Wednesday, February 22, 2012

வளைகுடா வாழ்க்கை

வளைகுடா வாழ்க்கையை பலபேர் தத்தமது அனுபவத்தில் பலவிதமாக கிண்டலாகவும், நக்கலாகவும், வேதனையாகவும் கூட பேசியதும், எழுதியதும் உண்டு. இது போன்ற செய்திகளை தாங்கிய மின்னஞ்சல்கள் பலரிடமிருந்து அவ்வப்பொழுது நமக்கு பறந்து வராமலில்லை.

அவர்களில் பலர் 'என்னையா ஊரு இது? பசுமை இல்லை. நீர் நிலைகள் இல்லை, ஏரி, குளங்கள் இல்லை. வயல்,வரப்புகள் இல்லை. போதிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. தெருக்கூத்து இல்லை, ஸ்ட்ரைக், போராட்டங்கள் இல்லை, தேர்தல் இல்லை' (நல்ல வேளை இங்கு பால் விலை உயர்வு இல்லை, பஸ் கட்டண உயர்வு இல்லை, மின்சாரக் கட்டண உயர்வு இல்லை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லை என்று சொல்லி அழுத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி) என இப்படி பட்டியலிட்டு அழுத்துக்கொள்ளும் நபர்கள் பலர் உடும்பை விட அரபுதேசங்களை விடாப்பிடியாகத்தான் இன்றும் பிடித்துக்கொண்டுள்ளனர்.


எவரையும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் 'இந்த கம்பெனியை விட்டு விலகிச்சென்றால் உங்கள் தலை சீவப்படும்' என்றும் 'விடுமுறையில் ஊர் போய் திரும்பவில்லை' என்றால் இந்த‌ வழக்கை நாட்டின் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் எந்த கம்பெனியும் கடின சட்டத்தை இயற்றி எச்சரிக்கையை அவர்களின் பணியாளர்களுக்கு விடுப்பதில்லை. இப்படி அடிக்கடி அரபு நாட்டு வாழ்க்கையை எதையாவது சொல்லி அழுத்துக்கொள்ளும் நபர்களிடம் சென்று 'தாங்கள் எத்தனை வருடங்களாக இந்த அரபுநாட்டில் வேலை செய்து வருகிறீர்கள்?' என்று கேட்டால் சர்வசாதாரனமாக‌ சொல்வார்கள் 'வரும் டிசம்பருடன் மொத்தம் 17 வருடங்கள் ஆக இருக்கின்றன‌' என்று. அந்த 17 வருடங்களும் பஹ்ரைன், அபுதாபி, குவைத், கத்தார், சவுதி, ஓமன் என பரவலான அரபு தேசங்களில் அங்குமிங்குமாக கொஞ்சம் கொஞ்சம் பிச்சி,பிச்சி போடப்பட்டிருக்கும். ஆனால் எதிர்கட்சி தலைவர் போல் தான் வசித்து வரும் நாட்டை கண்டபடி விம‌ர்சித்து விடுவ‌ர்.


அர‌புநாட்டு வாழ்க்கையில் இள‌மையை தொலைத்து ம‌னைவி, ம‌க்க‌ளுட‌ன் போதிய‌ கால‌ங்க‌ளை செல‌வ‌ழித்து அவ‌ர்க‌ளுட‌ன் வாழ‌ இய‌லாம‌ல் போய் இருக்க‌லாம். ஆனால் அவ‌ர்க‌ள் ப‌ல‌ரின் வீடுகட்டுதல், பிள்ளைகளை படிக்க வைத்தல், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தல் போன்ற தேவையான‌ வாழ்வாதார‌ங்க‌ள் ஊரில், வீட்டில் உய‌ர்த்த‌ப்ப‌டாம‌ல் இல்லை.


என‌க்கு வ‌ந்த‌ ஒரு மின்னஞ்சலில் ஒரு ஆங்கில குழ‌ந்தை பாட்டை இப்ப‌டி சுவ‌ராஸ்ய‌மாக‌ அர‌பு நாட்டு வாழ்க்கையுட‌ன் ஒப்பிட்டு குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌து. இது எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லி விட‌ இய‌லாவிட்டாலும் ப‌டிக்கும் பொழுது சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்த‌து. அது இதோ உங்க‌ளுக்காக‌.


'O' my son ! 'O' my son !- Gulf version!!

'O' my son ! 'O' my son... YES PAPA !
Job in Gulf.. YES PAPA !
Lot of Tension.. YES PAPA !
Too Much Work.. YES PAPA !
Family Life.. NO PAPA !
BP-Sugar.. HIGH PAPA !
Yearly Bonus.. JOKE PAPA !
Annual Pay.. LOWEST PAPA !
Personal Life.. LOST PAPA !
Promotion Incentive.. HA ! HA ! HA !

No comments:

Post a Comment