தினமும் பண்ணையில் குறைந்தது ஒருமுறையாவது வளரும் குஞ்சுகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என கவனிக்க வேண்டும் ஈமுக்கோழிக்குஞ்சுகளின் கால்களின் ஏதேனும் குறைகள் உள்ளனவா எனக் கண்டறிந்து அவ்வாறு உள்ள பறவைகளை தனியாக பிரித்து பராமரிக்கவேண்டும். ஒரே சமயத்தில் குஞ்சுகளை வளர்த்து ஒரே சமயத்தில் விற்று விட வேண்டும் வளரும் ஈமுக்கோழிக்குஞ்சுகளை வளர்ந்த பெரிய கோழிகளுடன் ஒன்றாக வளர்க்கக்கூடாது
வளரும் ஈமுக் கோழிக் குஞ்சுகளை பராமரிக்கும் செய்யக் கூடாதவை
வளரும் ஈமுக்கோழிக்குஞ்சுகளின் கொட்டகைக்குள் கூர்மையான அல்லது கூழாங்கற்கள் போன்ற பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.ஏனெனில் ஆர்வத்தின் காரணமாக வளரும் ஈமுக் கோழிகள் கண்ணில் படும் பொருட்களையெல்லாம் இழுத்து விடும் வெய்யில் அதிகமாக இருக்கும்போது வளரும் ஈமுக்கோழிக் கோழிகளை தடுப்பூசி போடுவதற்காக பிடிக்கக்கூடாது நாள் முழுவதும் வளரும் ஈமுக்கோழிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
இனப்பெருக்கம் செய்யும் ஈமுக்கோழிகளை பராமரிக்கும் முறைகள்
ஈமுக்கோழிகள் 18-24 மாத வயதில் முதிர்ச்சி அடையும். ஒரு ஆண் ஈமுக்கோழிக்கு ஒரு பெண் ஈமுக்கோழி என்ற விகிதத்தில் பராமரிக்க வேண்டும்.இனப்பெருக்கம் செய்யும் ஒரு ஜோடி ஈமுக் கோழிகளுக்கு 2500 சதுர அடி இடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இனப்பெருக்கம் செய்ய தனிமைக்காக மரங்கள் மற்றும் புதர்கள் இருக்கும் இடத்தினை தேர்வு செய்ய வேண்டும். இனப்பெருக்கம் செய்யும் ஈமுக்கோழிகளுக்கென தயாரிக்கும் தீவனத்தினை இனப்பெருக்க காலத்திற்கு 3-4 வாரத்திற்கு முன்பே அளிக்கத் தொடங்க வேண்டும். தீவனத்தில் போதுமான அளவு தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் கலந்து அளிப்பதன் மூலம் முட்டைகளின் கருவுறுதல் மற்றும் குஞ்சுபொரிக்கும் திறனை அதிகரிக்கலாம்.
இனப்பெருக்க காலத்திற்கு பின்பு ஆண், பெண் பறவைகளை தனியாகப் பிரித்து பராமரிக்க வேண்டும். சாதாரணமாக, ஒரு வளர்ந்த ஈமுக்கோழி ஒன்று, ஒரு நாளைக்கு ஒரு கிலோ தீவனம் உண்ணும். ஆனால் இனப்பெருக்க காலத்தில் தீவனம் எடுக்கும் அளவு திடீரென குறையத்தொடங்கும்.எனவே இத்தருணத்தில் போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் ஈமுக்கள் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பெண் ஈமுக்கோழிகள் அவற்றின் 2.5 வயதில் முதல் முட்டையிடத் தொடங்கும்.முட்டையிடுதல் வருடத்தின் குளிரான மாதங்களில் (அக்டோபர் முதல் பிப்ரவரி)வரை நடைபெறும். முட்டையிடுதல் மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறும். முட்டைகள் உடைவதை தடுக்க தினமும் இரண்டு முறை முட்டைகளை சேகரிக்க வேண்டும். பருவமடைந்த முதல் வருடத்தில் ஒரு பெண் ஈமுக்கோழி 15முட்டைகள் இடும். பின்வரும் வருடங்களில் இடும் முட்டைகளின் அளவு 30-40 வரை அதிகரிக்கும்.. ஒரு ஈமு கோழியின் முட்டையின் எடை 475-650 கிராம் ஆகும்.ஈமுகோழிகளின் முட்டை பச்சை நிற மார்பிள் கல்லின் நிறத்தில் இருக்கும்.முட்டை ஓட்டின் மேற்புறம் வழுவழுப்பாகவோ அல்லது சொரசொரப்பாகவோ இருக்கும்.பெரும்பாலான (42%) முட்டைகள் நடுத்தர பச்சை நிறத்தில் மேற்பகுதி சொரசொரப்பாக இருக்கும்.
|
ஈமுக்கோழி முட்டைகள் |
இனப்பெருக்கத்திற்கு பயன்படும் பெண் ஈமுகோழிகளுக்கு போதுமான அளவு கால்சியம் சத்து (2.7%) அளிக்கப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட முட்டைகளை60˚F வெப்பநிலையில் சேமித்து வைக்கவேண்டும். கருவுற்ற முட்டைகளை 10நாட்களுக்கு மேல் சேகரித்து வைக்கக்கூடாது. முட்டைகளை சேகரித்து 3-4நாட்களுக்குள் அடை வைத்து விட வேண்டும்.
முட்டைகளை அடைகாத்தல்
கருவுற்ற முட்டைகளை முட்டை அடைகாப்பானில் குஞ்சு பொரிப்பதற்காக வைக்கவேண்டும். அடைகாப்பான் முட்டை அடை வைப்பதற்கு முன்பு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பு அடைகாப்பானில் உலர் வெப்பமானியில் 96-97˚F,ஈரவெப்பநிலைமானியில் 78-80˚F என்ற வெப்பநிலைக்கு பொருத்த வேண்டும். மேலும் அடைகாப்பானின் உள்ளே ஈரப்பதம் 30-40% இருக்குமாறு பார்த்துகொள்ள வேண்டும்.முட்டைகளை குஞ்சு பொரிப்பதற்காக வைக்கும் தேதி, முட்டையிட்ட தேதி ஆகியவற்றை குறித்துக் கொள்ள வேண்டும்.
முட்டைகளை அடைவைத்து 48ம் நாள் வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திருப்பிவிட வேண்டும் அல்லது தானியங்கி அடைகாப்பானை பயன்படுத்தலாம். நாற்பத்தி ஒன்பதாம் நாளிலிருந்து முட்டைகளை திருப்புவதை நிறுத்தி விடவேண்டும். 52ம் நாள் முட்டை அடைகாப்பது முடிவுறும். நாற்பத்தி ஒன்பதாம் நாளிலிருந்து 52ம் நாள் வரை முட்டை ஒட்டினை உடைத்து குஞ்சுகள் வெளி வரத் துவங்கும். முட்டையிலிருந்து குஞ்சு பொரித்து வெளிவந்த பின்பு, குஞ்சுகள் 1-3 நாட்களுக்கு அடைகாப்பானிலேயே பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான குஞ்சுகளைப் பெறலாம். பொதுவாக,ஈமுகோழிகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 70% இருக்கும். இனப்பெருக்கத்திற்கு பயன்படும் ஈமுகோழிகளுக்கு சரிவிகித தீவனம் அளித்தால் ஆரோக்கியமான குஞ்சுகளைப் பெறலாம்.
தீவன மேலாண்மை
ஈமுக்களின் பராமரிப்பிற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் சரிவிகித தீவனமளிப்பது முக்கியமாகும். ஈமுக்களுக்கு இது வரை தேவைப்படும் சத்துகளின் சரியான அளவு கண்டறியப்படவில்லை. எனினும் ஆராய்ச்சி முடிவுகளின்படி ஈமுகோழிகளுக்கு தேவையான சத்துகளின் அளவு பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோழிகளுக்கு தீவனம் அரைக்க பயன்படும் மூலப்பொருட்களையே ஈமுகோழிகளுக்கும் பயன்படுத்தலாம். தீவனச்செலவு மட்டுமே மூலதன செலவில் 60-70 சதவிகிதம் இருப்பதால், குறைந்த செலவுடைய தீவன மூலப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் தீவன செலவினை குறைக்கலாம். வணிக ரீதியாக வளர்க்கப்படும் ஈமு கோழிப் பண்ணைகளில் ஒரு ஜோடி ஈமு
|