Wi-Fi logo |
Wi-Fi என்பது கம்பியில்லாத் தொடர்பு வசதி கொண்ட கருவியின் வணிகக்குறியீடு ஆகும். இத்தொழில்நுட்பம் இன்று பரவலாக பல இடங்களில் உபயோகத்தில் இருந்து வருகிறது. இதன் விரிவாக்கம் - வயர்லெஸ் ஃபிடெலிடி - Wireless Fidelity - என்பதாகும். இத்தொழில் நுட்பம் Wi-Fi Alliance என்பதால் உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இத்தொழில் நுட்பமானது
Radio, Television, Computer, Cell Phone
என பலவகைப்படுத்தப் பட்ட சாதனங்களில் பல்வேறு அலைவரிசைகளில் உபயோகப்
படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
Wi-Fi Signal logo |
இத்தொழில் நுட்பம் மூலம் Computers, Printers, Laptop
மற்றும் Cell Phone போன்றவைகளுக்கிடையே Wireless முறையில் தொடர்பை ஏற்படுத்திட முடிகிறது.
இணைய பயன்பாட்டிற்காக, Wi-fi Access Point -என்ற சேவையை, பல கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் அமைத்திருப்பது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Wi-Fi access point |
Modem |
மேலும் இணைய
இணைப்புக்காக பயன் படுத்தப்படும் Modem களில், கூட, Wi-Fi Router பொருத்தப் பட்டுத் தான் விற்பனைக்கு வருகின்றன. இவ்வகை Modem -களை தான்
சிறு நிறுவனங்களிலும், வீடுகளிலும் வாங்கி
பயன்படுத்துகிறோம்.
இந்திய
அளவில், Mysore -நகரம் தான்
(2004
-லில்) Wi-Fi -
ஐ பெற்ற முதல் நகரமாகவும் (India's first Wi-Fi enabled city); உலகளவில்
ஜெருசலத்துக்கு அடுத்து இரண்டாவது
நகரமாகவும் (second
in the world after Jerusalem) அறியப்படுகிறது.
USB wireless adapter |
சமீப
காலங்களில் USB wireless
adapter -கள் விற்பனைக்கு வந்து விட்டதால், இவைகளையும் வாங்கி Computer -ரில்
செருகி இணையத்தை பயன்படுத்தி வருவதும் அதிகமாகி உள்ளது.
இத் தொழில் நுட்பம் சிறந்ததாக கருதப்பட்டாலும் சில
பாதுகாப்பு குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. Hacker -கள் இவ்வகையான Network
-களை எளிதாக ஆக்கிரமிப்பு செய்து பயன்பாட்டாளர்களின் தகவல்களை திருடி,
நாசவேலைகளில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் நிரம்பவே இருக்கிறது. இந்நெட்வொர்க்கின்
எல்லைக்குள்ளாக இருந்தும், கூட, அந்நெட்வொர்க்கை Hack செய்வது சுலபம். அப்படி Hack
செய்வதற்கான Software -களும் இணையத்தில் இலகுவாக கிடைப்பதென்னவோ
உண்மை.
போலியாக,
அதாவது தற்காலிக முறையில், Wi-Fi
நெட்வொர்க்கை உருவாக்கியும் அல்லது எதேச்சையாக கிடைக்கும் Wi-Fi
நெட்வொர்க்கிலும் புகுந்து அண்டை வீட்டு
கணினிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்கள் திருடுவது போன்ற பல
வழிமுறைகளும் கையாளப்படுகின்றன.
ஆக, Wi-Fi நெட்வொர்க்குகளை, எவரும் அணுக முடியாமல் தடுக்க, அதன் Rooter -ரில் Password -ஐ சற்று கடினமானதாக அமைப்பது நல்லது. அத்துடன், நெட்வொர்க்கிற்கான Security Setup -ஐயும் செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் அவசியம். சிறு நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் Modem -களுக்கு இவை பொருந்தும்.
Desk
Top, Lap Top, Tablet PC, Printer, Smart Phone போன்றவைகளை, எப்பொழுதும்
Wi-Fi
நெட்வொர்க்கிலேயே
வைத்திருக்க
விரும்பினால், அதற்கு ஏற்றாற்போல்
Filter -களை அமைத்துக்கொள்வது நல்லது. திறந்தநிலை நெட்வொர்க்குகளை தானாகவே
இணைக்கின்ற (Automatic
Access) தானியங்கி
அமைப்புகள் செயற்பாட்டில்
இருந்தாலும் அவைகளின் செயற்பாட்டையும் நிறுத்தி வைப்பது நலம் பயக்கும். அத்துடன்,
நெட்வொர்க்குகளுக்கு அவசியமான Firewall போன்ற கூடுதல் பாதுகாப்பு வளையங்களையும்
ஏற்படுத்துதல் அத்தியாவசியமானது.
No comments:
Post a Comment