Friday, March 30, 2012

தக்காளியில் ,ஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பது எப்படி

தர்மபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகப் பிரிவும் இணைந்து, தக்காளியில் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுப்பதற்காக கடந்த மாதம் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன. வேளாண் அறிவியல் மைய இணைப் பேராசிரியர் ஜான்சிராணி, தக்காளியைக் கொண்டு ஜாம், ஊறுகாய், கெச்சப், ஸ்குவாஷ், சாஸ், ஜூஸ், வடகம், தக்காளி பவுடர்... மதிப்புக் கூட்டல் பொருட்களைத் தயாரிக்கும் விதங்களை செய்முறை விளக்கத்துடன் சொல்லிக் கொடுத்தார்.

இனி பயிற்சியில் இருந்து...

''தக்காளிக்கு வருஷம் முழுசும் கட்டுப்படியான விலை கிடைக்கறதில்லை. கணக்குப் பாத்தா, பல நேரங்களில் நஷ்டம்தான் அதிகமா இருக்கும். விவசாயிகளைப் பொறுத்தவரைக்கும் விளைஞ்சதை அப்படியே சந்தையில வித்துடணும்னுதான் நினைக்கறாங்க. அதுக்கு மேல யோசிக்கறதேயில்லை. இந்த மனநிலைதான் நஷ்டத்துக்குக் காரணம். விலை குறையறப்ப சாலையில கொட்டி வீணாக்குறதுக்குப் பதிலா... கொஞ்சம் மெனக்கெட்டு அதை ஊறுகாயாகவோ, ஜாமாகவோ... மாத்தினா நஷ்டம் வர்றதுக்கு வாய்ப்பே இல்லை.

கிலோவுக்கு 30 ரூபாய்!

உதாரணமா, ஒரு கிலோ தக்காளியில சில பொருட்களை சேர்த்து ஊறுகாய் தயாரிச்சா, 750 கிராம் ஊறுகாய் கிடைக்கும். இன்னிக்குச் சந்தையில 250 கிராம் தக்காளி ஊறுகாய் 22 ரூபாயிலிருந்து 30 ரூபா வரைக்கும் விக்குது. குறைஞ்சபட்சம் 20 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், 750 கிராம் ஊறுகாய்க்கு 60 ரூபாய் கிடைக்கும். இதுக்கான தயாரிப்புச் செலவுக்காக 30 ரூபாயைக் கழிச்சிட்டாலும், மீதி 30 ரூபாய் இருக்கும். பெரிய நிறுவனங்களோட தொடர்பு வெச்சுக்கிட்டா, தொடர்ந்து விற்பனை வாய்ப்பு கிடைக்கும்'' என்று நிறுத்திய ஜான்சிராணி,

''இப்ப சொல்லுங்க, கிலோ 3 ரூபாய்க்கு தக்காளி விக்குதேனு கீழ கொட்டாம... கொஞ்சம் யோசிச்சா ஒரு கிலோ தக்காளிக்கு 30 ரூபா கிடைக்குமில்ல!'' எனக் கேட்க... வியப்பில் விழிகள் விரித்தனர் எதிரே அமர்ந்திருந்த விவசாயிகள்.

தொடர்ந்து, தக்காளி மட்டுமல்லாமல்... மிளகாய், கொய்யா போன்றவற்றிலும் மதிப்புக்கூட்டுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட, ஆர்வத்தோடு அவற்றில் பங்கெடுத்தனர் விவசாயிகள். அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்ட விஷயங்களில் இருந்து தக்காளி ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு முறைகள் இங்கே இடம்பிடிக்கின்றன.
--------
1) தக்காளி ஊறுகாய்!

தேவையான பொருட்கள்:

நன்றாகப் பழுத்தத் தக்காளி - ஒரு கிலோ, மிளகாய்த்தூள் - 2, டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 ஸ்பூன், ரீஃபைண்ட் ஆயில் - 250 மில்லி, பூண்டு - 20 பல், பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு



தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும். நன்கு கொதிக்கும் நிலையில் நீர்வற்றி கெட்டியாக மாறும். அப்போது சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமாக எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேகவிட்டு, பின்பு இறக்க வேண்டும்.

பிறகு, வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளிக் கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும். இது, சாதாரண நிலையிலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்டநாட்களுக்கு வைத்திருக்கலாம். இதை, அனைத்து உணவுகளுக்கும் தொட்டுச் சாப்பிட பயன்படுத்தலாம்.
------------
2) தக்காளி ஜாம்!

தேவையான பொருட்கள்:

தக்காளி பழக்கூழ் - ஒரு கிலோ. சர்க்கரை - 750 கிராம். சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி.

தக்காளியைச் சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப்பகுதிகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அவற்றை மிக்ஸி மூலம் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும் (இதுதான் தக்காளி பழக்கூழ்). கொஞ்சம் போல தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேகவிட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.

நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால்... கெட்டியாக விழ வேண்டும். அதுவரை கலவை வேக வேண்டும். இந்தப் பதம் வந்தபின் பாத்திரத்தை இறக்கி வைத்து கொஞ்சம் மட்டும் ஆறவிட்டு, வாய் அகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும். இந்த நிலையிலேயே முழுவதும் ஆறவிட்டு, அதன்பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும். சூடானக் கலவையை பாட்டில்களில் நிரப்பும்போது பாட்டில்களை தரை மீது வைப்பதைத் தவிர்த்து, மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும்.

விற்பனைக்கு அணுகலாம்!

மதிப்புக்கூட்டல் தொழிலுக்கான கடனுதவிகள் பற்றி விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துச் சொன்ன மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவின் வேளாண் அலுவலர் தாம்சன், ''தக்காளி மட்டுமன்றி... மா, பப்பாளி, கொய்யா, பச்சைமிளகாய் என அனைத்துப் பயிர்களுமே ஆண்டு முழுக்க மாறி மாறி இந்த மாவட்டத்தில் விளைவிக்கப்படுகின்றன. அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றபடி அவற்றையெல்லாம் மதிப்புக்கூட்டி, நல்ல லாபம் பார்க்கலாம்.

நாம் மதிப்புக்கூட்டும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கவலைப்படத் தேவையில்லை. பெரிய வணிக நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் தரத்துடன் தயாரித்துக் கொடுக்கப்படும் ஜாம், சாஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவை விவசாயிகள் தயக்கமின்றி அணுகலாம்'' என்று அழைப்பு வைத்தார்.



தொலைக் காட்சி நாடகங்களும்​, சீர்கெட்டு​ப் போகும் குடும்பங்க​ளும்



பார்க்காமல் இருக்க முடியவில்லை!!!!!
பார்த்தாலும் இருக்க முடியவில்லை!!!!!

தொலைக்காட்டி என்ற அழகிய கண்டுபிடிப்பு இன்று அசிங்கப்பட்டு நிற்பதற்குக் காரணம் அதில் வெளிவரும் தகவல்கள் தாம்.

 
நாட்டு நடப்புக்கள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், சமுதாய விளிப்புணர்வுத் தகவல்கள் என்று நல்ல செய்திகள் வந்த காலங்கள் மலையேறிவிட்டது என்று சொல்லுமளவுக்கு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமுதாய சீர்கேட்டை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு திறைப்படமாவது ஒளி, ஒலிபரப்பாத சேனலே இருக்க முடியாது. அதே போல் எந்த சேனலில் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் இல்லையோ அந்த சேனல்களை வீட்டுப் பெண்கள் பார்ப்பதற்கே விரும்புவதில்லை.

ஆம் திரைப்படத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கு மூன்று மணி நேரங்கள் வீனடிக்கப்படுகின்றனவென்றால், தொலைக்காட்சித் தொடர்களுக்கு நாளும் பல மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டு குடும்பமே அமர்ந்து ரசிக்கும் நிலை உருவாகியுள்ளது.

குடும்பப் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.

இளைஞர்களுக்கான உற்சாகமூட்டும் தொலைக்காட்சித் தொடர் நாடகம்.

இளம் பெண்களின் எண்ணத்திற்கேற்ற தொடர் கதை.

சிறுவர்களை வயப்படுத்தும் தொடர் நாடகம்.

வயோதிபர்களின் வயதுக்கேற்ற நாடகம்.

என்று பல வித்தியாசமான விளம்பரங்களுடன் ஒளிபரப்பப்படுகின்றன இன்றைய நாடகங்கள்.

இந்தியா, இலங்கை போன்ற ஆசிய தமிழ் பேசும் மக்களைத் தாண்டி உலகலவில் பல நாடுகளிலும் இந்த தொலைக் காட்சித் தொடர் நாடகங்கள் பிரபலம் பெற்றுள்ளன.

தொலைக்காட்சித் தொடர்களும், விபரீதங்களும்.

தொலைக்காட்சித் தொடர் நாடகங்களுக்காக நேரம் ஒதுக்கி, அவற்றை ரசித்துப் பார்க்கக் கூடிய பெண்கள், மறுமை நாளின் நிகழ்வுகளை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.


கற்பனையான கதைகள், பொய்யான தகவல்கள், சமூக சீர்கேடுகள், பழிவாங்கள் தந்திரங்கள், கொலை முயற்சிகள், என்று மனிதனை ஒரு கேவலமான ஜீவனாக காட்ட முனையும் இந்த தொடர் நாடகங்களைப் பார்ப்பவர்கள் இறுதியில் அதை தானும் பின்பற்றும் தீய நிலைக்கு செல்வதை கண் கூடாகக் காணக் கிடைக்கிறது.


தொலைக்காட்சி நாடகம் பார்த்தேன் அதன் படி கொலை செய்தேன்.

நாடகத்தில் வந்ததைப் போல் செய்து பார்க்க எண்ணி தூக்கில் தொங்கினான் மரணித்து விட்டான்.

தொலைக்காட்சித் தொடர் வழியில் எனது கோபத்தை தீர்த்துக் கொண்டேன்.

தவறு செய்துவிட்டு இப்படியெல்லாம் செய்தி வெளியிடுவதைப் தினமும் காணக்கிடைக்கும்.

மாமியாரை பழிவாங்குவது எப்படி?

மருமகளை அடக்குவது எப்படி?
தாயையும், மகனையும் பிரிப்பது எப்படி?

சகோதரர்களுக்கு மத்தியில் பிரச்சினையை உண்டாக்குவது எப்படி? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது இந்த தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள்.

உலக வழிகாட்டி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.


ஒவ்வொரு மனிதனும் எப்படி மரணிக்கிறானோ அப்படியே தான் (மறுமையில்) எழுப்பப் படுவான். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) அவா்கள். (நூல் முஸ்லிம் 5126)

நாம் தொலைக்காட்சியைப் பார்ப்பது தவரல்ல அதில் உள்ள நல்ல செய்திகளைப் பார்க்களாம், பார்க்க வேண்டும். ஆனால் தொலைக்காட்சி தொடர் போன்ற பாவமான நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது அல்லாஹ்விடம் தண்டனை பெரும் குற்றத்தை நாம் செய்கிறோம் என்பதை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற பாவங்களை செய்து கொண்டிருக்கும் போது (தொலைக்காட்சித் தொடர்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது) நமது உயிர் பிரிந்தால் நமது நிலை என்னவாகும்?
நாம் எப்படி மரணிக்கிறோமோ அப்படித்தான் மறுமையில் எழுப்பப்படுவோம் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நமது மரணம் தீமையை செய்து கொண்டிருக்கும் போது நிகழ்ந்தால் கண்டிப்பாக நாம் பாவியாகத்தான் எழுப்பப்படுவோம். ஆதலால் இந்தத் தீய காரியத்தை விட்டும் நாம் நம்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 
ஓய்வு நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

 
வீட்டில் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஓய்வாக இருக்கும் போதுதான் இந்த நாடகங்களைப் பார்க்கிறோம் என்று சிலர் தாம் செய்யும் பாவத்திற்கு ஒரு சாக்குச் சொல்வார்கள்.


ஓய்வு நேரத்தை எத்தனையோ நல்ல காரியங்களில் பயன்படுத்த முடியும் ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இது போன்ற தீய காரியங்களில் பயன்படுத்துவதற்கான வழியாகத் தான் இந்த பதிலை அவர்கள் தயார் செய்திருப்பார்கள்.
பார்க்காமல் இருக்க முடியவில்லை பழகிவிட்டோம், பார்த்தாலும் இருக்க முடியவில்லை பிடித்துவிட்டது இது போன்ற பல பதில்கள் நமது குடும்பப் பெண்களிடம் இருந்து சர்வ சாதாரணமாக வெளிப்படுகின்றன.

 
குர்ஆன் ஓதுதல்.

மார்க்கம் தொடர்பான மாத இதழ்களை படித்தல்.

சிறந்த புத்தகங்களை வாசித்தல்.

பயான் நிகழ்ச்சிகளை பார்த்தல்.

பிள்ளைகளுடன் விளையாடுதல்.

பிள்ளைகளுக்கு படித்துக் கொடுத்தல்.

தையல் வேலைகளை செய்தல்.

தாய்க்கு உதவிகளை செய்தல்.

உறவினர்களுக்கு உதவுதல்.

மனைவிக்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்தல்.

நமது சொந்த வேலைகளை செய்து கொள்ளுதல்.
சொந்தங்களுக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்தல் என்று எத்தனையோ நல்ல காரியங்கள் செய்ய முடியுமான ஓய்வு நேரத்தில் எங்களுக்கு வேலைகள் இல்லை, அதனால் தொலைக்காட்சித் தொடர் பார்க்கிறோம் என்று சர்வ சாதாரணமாக பதில் சொல்லும் தாய்மார்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ள வேண்டும்.
இரண்டு அருட்கொடைகள் விஷயத்தில் மக்கள் நஷ்டத்திலேயே இருக்கிறார்கள் அவை ஓய்வு நேரமும், ஆரோக்கியமுமாகும். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நூல் : புகாரி)

ஓய்வு நேரத்தை ஒரு பாக்கியமாக இஸ்லாம் சொல்லித்தருகிறது. ஓய்வு நேரத்தை மிகச் சரியான முறையில் பயன்படுத்தும் போது வாழ்க்கையில் பல வெற்றிப்படிகளை நாம் எட்ட முடியும்.
நபி (ஸல்) அவர்கள் தனது மனைவிக்குறிய வேலைகளை செய்திருக்கிறார்கள், தனது செருப்பை தானே தைத்திருக்கிறார்கள் என்ற செய்திகளையெல்லாம் நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம்.


நமது ஓய்வு நேரங்களில் நாம் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு நேரத்தை பிரயோஜனமானதாக மாற்றலாம்.


நம்மையே மறக்கச் செய்யும் தீய செயல்.

 
தொலைக்காட்சி தொடர் நாடகங்களினால் ஏற்பட்ட பல விளைவுகள் பத்திரிக்கைச் செய்திகளில் நாம் காணக்கிடைக்கின்றன.

தாய் நாடகம் பார்த்துக் கொண்டிருப்பதை பயன்படுத்தி கடத்தப்பட்ட குழந்தைகள்.
தொலைக்காட்சித் தொடரில் தாய் மூழ்கிப் போய் குழந்தையை மறந்திருந்த நேரம் வீட்டு முன்பிருந்த சாக்கடையில் விழுந்து மரணித்த குழந்தை.

இது போன்ற செய்திகள் தினமும் செய்தித் தாள்களில் வருவதற்கு காரணம் என்ன? கற்பணையக   உருவாக்கப்பட்ட கதைகளில் நம்மை நாம் தொலைத்து நமது பொன்னான நேரத்தையும் தொலைத்து, நமது குடும்பத்தினரின் எதிர்காலம், நமது எதிர்காலம் என்று அனைத்தையும் இழந்துவிடுகிறோம்.

 
வெட்கத்தை இழக்க வைக்கும், வெட்கம் கெட்ட செயல்.

ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (நூல்: புகாரி 9)

மனிதனின் மிக முக்கிய குணங்களில் மதிக்கத் தக்க ஒரு குணம் தான் வெட்கம் என்பது இன்றைக்கு யாரெல்லாம் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி இருக்கிறார்களோ அவர்களிடம் இந்த குணம் படிப்படியாக குறைந்துவிடுவதை நாம் காண முடியும்.

அண்ணிய ஆண்களிடம் சாதாரணமாக பேசும் பெண்கள், பெண்களிடம் சாதாரணமாக குழைந்து பேசும் ஆண்கள் என்று அனைவரிடமும் வெட்கம் அற்றுப் போவதற்கு இந்த தொடர்கள் காரணமாக இருக்கின்றன.

அண்ணியை அண்னை என்று நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அண்ணனுக்கு துரோகம் செய்யும், தம்பிகளை உருவாக்கியது இந்த தொலைக்காட்சித் தொடர்கள் தாம்.

கணவனின் தம்பியை என் தம்பியாக நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு கணவனுக்க மாறு செய்யும் மணைவிகளை உருவாக்கியதும் இந்த தொலைக்காட்சித் தொடர்கள் தாம் என்பதில் எல்லளவுக்கும் சந்தேகம் இல்லை.

"என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்'' என்று ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, "ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி), (நூல்: புகாரி 6846, 7416 )

மனைவி என்பவள் நமக்கு மட்டும் உரிமையானவள், நவீன விற்பனை பொருள் அல்ல மற்றவர்களுக்கும் காட்சிப் படுத்துவதற்கு.

"என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்'' என்று ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்களே அவர்களின் ரோஷம் நமக்கு வேண்டாமா? நபியவர்கள் அவர்களை பாராட்டிப் பேசினார்களே அது போல் நாம் மாற வேண்டாமா?

சமுதாயத்தில் நடப்பதைத்தானே காட்டுகிறார்கள்?

சமுதாயத்தில் நடப்பதைத் தானே காட்டுகிறார்கள் என்று தன்னிலை விளக்கம் சொல்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன தெரியுமா? சமுதாயத்தில் நடப்பதை காட்டுவதாக சொல்பவர்கள் தாம் சமுதாயத்தில் அப்படி நடப்பதற்கு காரணமாகவே இருக்கிறார்கள்.

ஒரு குற்றத்திற்கு காரணமாக இருந்துவிட்டு, அப்படி நடக்கிறது என்பதை சமுதாயத்திற்கு உணர்த்துகிறோம் என்று பதில் சொல்வது எந்த ஊரில் அறிவுடமையாக பார்க்கப்படுகிறது? கேவளமான தொழிலுக்கு மரியாதையான பெயரா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார்,அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: முஸ்லிம் 3971
சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகராத பெண்களின் பட்டியலில் நாம் சேர வேண்டுமா என்ன?

சகோதரிகளே! ஆடை விஷயமாக இருந்தாலும், தலை முடியை பிண்ணல் போடும் விஷயமாக இருந்தாலும் அனைத்திலும் நாம் பின்பற்ற நினைப்பது தொலைக்காட்சித் தொடர் நாயகிகளை, நாயகர்களைத் தானே?

நமது வழிகாட்டியாக நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது இவர்கள் யார் நமக்கு நாகரீகம் கற்றுத்தருவதற்கு?
உலகிலும், மறுமையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இப்படிப்பட்ட தீய செயல்களைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

Thursday, March 29, 2012

எதுமலையின் மருமகனும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்திக் கொலை


 
எதுமலை சீனிவாசனின் மருமகனும் முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் (வயது 50). தொழில் அதிபரான இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி நடத்தி வருகிறார். இவர் தில்லை நகர் 10-வது கிராசில் வசித்து வருகிறார். தினமும் அதிகாலையில் ராமஜெயம் வாக்கிங் செல்வது வழக்கம்.

அவ்வாறு செல்லும் அவர் காலை 7.30 மணிக்கு வீடு திரும்பி விடுவார். இன்று காலை வழக்கம்போல் தனது மனைவி லதாவிடம் கூறிவிட்டு ராமஜெயம் வாக்கிங் சென்றார். ஆனால் 8 மணி வரை அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி லதா காலை 8.30 மணிக்கு கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போனை ஆன் செய்தவுடன் எதிர்முனையில் இருந்து எந்த பதிலும் இல்லை.
சில விநாடிகளில் அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ராமஜெயத்தின் மனைவி லதா பதட்டம் அடைந்தார். இதுபற்றி தனது உறவினர் களிடம் கூறினார். அவர்களும் ராமஜெயம் வாக்கிங் செல்லும் இடங்களுக்கு சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் இல்லை. இதற்கிடையே ராமஜெயம் மாயமான தகவல் திருச்சி முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. உடனே ராமஜெயத்தின் வீடு முன்பு தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர்.
இருந்தபோதிலும் காலை 11 மணி வரை ராமஜெயம் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் பரபரப்பும், பதட்டமும் அதிகமானது. இதையடுத்து ராமஜெயத்தின் மனைவி லதா தில்லை நகர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:-
எனது கணவர் ராமஜெயம் தினமும் வாக்கிங் சென்றுவிட்டு காலை 7.30 மணிக்கு வீடு திரும்புவார். இன்று காலை வழக்கம்போல் வாக்கிங் சென்ற அவர் காலை 8.30 மணி வரை வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. சில வினாடிகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் எனது கணவரின் செல்போனில் இருந்து அவரது நண்பர்களிடம் தொடர்பு கொண்டு பேசியவர்கள் எனது வீட்டு விலாசம் உள்ளிட்ட விபரங்களை கேட்டு உள்ளனர். எனவே சமூகவிரோத கும்பலால் எனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனது கணவரை கண்டு பிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதற்கிடையே ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் அருகே உள்ள திருவளர்ச்சோலை பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு ஒருவரின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு பிணமாக கிடந்தவர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் என்பது உறுதியானது. பிணமாக கிடந்த ராமஜெயத்தின் கை, கால்கள் கட்டப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. எனவே அவரை கடத்தி சென்றவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட ராமஜெயத்தின் உடல் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. ஆஸ்பத்திரி முன்பு தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். தொடர்ந்து அங்கு பதட்ட மான சூழ்நிலை நிலவி வருகிறது. கொலையுண்ட ராமஜெயம் ஏற்கனவே நில அபகரிப்பு வழக்குகளில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை கடத்தி சென்ற மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.










கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை! (படங்கள் 3)

















கே.என்.நேரு தம்பி ராமஜெயம் படுகொலை: உடலை அடையாளம் காட்டிய மகன் (ஸ்பாட் படங்கள்)




























பழைய கட்டிடம் இடிப்பது எப்படி (Demolition)

பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டம் போட்டுள்ளனர்.இந்தக் கட்டிடம் இடிக்கப்படுவதை காணலாம்

 
























பொக்லீன் இயந்திரத்தை கிரேன் கொண்டு கட்டிடத்தின் மேல்



Monday, March 26, 2012

மாணவர்களே.. தேர்வு பயம் தேவையற்றது

பொதுவாக தேர்வு என்றாலே மாணவர்களுக்கு சற்று பயம்தான். அதிலும் பொதுத் தேர்வு என்று வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். பயத்துடன் காய்ச்சலும் கூட சேர்ந்து கொள்ளும். அதிலும் சிபிஎஸ்இ போன்ற சற்று அதிகப்பாடச்சுமை உள்ள மாணவர்களுக்கு தேர்வு காரணமாக உடல்நிலை மிகவும் கெட்டு விடுகிறது.
மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தேர்வு நேரத்தின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் இலவச தொலைபேசி அழைப்பில் மனநல நிபுணர்களைக் கொண்டு கவுன்சிலிங்கும் அளிக்கிறது.

ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் படிப்புகள்:



பெரும்பாலான மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பின் டாக்டர், என்ஜினீயர் ஆக வழிவகுக்கும் மருத்துவம், பொறியியல் படிப்பை மட்டுமே தங்களது உயர் கல்வி நோக்கமாகக் கருதுகின்றனர். இதையும் கடந்து என்னென்ன உயர் கல்வி வாய்ப்புகள் உள்ளன என்பதை பலரும் தீவிரமாக ஆய்வு செய்வதில்லை. பெற்றோர்களும் இந்த மாயையிலிருந்து விடுபட்டு விருப்பமான துறைகளைப் பிள்ளைகள் தேர்வு செய்ய அனுமதிப்பதில்லை. இதர துறைகளில் பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கக் கூடிய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஒரு கட்டணக் கழிப்பிடம்

இந்தியாவில் ஏறக்குறைய பாதி வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. ஆனால், பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைபேசி (பெரும்பாலும் செல்போன்) உள்ளது என்பது 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள புள்ளிவிவரம்.

பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!


பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

Sunday, March 25, 2012

இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் !



கடந்த சில வருடங்களாக இட ஒதுக்கீடு என்ற சொற்றொடரை நிறையவே கேட்டு வருகிறோம். பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. (பாஸ்போர்ட் இருக்கும்போது ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?) ஆனாலும் ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் அரசு வேலை வாய்ப்புகளிலும், மேற்கல்வி பட்டறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்று போராடிவருகின்றன.