Monday, February 13, 2012

வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான,நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.
 
யார் தொடங்கலாம்?
  • நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள்.
  • மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள்
நன்மைகள்
  • ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
  • குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
  • வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
  • ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
  • அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3குட்டிகளை ஈனுகிறது
  • நல்ல எரு கிடைக்கிறது.
  • வருடம்முழுவதும்வேலை
வெள்ளாட்டு இனங்கள்

சிறந்த இந்திய இனங்கள்
ஜம்நாபாரி - எட்டாவா மாநிலம், உ.பி
பீட்டல் - பஞ்சாப்
பார்பரி - உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்
தெல்லிச்சேரி மற்றும் மலபாரி - வடகேரளா
சுர்தி - குஜராத்
காஷ்மீரி - ஜம்மு காஷ்மீர்
வங்காள ஆடு - மேற்கு வங்காளம்
இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்
அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன்

வெள்ளாடு இனங்களை தேர்வு செய்தல்
 

ஜமுனாபாரி.
  • நல்ல உயரமானவை
  • காதுகள் மிக நீளமனவை
  • ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
  • கிடா 65-85 கிலோ பெட்டை - 45-60 கிலோ.
  • பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
  • 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
  • தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்
தலைச்சேரி / மலபாரி
  • வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
  • 2-3 குட்டிகளை போடும் திறன்
  • கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ.
போயர்
  • இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
  • வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
  • கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.
  • குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்
வெள்ளாடுகளை தேர்வு செய்தல்
பெட்டை ஆடுகள்
2-3 குட்டிகள் ஈனும் திறன்
6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை

கிடாக்கள்
தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்
2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டிலிருந்து
தீவனப் பாரமரிப்பு
 
  • வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
  • கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
  • தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
  • ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30ஆடுகள் வரை வளர்க்கலாம்.
  • அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.
குட்டி தீவனம்
வளரும் ஆட்டு தீவனம்
பால் கொடுக்கும் ஆட்டு தீவனம்
சினை ஆட்டு தீவனம்
மக்காசோளம்
37
15
52
35
பருப்பு வகைகள்
15
37
---
---
புண்ணாக்கு
25
10
8
20
கோதுமை தவிடு
20
35
37
42
தாது உப்பு
2.5
2
2
2
உப்பு
0.5
1
1
1
மொத்தம்
100
100
100
100
  • குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
  • வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
  • சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
  • தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
  • அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்

இனபெருக்கப் பாரமரிப்பு.
  • இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
  • வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  • பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  • குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும்.அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
  • சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
  • சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும்.மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
  • சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
  • சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும்
  • சினை காலம் 145-150 நாட்கள்.
குடற் புழு நீக்கம்
  • ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.
  • சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.
  • சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
  • குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்

தடுப்பூசிகள்
  • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6வாரத்திற்கு முன்னும், இனபெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போடவேண்டும்.
  • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8வது வாரமும், பிறகு 12 வது வாரமும் போடவேண்டும்.
  • கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்.

கொட்டகை பாரமரிப்பு
1.ஆழ்கூள முறை
  • தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.
  • இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.
  • இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்
  • ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்

2.உயர் மட்டதரை முறை

  • தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
  • ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்




வளர்ப்புமுறைகள்
  
1.மேய்ச்சலுடன்கூடிய கொட்டகைமுறை.
  • மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.
2.கொட்டகைமுறை.
  • வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
  • கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்
வெள்ளாடு காப்பீடு திட்டம்
 
  • நான்கு மாதம் வயது முதல் வெள்ளாடுகளை பொது காப்பீடு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யலாம்.
  • விபத்து மற்றும் நோயினால் இறந்தால் காப்பீடு தொகையை கோரலாம்.

வேளாண் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள்..........................தொடரும்