இந்தியாவில் வழங்கப்பட்ட சர்வதேச” வாகனம் ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் வெளிநாட்டுக் சென்றால் அங்கே அவர் வாகனம் ஓட்ட முடியுமா ?
இந்தியாவிலிருந்து, வளைகுடா அல்லது வேறு நாடுகளுக்கோ செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம். அந்த நாட்டில் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடியாத சூழ்நிலையில், இங்கே இருந்து செல்லும்போதே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம்.
இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, அந்த டிரைவிங் பர்மிட், அந்த நாட்டில் ஓராண்டு காலத்துக்குச் செல்லுபடியாகும்.
ஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே, இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்குரிய 4ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், விண்ணப்பதாரர் எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ அதற்குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் ஆகியவற்றை இணைத்து ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த அன்றே, இன்டர்நேஷனல் லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்
பிறகு எந்த நாட்டிற்கு சென்றால், அந்த நாட்டின் சட்ட திட்டத்தின் படி வாகன காப்பீடு தொகை (இன்சூரன்ஸ்) கட்ட வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட் விசா காலம் எவ்வளவோ அதற்கு தகுந்தார் போல் இருக்கும்.
குறிப்பு : வளைகுடா நாட்டிற்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கு மட்டும் இது பொருந்தும். வேலைக்கு வரும் விசாவில் வந்தால் இது பயன்படாது.
அணுக வேண்டிய முகவரி : ( திருச்சி மாவட்டதாரர்களுக்கு )
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
http://www.tn.gov.in/services/rto.html |
No comments:
Post a Comment