Wednesday, March 14, 2012

புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் 'பாலச்சந்திர - சேனல் 4 புதிய ஆவணப்படம்

3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த இனப்படு்கொலைகளை பற்றி

இந்த அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக, ஒரு பத்திரிகையாளனாய் இந்த அநியாயங்களுக்கு நியாயம் தேடி தருவேன்," என்று கூறுபவர், 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தை தயாரித்த ஜான் ஸ்னோ.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களை உலகுக்கு உணர்த்த கிடைத்த வலுவான ஆயுதம், 'சேனல் -4' வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற ஆவணப் படம்.

இந்த ஆவணப் படம், இங்கிலாந்து, அமெரிக்கா, நார்வே போன்ற பல நாடுகளின் நாடாளுமன்றங்களில் திரையிடப்பட்டு, இலங்கைக்கு எதிரான பல விவாதங்களும் நடைபெற்றன.

அதை தொடர்ந்து, இப்போது மீண்டும் சேனல்-4 'இலங்கையின் கொலைக்களங்கள் - தண்டிக்கபடாத குற்றங்கள்' என்ற ஆவணப்படத்தை இரண்டாவது பாகமாக வெளியிடவுள்ளது.

இந்திய நேரப்படி, வியாழக்கிழமை அதிகாலை 4.25 மணிக்கு சேனல் 4-ல் இந்தப் படம் ஒளிபரப்படுகிறது.

சேனல் 4



இந்த வெளியீட்டுக்கு முன்னர் கடந்த மார்ச் 11-ம் தேதி, ஜெனீவா மனித உரிமை திரைப்பிட விழாவில் இப்படம் திரையிடப்பட்டப்போது, 'இதைப் பார்ப்பதற்கே கல்லாக்கி கொண்ட மனம் வேண்டும்' என்று மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.

சேனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தின் மூலம் அம்பலமாகும் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் என்னென்ன


ஜெனீவாவில் இப்படத்தைப் பார்த்து அதிர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் விவரித்தவை:
சிறுவன் பாலச்சந்திரன் திட்டமிட்டு படுகொலை!


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் 'பாலச்சந்திர பிரபாகரன்', பிரபாகரன் மகன் என்பதாலே கொடுமைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரருகே ஐந்து பேரின் சடலமும் கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் இருக்கின்றன. அவரின் மெய்க்காவலர்களாக இருக்கக்கூடும் என்று சேனல் 4 குறிப்பிட்டுள்ளது.

பாலச்சந்திரனின் உடம்பில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளன. பாய்ந்த குண்டுகள் அனைத்தும் 2 முதல் 3 அடி தொலைவில் இருந்தே பாய்ந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதில் உடல் அளவிலான சித்திரவதைகளுக்கு சாட்சியங்கள் இல்லை என்றாலும் 'பிரபாகரன் மகன்' என்பதாலே மனதளவில் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று அறியப்படுகின்றது.

இக்கொலை மே 17, 2009 அன்று நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment