Monday, February 20, 2012

சூடான சூப் -முல்லாவின் கதைகள்

ஒரு தடவை முல்லா நண்பர்கள் பலருக்கு மத்தியில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்.

நண்பர்கள் கூட்டத்தில் வெளியூரிலிருந்து வந்த சிலரும் இருந்தார்கள் .

நண்பர்களில் ஒருவர் எழுந்த வெளியூரிலிருந்து வந்திருந்தவர்களுக்கு முல்லாவை அறிமுகப்படுத்தினர்.

முல்லாவைப் பற்றி அளவுக்க அதிகமாகப் பாராட்டிப் பேசிய நண்பர் முல்லாவுக்குத் தெரியாத விஷயமே உலகத்தில் இல்லை என்றார்.

அதைக் கேட்டு பிரமிப்பு அடைந்த வெளியூர் நண்பர்களில் ஒருவர் முல்லாவுக்கு குந்தீஷ் மொழி தெரியுமா? என்று கேட்டார்.

முல்லாவுக்குக் குந்தீஷ் மொழி தெரியாது. அந்த மொழியில் இரண்டொரு சொற்கள் தான் தெரியும். ஆனால் தனது அறியாமைக் காண்பித்துக் கொள்ளக் கூடாதே என்று குந்தீஷ் மொழி தெரியும் என்றார்.

குந்தீஷ் மொழியில் எதாவது ஒரு சொற்களை கூறுங்கள், கேட்போம் என்றனர் வெளியூர் நண்பர்கள்.

குந்தீஷ் மொழியில் ஆஷ் என்றால் சூடான சூப் என்று பொருள் என்றார் முல்லா.

ஆறின சூப் என்பதற்கு குந்தீஷ் மொழியில் என்ன சொல்வார்கள்? என்று ஒருவர் கேட்டார்.

தமது குட்டு வெளிப்பட்டு விடும் போலிருக்கிறதே என்று முல்லாவுக்கு தர்மசங்கடமாகி விட்டது.

உடனே அவர் சுதாரித்துக் கொண்டார்.

நண்பரே குந்தீஷ் மொழியினர் எப்போதும் சூடான சூப்பைத்தான் சாப்பிடுவார்கள். ஆறின சூப்பே அவர்களுக்குப் பிடிக்காது. அதனால் அவர்கள் மொழியில் ஆறின சூப் என்பதற்கு எந்தச் சொல்லும் கிடையாது என்று கூறி சாமர்த்தியமாகச் சமாளித்தார்.

No comments:

Post a Comment