Wednesday, February 29, 2012

நம் வாழ்கையில் காணமல் போன சில பொருட்கள்-பாகம் -1

1990க்கு   பிறகு  வாழ்கை இயந்திரமாயமாக ஆகி போனபிறகு நம் உபயோகப் படுத்தும் சில பொருட்கள் கண்ணில் கூட பார்க்க முடியாமலும், இப்ப இருக்கும் தலைமுறைகளுக்கு அது என் என்றும் கூட தெரியாத நிலைக்கு  உள்ளது. 

உதாரணமாக : நம்மாளுங்க அந்தக் காலத்துல இருந்தே ஒவ்வொரு வேலைகும்  ஒவ்வொருவிதமானக் கருவிகள கண்டுபிடிச்சு பயன்படுத்திக்கிட்டுதான் வந்திருக்காங்க.

 அரிவாள்மணை, அருவா, ஏத்தம் இறைக்கு சால், கட்ட வண்டி, லாந்தர் விளக்கு,  ஆழ கரண்டி, கிணற்றி நிர்         இரைக பயன் படும் வாளி, உருளை, கயறு . கடப்பாரை, உலக்கை, செக்கு, ஆட்டுக்கல், வாய்ப்பொட்டி,  மூங்கில்முறம், கோடாரி, மண்வெட்டிக் , இரும்புக் கொடுவாள், திருகை, அம்மி, கொடாப்பு, சுத்தி, மத்து, வெள்ளம்  காய்ச்சும் அடுப்பு, படி, வல்லம், தொரட்டு, சல்லடை... என்ன தலை சுத்துற மாதிரி இருக்கா?             


அதற்காக பல நாட்கள்  முயற்சி செய்து, வலைதளத்தி  தேடி எடுக்கப்பட்ட  பல  விசயங்களை இங்கு  தொகுத்து உள்ளேன். சில பொருட்கள்    இன்னும் தேடியும் கிடைக்காத சுழ்நிலையில் உள்ளது.

         
இங்கு தொகுக்கப்பட் பொருட்கள்,  வருங்கலத்தில் IAS &   IPS தேர்வுகளில் கேட்க படும் முக்கியமான கேள்வியாக இருந்தாலும் ஆச்சறியபடுவதற்கு இல்லை.               


அரிவாள்மணை என்பது தமிழர் சமையலறைகளிலும், பிற இந்தியச் சமையலறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு கருவி ஆகும். இதை, அரிவாள், அருவாமணை போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு.

பொதுவாகக் காய்கறிகளை நறுக்குவதற்கும், பிற உணவுக்கான பொருட்களை வெட்டுவதற்கும் இது பயன்படுகின்றது. பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்ட ஒரு ஒடுங்கிய செவ்வகவடிவான பலகையும் அதன் ஒரு முனைக்கருகில் நிலைக்குத்தான நிலையில் பொருத்தப்பட்ட இரும்பாலானதும், சுமார் ஒரு அடி நீளம் கொண்டதுமான வெட்டும் அலகும் சேர்ந்ததே அரிவாள்மணை.

 தற்காலச் சமையல்

தற்காலச் சமையலறைகளில் நின்றுகொண்டே சமைப்பதால், அரிவாள்மணை வசதியானதாக அமைவதில்லை. இதனால் முன்னர் அரிவாள்மணை கொண்டு செய்த வேலைகளைத் தற்போது கத்தியைப் பயன்படுத்திச் செய்கின்றனர்.

துருவுபலகை என்பது தமிழர் மரபுவழிச் சமையலறைகளிலும், வேறும் சில இந்தியச் சமையலறைகளிலும் பயன்படும் ஒரு கருவி ஆகும். இது மருவிய சொல்லான திருவலை என்னும் சொல்லாலும் அழைக்கப்படுவது உண்டு.
இதனைப் பயன்படுத்தித் தேங்காயைத் துருவித் தேங்காய்ப்பூ பெறுவர்.
துருவுபலகை, இருந்து துருவுவதற்கான செவ்வக வடிவ மரப்பலகையையும், விளிம்பில் பற்கள் போன்ற அமைப்புக்கொண்ட வட்டமான இரும்பாலான துருவும் கொண்டது. சில துருவுபலகைகளில், கிடையாக அமைந்த இருக்கும் பலகையும், அதன் ஒரு முனையில் இருந்து தொடங்கி மேல் நோக்கிச் சரிந்திருக்கும் மரத்தாலான கழுத்துப் போன்ற பகுதியும் ஒரே மரத்தினால் செய்யப்பட்டிருக்கும். சரிவான அக் கழுத்துப் பகுதியின் மேல் முனையில் துருவும் அலகு பொருத்தப்படும். சில துருவுபலகைகளில், இருக்கும் பலகை மட்டுமே மரத்தால் செய்யப்பட்டிருக்கும். துருவும் அலகை அதனோடு இணைந்த வளைவான இரும்புத் தண்டொன்றின் மூலம் மரப்பலகையுடன் பொருத்துயிருப்பர். நிலத்தில் இருந்து தேங்காய் துருவுவதற்கா வடிவமைக்கப்பட்டது இது. இதன் மூலம் துருவும்போது துருவும் அலகு நிலையாக இருக்க, துருவுபவர் தேங்காயை அசைத்துத் துருவ வேண்டும்.

தற்காலத்தில் பல அலகுகளைக் கொண்ட சுழலக்கூடிய துருவும் அலகுகள் பயன்படுகின்றன. இதனோடு இணைக்கப்பட்ட கைபிடியைச் சுழற்றுவதன் மூலம் அலகைச் சுழற்றித் தேங்காய் துருவலாம். இவை உயரமான சமையலறை வேலைத்தளங்களின் விளிம்புடன் பொருத்தக்கூடிய வடிவமைப்புக் கொண்டவை.

உறி  ( புகை படம் கிடைக்கவில்லை)

தயிர், மோர் என்பவற்றைக் கொண்ட பாத்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காகவும் தூக்குவதற்கு இலகுவாகவாவதற்கும் பயன்படுத்தப்படும் ஒழுங்கமைப்பு உறி ஆகும். இது கயிற்றினால் ஆக்கப்படும். பல சட்டிகளை ஒன்றாக வைப்பதற்குரியதாயிருக்கும்

மத்து

மத்து என்பது பெரும்பாலும் தயிரைக் கடைந்து வெண்ணெய் பெறுவதற்காக பயன்படுத்தும் ஒரு கருவியாகும். தயிரைக் கடையும்போது, அதிலுள்ள கொழுப்பு நிறைந்த பதார்த்தம் வெண்ணெயாக மாறிவர, மிகுதியாக இருக்கும் நீர்த் தன்மையான பதார்த்தம் மோர் எனப்படும்.

"சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள். அதில் ஒரு கயிறு கட்டி இருக்கும். மோர் கடைய "மத்து" இருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு இருக்கும்."

பருப்பு மத்து
பருப்பு கடைவதற்குப் பயன்படும் மத்து மேடு பள்ளங்களைக் கொண்டிருக்கும். இது வெந்த பருப்பைக் கூழாக்கப் பயன்படுகிறது. பெரும்பாலும் இது கையாலேயே பயன்படுத்தப்படுகிறது.

அம்மி
அம்மி என்பது கருங்கல்லினால் செய்யப்பட்ட, மருந்து அல்லது சமையலில் பயன்படும் பொருட்களை அரைப்பதற்கு உதவக்கூடிய, சமதளமாக அமைந்த ஒரு கருவியாகும். அம்மிக் கல்லில் பொருளை இட்டு அரைக்க உருளை வடிவில் குழவி என்று அழைக்கப்படும் ஒரு கருங்கல் பயன்படுகின்றது.

இந்தக் குழவியை இரு கைகளாலும் பற்றி, உருட்டியும், இடித்தும், இழுத்தும் பொருட்கள் அரைக்கப்படும். இது தொல்பழங்காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருந்துவரும் ஒரு கற்கருவி ஆகும். அம்மியும் குழவியும் பயன்படப் பயன்பட மழுமழுப்பாகிவிடும், இதனால், பொருட்கள் சரியாக அரைபடாது. எனவே, கல்தச்சர் ஒருவரைக் கொண்டு, உளியால் பொள்ளி நுண்ணிய சிறு சிறு குழிகள் ஆக்குவர் (பொள்ளுதல் = குழி இடுதல்). இதற்கு அம்மி பொளிதல் என்று பெயர். அம்மியும் குழவியும் பொளிவதால் உராய்வு நன்றாக ஏற்படுவதால், பொருட்கள் நன்றாக அரைபடும். தமிழகத்தில், குறிப்பாக இது சிற்றூர்களில், இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சமையலுக்குத் தேவையான மஞ்சள், சீரகம் உள்ளிட்ட பொருட்களை அரைப்பதற்கு உதவுகிறது.
ஒரு அம்மிக்கல்லின் எடை (குழவிக்கல் நீங்கலாக) ஏறக்குறைய நாற்பது கிலோ இருக்கும்.
தமிழகக் கிராமங்களில் ஊருக்குப் பொதுவான இடத்தில் ஒரு அம்மியும், ஒரு ஆட்டுக்கல்லும் வைக்கப்படும். தேவையானவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உலக்கை

உலக்கை என்பது உரலில் மாவு இடித்தல், தானியங்களில் இருந்து உமியை நீக்குதல் போன்றவற்றுக்குப் பயன்படும், மரத்தாலான ஒரு மெல்லிய உருளை வடிவான தண்டு ஆகும். சுமார் ஐந்து அடி நீளமும் இரண்டரை அங்குலங்கள் வரை விட்டமும் கொண்ட இதன் இரு முனைகளிலும் இரும்பால் செய்யப்பட்ட பூண்கள் பொருத்தப்பட்டிருக்கும். இப் பூண் உலக்கையின் நுனி, இடிப்பதனால் பிளந்து போகாமலிருக்க உதவுகிறது. மாவு இடித்தல், நெல்லுக் குற்றுதல் போன்ற செயற்பாடுகளின்போது உலக்கையை நிலைக்குத்தாக மேலே தூக்கி, உரலுக்குள் இருக்கும் பொருட்களின் மீது வேகமாக விழவிடப்படும். பொதுவாகப் பெண்களே இவ்வேலைகளைச் செய்வதால், அவர்கள் இலகுவாகத் தூக்கிக் கையாளுவதற்கு வசதியாக உலக்கையின் எடை அமைந்திருக்கும். ஒரு உரலில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேலை செய்வதும் உண்டு. அப்போது இரண்டு அல்லது மூன்று உலக்கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட உலக்கைகள் ஒரே குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மாறிமாறி உரலுக்குள் விழுந்து எழுவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

 
அரிதட்டு அல்லது மாவரி (சல்லடை )
 என்பது மாவில் குறுணிய சீரான தூள்களை பெரிய கட்டிகளில் இருந்து வேறுபடுத்த பயன்படும் ஒரு சமையல் உபகரணம் ஆகும். மா, ரவை, தூள், பொடி வகைகள் அரிக்கப்படுவதுண்டு.

ஆட்டுக்கல் அல்லது ஆட்டுரல் என்பது கல்லினால் செய்யப்பட்ட மாவு அரைப்பதற்கு உதவக்கூடிய கருவியாகும். இதன் நடுப்பகுதி குழியாக இருக்கும். அதில் அரைக்கவேண்டிய தானியத்தைப் போட்டு குழவியைக் கொண்டு கையால் சுழற்றினால் குழியில் இருக்கும் தானியம் அரைபடும். இது பெரும்பாலும் இட்லி, தோசை போன்ற உணவுப்பண்டங்களை செய்வதற்குத் தேவைபடும் மாவை அரைக்கப் பயன்படுகிறது.

இந்த ஆட்டு உரல் உருண்டை வடிவமான கல்லில் நடுவில் குழியைக் கொண்டிருக்கும். இந்தக் குழியின் அகலத்தை விட சிறிது குறைவான சுற்றளவில் சிறிது உயரமாக கையால் பிடித்து அரைக்கக் கூடிய வடிவமைப்பில் குழவிக் கல் ஒன்றும் இதனுடன் இருக்கும். குழியில் பொருத்தி சுற்றப் பயன்படும் சற்று நீண்டு உருட்டையாக இருக்கும் பகுதிக்குக் ”குழவி” என்று பெயர். ஆட்டுக்கல்லும் குழவியும் பயன்படப் பயன்பட நாளடைவில் மழுமழுப்பாகிவிடும், இதனால், பொருட்கள் சரியாக அரைபடாது. எனவே, கல்தச்சர் ஒருவரைக் கொண்டு, உளியால் பொள்ளி நுண்ணிய சிறு சிறு குழிகள் ஆக்குவர் (பொள்ளுதல் = குழி இடுதல்). இதற்கு ஆட்டுக்கல் பொளிதல் என்று பெயர். ஆட்டுரல் குழி, குழவிக்கல் என இரண்டுக்குமிடைப்பட்ட இடைவெளியில் உள்ள இடத்தில் அரைக்கப்படும் பொருள் இருக்கும். குழவிக்கல்லை சுற்றும் பொழுது உணவுப் பொருள் அரைபடும். ஆட்டுக்கல்லும் குழவியும் பொளிவதால் உராய்வு நன்றாக ஏற்படுவதால், பொருட்கள் நன்றாக அரைபடும். மின்சார ஆட்டுரல் வந்த பின்பு இந்த வகையான ஆட்டுரல்களின் பயன்பாடு குறைந்து போய் விட்டது.

கல்லரிக்கும் சட்டி என்பது அரிசியில் அல்லது பிற தானியங்களில் இருந்து

கல்லைப் பிரிக்கப் பயன்படும் சட்டி ஆகும். இது பிரித்தெடுத்தலுக்கு உதவியாக வரிசையாகப் படிகளைக் கொண்டிருக்கும்!

பிட்டுக் குழல் என்பது பிட்டு அவிக்கப் பயன்படும் குழல் ஆகும். இது மூங்கிலிலோ அல்லது

அலுமினியத்திலோ செய்யப்படும். இதன் அடியில் ஆவி போகக் கூடியவாறு ஓட்டை துளைக்கப்பட்ட அச்சு இருக்கும். இந்தப் குழலை பிட்டுச் சட்டி மீது வைத்து பிட்டு அவிப்பர்.


இடியப்ப இயந்திரம் என்பது இடியப்பங்களை புழிந்து தரம் ஒரு இயந்திரம் ஆகும். தயாரிக்கப் பட்ட மாவை இட்ட பின்

இந்த இடியப்ப இயந்திரங்கள் உதவியுடன் மிக வேகமாக, இலகுவாக இடியப்பங்களை உற்பத்தி செய்யக் கூடியதாக உள்ளது. இதனா இது புகலிட நாட்டு தமிழர் உணவகங்கள் பலவற்றிலும் பயன்படுத்தப் படுகிறது. மிக மலிந்த விலையில் இடியப்பம் விற்பனை செய்ய இந்த இடியப்ப இயந்திரங்கள் காரணம் ஆகின.

 

இடியப்ப உரல் அல்லது முறுக்கு உரல் எனப்படுவது இடியப்பம், முறுக்கு, அச்சுப் பலகாரங்கள் போன்ற உணவுகள் செய்யப் பயன்படும் கருவி ஆகும். இது மரத்தால் செய்யப்பட்டடு, உலோக அச்சுக்களைக் கொண்டிருக்கும். உணவு வகையைப் பொறுத்து, அச்சு வடிவங்கள் மாறும். உணவின் மாவை இவற்றுள் போட்டு, புழிந்து அந்த உணவுகளை செய்து, பின்னர் அவித்து எடுப்பர்.


அச்சுக்கள்

  • இடியப்ப அச்சு
  • முறுக்கு அச்சு
  • மகிழம்பூ அச்சு
  • ஓமப்புடி அச்சு
  • நாடா அச்சு
  • பல்லுப் பதிந்த அச்சு
  • ஜிலோபி அச்சு
முறம் (அல்லது சுளகு, சொலவு) என்பது தானியங்களை உமி, கல் போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்க தமிழகத்தின் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவி. இவ்வாறு பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். விவசாயிகளின் இல்லங்களில் இது பரவலாக காணப்படும். மூங்கில் பட்டைகொண்டு முடையப்பட்டு விளிம்புகள் கட்டப்பட்ட முறம், அடிப்பகுதியில் அகண்டும் நுனிப்பகுதியில் குறுகியும் ஒரு முக்கோண வடிவில் இருக்கும். இலங்கையில் பனை ஈர்க்கு கொண்டு முடையப்பட்ட சுளகுகள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. சில சமயங்களில் நெடுநாட்கள் பயனிலிருப்பதற்காக முறத்தின் அடிப்புறம் பசுவின் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும்.

முறத்தை பயன்படுத்த நல்ல பயிற்சி வேண்டும். முறத்தில் இருக்கும் கல்/உமி கலந்த தானியத்தை மெதுவாக தட்டி/வீசி எழுப்பி அதை மீண்டும் பிடிக்க வேண்டும். தானியத்திற்கும், கலப்பு பொருளுக்கும் உள்ள எடை வேறுபாட்டால் அவை வேவ்வேறு இடங்களில் விழும். இதை தொடர்ந்து செய்யும்பொழுது தானியம் ஒரு புறமாகவும் கலப்பு பொருள் ஒரு புறமாகவும் பிரியும்.

பண்டைய தமிழ் சமூகத்தில் முறம்

 மூற்கலத்தில் முறத்தைக்கொண்டு நெல்லை ஒரு தமிழ்ப் பெண்மணி தூற்றிக்கொண்டிருந்த பொழுது, புலி ஒன்று தாக்க வந்ததாகவும், அந்த மங்கை புலிக்கு அஞ்சாமல் முறத்தைக் கொண்டே அதை விரட்டியதாகவும் ஒரு கதை வழக்கத்தில் உள்ளது. தமிழ்ப் பெண்களின் பயமின்மைக்கு எடுத்துக்காட்டாக இக்கதையை கூறுவர். இக்கதையின் நினைவாக புலியை முறம் கொண்டு ஒரு தமிழ் மங்கை விரட்டுவது போன்ற ஒரு சிற்பத்தை மாமல்லபுரத்தில் தமிழக அரசு நிறுவியுள்ளது.  
உரல் என்பது அரிசி முதலான தானியங்களை குற்ற மற்றும் இடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாள ஒரு அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஒரு அடிவரையான ஆழத்தில் ஒரு குழி போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தக்குழிக்குள் அரிசி முதலான தானியங்களை இட்டு உலக்கையைப் பாவித்து குற்றுவார்கள். இப்படிச் செய்வதால் அதற்குள் இடப்பட்ட தானியம் துகள்களாக்கப்பட்டு, பின்னர் பொடியாக்கப்படும்.

உரலில் தானியங்களை பொடியாக்குவதுபோல் சில தானியங்களின் வெளிப்புற உமியை நீக்குவதற்கும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, நெல் மணிகளை உரலில் இட்டு சிறிதுநேரம் குற்றுவதன் மூலம் அரிசியும் உமியும் வெவ்வேறாகப் பிரிந்துவிடும். அதன் பின்னர் சுளகு (முறம்) பயன்படுத்தி புடைப்பதன் மூலம் அரிசியையும் உமியையும் வெவ்வேறாக்குவர்.
பண்டைய தமிழர் வாழ்க்கையில், இயந்திரங்களின் வரவின் முன்னர் இந்த உரல் வீடுகளில் அன்றாடம் பாவிக்கப்படும் ஒரு பொருளாக இருந்து வந்தது. இன்றும் சிற்றூர்களில் சிறு அளவில் நெல் குத்தவும், பலகாரங்கள் செய்வதற்காக தானியங்களை இடிப்பதற்கும் உரல் பயன்படுத்தப்படுகிறது. இப்படி உரலில் இடித்து உருவாக்கப்படும் மாவு கைப்பக்குவம் மிகுந்து சுவையான பலகாரங்களை செய்வதற்கு உதவுவதாகக் கருதுகின்றனர்.

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது.
திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம். இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும்.
கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும். சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும்.
திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள். தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்.

சும்மாடு
தலையில் சுமை தூக்கும் போது தலையில் கனம் அழுந்தாமல் இருக்க, துணியை உருட்டி தலையில் வைத்து அதன் மேல் சுமையை வைப்பர். இவ்வாறு உருட்டி வைக்கப்படும் துணி சும்மாடு என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், பெண்கள் தங்கள் புடவைத் தலைப்பையும் ஆண்கள் தங்கள் துண்டையும் சும்மாடாகப் பயன்படுத்துவர். சங்க இலக்கியங்களான கலித்தொகையிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் இது சுமடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது


சுமைதாங்கி என்பது, சுமைகளைச் சுமந்து செல்வோர் அதனைப் பிறர் துணையின்றிச் எளிதாக இறக்கி வைப்பதற்காகக் கட்டப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். சுமைதாங்கி பொதுவாகப் பாதை ஓரங்களில் அமைக்கப்படுகின்றது.
பல வகை உந்துக்களும், ஈருருளிகளும், இன்னும் பல்வேறு வகையான தன்னியக்க வண்டிகளும் அறிமுகப்படுத்தப்படுமுன், பெரும்பாலான மக்கள் பொருட்களைத் தலைச் சுமையாகவே இடத்துக்கிடம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. உற்பத்திப் பொருட்களைத் தொலைவிலுள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்வோரும், சந்தைகளில் வாங்கிய பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்வோரும் எனப் பல வகையானோர் நெடுந்தூரம் சுமைகளைச் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. தொலைதூரப் பயணம், யாத்திரை செல்பவர்களும், வேண்டிய பொருட்களைக் கால்நடையாகவே சுமந்து செல்வதுண்டு. சிறிது இளைப்பாறுவதற்காகச் சுமைகளை இறக்கி வைக்கவும் பின்னர் திரும்பவும் தூக்கவும் பிறர் துணை தேவைப்படும். இத் துணை எல்லா நேரங்களிலும் கிடைக்கும் என்பதில்லை. இவ்வாறான பிரச்சனையின்றித் தனியாகவே சுமைகளை இறக்கவும், திரும்ப அதிக எத்தனம் இன்றித் தூக்கியேற்றவும் வசதியாக உயரமான மேடை போல் அமைக்கப்படும் அமைப்பே சுமைதாங்கியாகும்.
சுமைதாங்கி, ஏறத்தாழ நாலரை அடி (1.2 மீட்டர்) உயரமும், ஒன்றரை தொடக்கம் 2 அடிவரை தடிப்புக் கொண்டதுமான ஒரு சிறிய சுவர் போன்ற கட்டுமானம் ஆகும். இதன் மேற்பகுதி ஒரே மட்டமாக இல்லாமல், இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு மட்டங்களில் அமைந்திருக்கும். சுமைகளைச் சுமப்பவர்கள் தலையில், அல்லது தோள்களில் சுமப்பார்கள். அதனால் இறக்கி வைப்பதற்குரிய மேடை, தலை உயரத்துக்கும், தோள் உயரத்துக்கும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

அமைவிடம்
சுமைதாங்கிகள், பாதைகளுக்கு அண்மையில் அமைக்கப்படுகின்றன எனினும், பொதுவாக, இளைப்பாறுவதற்கான இடங்களில் வேறு வசதிகளுடன் சேர்த்தும் இவை அமைக்கப்பட்டன. சத்திரங்கள், வழிப்போக்கர்கள் நீர் அருந்துவதற்காகவும், கைகால் கழுவிக் கொள்வதற்காகவும் அமைக்கப்பட்ட குளங்கள், கிணறுகள், ஆடு, மாடுகளுக்கு நீர் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகள், நிழல் தரும் மரங்கள், சிறிய கோயில்கள் ஆகியவற்றுடன் ஒரு கூறாகச் சுமைதாங்கியும் அமைவதுண்டு.

தற்காலத்தில், சுமைதாங்கிகள் பெரும்பாலான பகுதிகளில் மறக்கப்பட்ட ஒரு காலகட்டத்தின் எச்சங்களாகவே இருக்கின்றன. வசதிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சுமைதாங்கிகள் தேவையற்றவை ஆகிவிட்டன. எனினும் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இவற்றுக்கான தேவை இருந்தது. இதனால், முக்கியமான இடங்களில் சுமைதாங்கிகளை அமைப்பது அறச் செயலாகக் கருதப்பட்டது.

சுமைதாங்கிகளை அமைப்பதில் உள்ள குறியீட்டு அம்சமும் குறிப்பிடத் தக்கது. கருக்கொண்ட பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. பிறரது சுமைத் துன்பத்தைப் போக்குவதன் மூலம் அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் இதனால் நீங்கும் என்பது நம்பிக்கை.

 

 
 அரைஞாண்

அரைஞாண்- ஆண்களுக்கானது
ஒட்டியாணம்
தண்டட்டி
பாம்படம் அணிந்த மூதாட்டி
 ஆழ கரண்டி
கொலுசு
பாதாள கரண்டி
ஏத்து
கிணறு
சீம் பால்
உருளை வாளி............................... தொலைதூரப் பயணம் தொடரும் 
இறைவன் நாடினால் ..........................................அன்புடன்
அஷ்ரப் அலி (எதுமலை)


நம் வாழ்கையில் காணமல் போன சில பொருட்கள்-பாகம் -2

1 comment: