இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் உலகப் போர். உலக நாடுகள், இரு பிரிவாகப் பிரிந்து 1939 முதல் 1945 வரை போர் புரிந்தன. இந்தப் போரில், ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டு, லட்சக் கணக்கான மக்கள் மாண்டனர். இரண்டாம் உலகப் போரைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், முதல் உலகப்போரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இரண்டு போர்களுக்கும் தொடர்பு உண்டு.
ஜெர்மன் மன்னர் கெய்சர்
முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப்பட்டன. ஆஸ்திரியா நாட்டுப்பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.
செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன. 1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.
இரு தரப்பினருக்கும் இடையே தரையிலும், கடலிலும் பயங்கரப் போர்கள் நடந்தன. நீர் மூழ்கிக் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஜெர்மனி அதிக அளவில் பயன்படுத்தி, நேச நாடுகளுக்கு கடும் சேதத்தை உண்டாக்கியது. நேச நாடுகள் டாங்கிப் படைகளை அதிகமாகப் பயன்படுத்தின. போர் நடந்து கொண்டிருந்த போதே, ரஷியாவில், புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்žனிச அரசு உதயமாகியது.
1917ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் இருந்து விலகிக் கொண்டது. இந்தப் போரில், ஜெர்மனி படைகள் விஷ வாயுவை பயன்படுத்தின. போர்க்களத்திற்கு வரும் ஜெர்மனி வீரர்கள் முகமூடி அணிந்திருப்பார்கள்.
போருக்கு சைக்கிளில் சென்ற ஜெர்மன் படை வீரர்கள்
அவர்களுக்குப் பின்னால் குதிரை வண்டிகளில் விஷப் புகை நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வரும். எதிரிப்படைகளை நெருங்கியதும், சிலிண்டர்களின் வாய் உடைக்கப்படும். அவற்றிலிருந்து விஷ வாயு வெளியேறும். அதைச் சுவாசிக்கும் எதிரிப் படையினர் மயங்கி விழுந்து மரணம் அடைவார்கள்.
போரில் விஷப்புகையைப் பயன்படுத்தக்கூடாது என்று எல்லா நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. ஆனால் அதை மீறி ஜெர்மனி விஷப்புகையை பயன்படுத்தியது. ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு வெற்றிகள் கிடைத்தன. முடிவில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் படைகளும் ஜெர்மனியை நோக்கி விரைந்தன. இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் பீதி அடைந்து மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர்.
மக்களை அடக்க, ராணுவத்தை கெய்சர் ஏவினார். உலகப்போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி படைகள், சொந்த மக்களைச் சுட்டுக் கொல்லும் நிலை ஏற்பட்டது. நேச நாடுகளின் படைகள், ஜெர்மனி தலைநகரான பெர்லின் நகருக்குள் 1918 நவம்பர் 11-ந்தேதி நுழைந்தன. இந்தப் பெரும் படைகளின் தாக்குதலை, ஜெர்மனி படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனி மன்னர் கெய்சர் முடிதுறந்தார்.
படை வீரர்களுக்கு உணவு சப்ளை செய்யும் அமெரிக்க வண்டிகள்
ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். 1,561 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் 2 கோடிப்பேர் மாண்டனர். யுத்தம் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலால் 2 கோடி மக்கள் உயிர் இழந்தார்கள். 40 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் அடைந்தன. போரில் ஈடுபட்ட நாடுகள் இடையே 1919 ஜுன் 28ந் தேதி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி படை திரட்டும் உரிமையை ஜெர்மனி இழந்தது. போரில் பங்கு கொண்ட நேச நாடுகளுக்கு ஜெர்மனி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் முடிவாயிற்று.
ஜெர்மனியின் வளமான பகுதிகள் சிலவற்றை பிரான்ஸ் கைப்பற்றிக் கொண்டது. ஆஸ்திரியா நாடு, பல்வேறு இன மக்களைக் கொண்ட நாடாகும். போருக்குப்பிறகு, ஆஸ்திரியா நாடு துண்டு துண்டாகச் சிதறியது. யூ
கோஸ்லேவியா, போலந்து, செக்கசு லோவக்கியா ஆகிய புதிய நாடுகள் உதயமாயின. மீண்டும் இதுபோன்ற உலக யுத்தம் மூளக்கூடாது என்று உலக நாடுகள் கருதின. அதற்காக "சர்வதேச சங்கம்" ஒன்று நிறுவப்பட்டது. இதில் பல நாடுகள் சேர்ந்தன. ஆனால் சங்கத்தை அமைக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட அமெரிக்கா சேரவில்லை.
No comments:
Post a Comment