயம்
வாக்கிங் செல்லும் இடங்களுக்கு சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் இல்லை.
இதற்கிடையே ராமஜெயம் மாயமான தகவல் திருச்சி முழுவதும் காட்டுத் தீ போல பரவியது.
உடனே ராமஜெயத்தின் வீடு முன்பு தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர்.
இருந்தபோதிலும் காலை 11 மணி வரை ராமஜெயம் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால்
பரபரப்பும், பதட்டமும் அதிகமானது. இதையடுத்து ராமஜெயத்தின் மனைவி லதா தில்லை நகர்
போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:-
எனது கணவர் ராமஜெயம் தினமும் வாக்கிங் சென்றுவிட்டு காலை 7.30 மணிக்கு வீடு
திரும்புவார். இன்று காலை வழக்கம்போல் வாக்கிங் சென்ற அவர் காலை 8.30 மணி வரை வீடு
திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் இருந்து எந்தவித
பதிலும் வரவில்லை. சில வினாடிகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் எனது கணவரின்
செல்போனில் இருந்து அவரது நண்பர்களிடம் தொடர்பு கொண்டு பேசியவர்கள் எனது வீட்டு
விலாசம் உள்ளிட்ட விபரங்களை கேட்டு உள்ளனர். எனவே சமூகவிரோத கும்பலால் எனது கணவரின்
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனது கணவரை கண்டு
பிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.


கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை! (படங்கள் 3)
கே.என்.நேரு தம்பி ராமஜெயம் படுகொலை: உடலை அடையாளம் காட்டிய மகன் (ஸ்பாட் படங்கள்)













No comments:
Post a Comment