பணவீக்கம் என்பது
நம் நாட்டில் மட்டுமில்லீங்க... உலகையே ஆட்டி படைக்குதுங்க. இதற்கு மனிதத் தவறுகளே
என்பதை சம்பந்தப்பட்டவர்களே ஒப்புக்கறாங்க. ஆனா... நம்ம ஆளுங்க மட்டும் இன்னமும்
தம் கட்டி அடுத்தவங்கள் தோளில குறையத் தொங்க விடறாங்க. ஐரோப்பிய ஒன்றியத்தின்
பொருளாதார சரிவும், சிரியாவின் மக்கள் போராட்டமும், ஈரானின் அணு ஆயுத உற்பத்தியும்
வளைகுடா நாட்டினில் பெரும் தாக்கத்தினை கொண்டுள்ளது. அதன் விளைவே அந்நாட்டு
ஊடகங்களில் இது போன்ற கருத்து படங்கள்.
எழுதுவதற்கு நிறைய
விஷயங்களும் விமர்சனங்களும் இருக்குங்க. ஆனா, நேரம் தான் நமக்கு தோது படல.
அதனால.... கிடைக்கற நேரத்துல அப்பப்ப பகிர்ந்துக்கிறேன். (யாரங்கே... பெருமூச்சு
விடறது. விடாது கருப்பு! விரைவில் அடுத்த பதிவினில் சந்திப்போம்!)
ஹி...ஹி... பணவீக்கம் நம்ம நாட்டுல மட்டுமில்லீங்கோ...
வளைகுடாவிலும் தான்
எப்படி பார்த்தாலும் ஈரானைச் சுத்தியே அணைகட்டுதே இந்த
மேற்குலகம்...
சிரியாவில் தொடரும் பொதுமக்கள் போராட்டம்
ஈரானும், இஸ்ரேலும் தொடர்கின்றது அணு ஆயுத
உற்பத்தியினை
உலகின் மக்கள்தொகை 700 கோடியைத் தாண்டிவிட்டது.
இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி. அப்ப உலகுல ஏழு பேருல ஒரு ஆளு நம்ம
ஆளு!
கிரிஸைத் தாக்கிய நிதிநெருக்கடி இத்தாலியையும்
நெருக்குகின்றது.
யூரோ சரிந்திடாது இருக்க ஐரோப்பிய ஒன்றியம்
பெருமுயற்சிக் கொள்கின்றது
மவனே !!!! எனக்கே அல்வா கொடுத்துட்டு திருட்டு தம்மா அடிக்கிற
மனித உரிமைச் சர்ச்சையில் இருக்கும் குவாண்டனமோ துவங்கி
10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
வளர்ச்சியல்ல... வீக்கமே என்று மேற்குலக நடுத்தர
வர்க்க மக்கள் பங்குச் சந்தைக்கு எதிராக போராடுகின்றனர்.
கூடிய விரைவில் யூரோவும் ’ஹைய்யோ’ தானோ!?
மனிதர்களின்
மனதில் ஒரு வலுவான கருத்தாக்கத்தை பதியவைப்பதில் பேச்சின் / எழுத்தின் பங்கை விட,
மிக எளிதான முறையிலான கார்ட்டூன்களின் பங்கு முதன்மையிடத்தினைப் பெற்றுவிடுகின்றது.
இதனை பிரசுரித்த அரேப் நியூஸ் நாளிதழ் இதழிற்கும், கருத்தோவியம் வரைந்த
ஓவியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
No comments:
Post a Comment